Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
பிரீமியம் ஸ்டோரி
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

படம்: அ.குரூஸ்தனம்

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

படம்: அ.குரூஸ்தனம்

Published:Updated:
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
பிரீமியம் ஸ்டோரி
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, என் அன்பான வணக்கம்.

நான் எழுத்தாளர் ரவிக்குமார் பேசுகிறேன்.


தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கும் தலைவர்கள், தங்களை விற்பனைப்பொருளாக விளம்பரம் செய்துகொள்கிறார்கள். `இந்த அணுகுமுறை தமிழக அரசியலுக்குப் புதிது. இந்தத் தேர்தல் டெக்னிக் நிச்சயம் வெற்றிபெறும்' எனப் பலவிதங்களில் உதாரணங்களை முன்வைக்கிறார்கள். இதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ஒரு தலைவர் தன்னை ஒரு விற்பனைப்பொருளாக முன்வைக்கும்போது, வாக்களிக்கும் மக்களை ஒரு நுகர்வோராகத்தான் பார்க்கிறாரே தவிர, குடிமக்களாகப் பார்ப்பது இல்லை. இதுபோன்ற மாற்றம் நம் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது இல்லை. இந்த அரசியல் விளம்பர மோகம் குறித்து, விரிவாக விளக்குகிறேன்.

நாம் மன்னராட்சி காலத்தைத் தாண்டி மக்களாட்சி காலத்துக்கு வந்து, சில நூறு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மன்னராட்சி மனநிலையில் இருந்து நாம் இன்னும் வெளியே வரவில்லை. தலைவருக்கு மலர் கிரீடத்தை அணிவிப்பதும், வீரவாள் அல்லது செங்கோல் தருவதும், மேடையில் பேசும்போது ‘அரியணை ஏறுவோம்’ எனச் சொல்வதும், விளம்பரங்களில் தங்களை ராஜாவாகவும் ராணியாகவும் சித்தரித்துக்கொள்வதும் மன்னர் காலத்து மனோபாவங்கள். இப்படி  தனிமனிதனைத் துதிபாடுவதால் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் என்ன தெரியுமா?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`மக்களுக்கு இலவசங்கள் தரக் கூடாது' என உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு, `எந்தக் கட்சியையும் இப்படி நிர்பந்திக்க முடியாது' எனத் தள்ளுபடி ஆனது. எப்போதும் எலெக்ட்ரானிக் பொருட்களையே இலவசமாகக் கொடுக்கும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது. மின்சாரம் குறித்த எதிர்காலச் சிந்தனைகள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக உள்ளது. இந்த இலவசப் பொருட்களால் நாமும் ஒருவகையில் பாதிக்கப்படுகிறோம்... எப்படி?

இன்று பலரும் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவது சமூக ஊடகத்தில்தான். தங்களது எண்ணங்களை, வயது வித்தியாசம் இன்றி அனைவரும் முன்வைக்கிறார்கள். தலைவர்கள் சீரியஸாகச் சொல்லும் பல கருத்துக்களை, அடுத்த நொடியே காமெடிக் காட்சிகளுடன் ஒப்பிட்டுக் கலாய்க்கிறார்கள். இது அவர்களிடம் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம். இந்த ஆயுதத்தை அவர்கள் தேர்தலில் எப்படிப் பயன்படுத்தப்போகிறார்கள் என்பது, வாக்குகளின் முடிவில்தான் தெரியும். ஆனால், அரசியல் கட்சிகளும் பிரபலங்களும் இதற்கு மீம்ஸ் போட்டு அந்த இளைஞர்களைக் கவர்கிறார்கள் எனச் சொன்னால், அது தவறு. காரணம்... சொல்கிறேன்.

10-3-16 முதல் 16-3-16 வரை 044-66802911 என்ற எண்ணில் அழையுங்கள். புதியன பேசுவோம்!

அன்புடன்,
ரவிக்குமார்