Published:Updated:

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

T20 உலகக்கோப்பை டிரெய்லர்பு.விவேக் ஆனந்த்

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

T20 உலகக்கோப்பை டிரெய்லர்பு.விவேக் ஆனந்த்

Published:Updated:
பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

20/20 உலகக்கோப்பையால் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது சிக்ஸர் ஃபீவர். முதன்முறையாக உலகின் தலைசிறந்த அணியாக, சொந்த மண்ணில் இந்த உலகக்கோப்பையை எதிர்கொள்ளப்போகிறது இந்தியா. ஆனால், 20/20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் எதுவும் இதுவரை கோப்பையை வென்றது இல்லை என்பதுதான் வரலாறு.

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

இந்திய அணி இடம்பெற்றிருக்கும் `பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் என முக்கிய அணிகள் எல்லாமே இருப்பதால் இந்த முறை பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது!

இலங்கை

டி-20 உலகக்கோப்பையில் செம கன்சிஸ்ட்டன்ட் அணி இலங்கை. நடப்பு சாம்பியன். மூன்று முறை இறுதிப்போட்டிகளில் விளையாடியிருக்கிறது. 2014-ம் ஆண்டில் மலிங்கா தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, இலங்கை அணியில் இருந்த ஜெயவர்தனேவும் சங்ககாராவும்  இப்போது இல்லை. ஆறு மாதங்களாக இலங்கை சொதப்பல் ஆட்டம் ஆடுவதால், கடந்த உலகக்கோப்பையில் விளையாடிய ஏழு வீரர்களை மீண்டும் அணிக்குள் அழைத்து வந்திருக்கிறார்கள். மலிங்கா, மேத்யூஸ், தில்ஷான், பெரேரா, ஹெராத் என சீனியர் வீரர்கள் இருந்தும், நடந்துமுடிந்த ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்குள்கூட இலங்கையால் நுழைய முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானவை என்பதும், இலங்கை அணி இடம்பெற்றிருக்கும் பிரிவில் சுழற்பந்துக்குத் தடுமாறும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றிருப்பதுமே இலங்கைக்கு ஆறுதல்.  நட்சத்திர வீரர்கள் ஜொலிக்கும்பட்சத்தில் இலங்கை ரேஸில் முன்னேறும்.

இளசு புதுசு: டசன் ஷனகா, துஷ்மந்தா சமீரா.

இங்கிலாந்து

யாருமே எதிர்பார்க்காதபோது 2010-ம் ஆண்டு உலகக்கோப்பையை அசால்ட்டாகத்  தட்டிச்சென்றது இங்கிலாந்து அணி. அப்போது கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த பீட்டர்சன், ஃபிட்டாக இருந்தும் அவரை அணியில் சேர்க்க மறுத்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம். ரூட், பட்லர், ஹேல்ஸ், மோர்கன் என அதிரடி வீரர்கள் அணியில் இருந்தாலும், சரசரவென கார்ட்ஸ்போல விக்கெட்டுகள் சரியும் கெட்டபழக்கம் இருப்பதால், இங்கிலாந்து அணியில் எப்போது என்ன நடக்கும் எனக் கணிக்க முடியாது. இந்திய மண்ணில் இடதுகை சுழற்பந்து வீச்சு நன்றாக எடுபடும் என்பதால், இங்கிலாந்து அணி அக்ரசிவ் பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதிர்ஷ்டமும் திறமையும் கைகூடினால் மட்டுமே இங்கிலாந்து அணியால் உலகக்கோப்பையை ஒன்ஸ்மோர் வெல்ல முடியும்.

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

இளசு புதுசு: ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ்.

பாகிஸ்தான்

மீண்டும் அஃப்ரிடி தலைமையில் களம் இறங்குகிறது பாகிஸ்தான். ஷோயப் மாலிக், அஃப்ரிடி, ஹஃபீஸ், உமர் அக்மல் பேட்டிங்குக்கு பலம்சேர்க்க, பெளலிங்கில் வஹாப் ரியாஸ், ஆமீர், இர்ஃபான் என ஃபுல் ஸ்விங்கர்கள் இருக்கிறார்கள். இதுவரை நான்கு முறை  20/20 உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடி, இரண்டு முறை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று, ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது பாகிஸ்தான். ஆனால், இந்த முறை பாகிஸ்தான் இடம்பெற்றிருக்கும் பிரிவில் கடுமையான மோதல் இருக்கும் என்பதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கே பாகிஸ்தான் பயங்கர உழைப்பைக் கொட்டவேண்டும். ஆனால், இந்திய மண்ணில் உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைக்கும் வெறியில் இருக்கிறது பாகிஸ்தான்.

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

இளசு புதுசு: சர்ஃபரஸ் அஹமது, சர்ஜீல் கான்.

நியூஸிலாந்து

சீனியர்கள் யாரும் இல்லாமல் இளம் பட்டாளத்தோடு களம் இறங்கியிருக்கிறது நியூஸிலாந்து.  மார்ட்டின் கப்டில், வில்லியம்சன், ராஸ் டெய்லர், காலின் முன்ரோ, கோரி ஆண்டர்சன் என அரை டஜன் டி-20 ஸ்பெஷலிஸ்ட்களைக் கொண்டிருக்கிறது நியூஸிலாந்து.  ஆனால், பெளலிங்கில் நியூஸிலாந்து கொஞ்சம் வீக் என்பதோடு நியூஸிலாந்து இந்தியாவுக்கு விளையாட வந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன என்பது அதன் மைனஸ். மெக்கல்லம் ஓய்வுக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் வில்லியம்சன், பெளலர்களை  எப்படிப் பயன்படுத்தப்போகிறார் என்பதில்தான் அணியின் வெற்றி இருக்கிறது.

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

இளசு புதுசு: இஷ் சொதி, காலின் முன்ரோ.

ஆஸ்திரேலியா

இதுவரை ஐந்து முறை ஒருநாள் உலகக்கோப்பையை வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணியின் நிறைவேறாத ஆசை டி-20 உலகக்கோப்பை. ஒவ்வொரு முறையும் வலுவான வீரர்கள் அணியில் இருந்தும் இதுவரை ஒரே ஒருமுறைதான் இறுதிப்போட்டிக்கே தகுதிபெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா. ஆனால், இந்த முறை தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். ஃபின்ச், வார்னர், வாட்சன், மேக்ஸ்வெல், ஸ்மித், ஜேம்ஸ் ஃபால்க்னர் என  ஆஸி-யின் நட்சத்திர வீரர்கள் அனைவருக்கும் இந்தியாவில் ஐ.பி.எல்-லில் விளையாடிய அனுபவம் உண்டு என்பது பெரிய பலம். ஆனால், சேஸிங்கில் வீக். கடந்த ஆறு ஆண்டுகளில் ஒருமுறைகூட 160 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை, ஆஸ்திரேலிய அணி சேஸ் செய்தது இல்லை. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சும் டி-20 போட்டிகளில் சுமாராகத்தான் இருக்கும். ஆனால், இந்த முறை எல்லா வீரர்களும் ஃபுல் ஃபார்மில் இருப்பதால், உலகக்கோப்பையை வெல்வோம் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

இளசு புதுசு: உஸ்மான் கவாஜா, ஆடம் ஜாம்பா, அஷ்டன் அகர்

வெஸ்ட் இண்டீஸ்

ஐ.பி.எல்., பிக்பேஷ், பி.சி.எல்., பி.பி.எல் என உலகில் 20/20 போட்டிகள் எங்கு நடந்தாலும், அதில் விளையாடும் உலகின் மிகச் சிறந்த டி-20 வீரர்கள் அனைவரையும்கொண்ட பவர்ஃபுல் அணி வெஸ்ட் இண்டீஸ். 1979-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக்கோப்பைகளில் அடங்கிப்போயிருந்த வெஸ்ட் இண்டீஸ் 2012-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையை வென்று மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தது. அதேபோல் இப்போதும் வரலாறு படைக்கும் ஆர்வத்தில் இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். 2012-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்த 10 பேரை மீண்டும் அணியில் சேர்த்திருக்கின்றனர். கெயில், பிராவோ, பொல்லார்ட், சிம்மன்ஸ் என பந்துவீச்சாளர்களைத் தெறிக்கவிடும் பேட்ஸ்மேன்களும், ரஸ்ஸல், சமி போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்களும், சாமுவேல் பத்ரி, சுனில் நரீன் என சிறந்த பந்துவீச்சாளர்களையும்கொண்ட பலம்வாய்ந்த அணி. ஆனால், இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம் என்பதுதான் மைனஸ்.

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

இளசு புதுசு: கார்லஸ் பிராத்வொயிட், ஜேசன் ஹோல்டர்.

தென்ஆப்பிரிக்கா

முன் எப்போதையும்விட டி-20 போட்டிகளில் மிக வலுவான அணியாக உருவெடுத்திருக்கிறது தென்ஆப்பிரிக்கா. கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணியை, இந்திய மண்ணிலேயே  தோற்கடித்து டி-20 தொடரை வென்றது. டிவில்லியர்ஸ், ஆம்லா, டி காக், டூபிளசிஸ்,  மில்லர் என செம ஸ்ட்ராங் பேட்டிங் வரிசையையும், இம்ரான் தாகீர், ஸ்டெயின், ரபடா என அக்ரசிவ் பௌலிங் வரிசையையும், டுமினி, டேவிட் வைஸ், கிறிஸ் மோரிஸ் அதிரடி ஆல்ரவுண்டர்களையும் கொண்ட ஃபுல் பேக்கேஜ் அணி தென்ஆப்பிரிக்கா. தொடக்க வீரராகக் களம் இறங்கும் டிவில்லியர்ஸ், முதல் ஓவரில் இருந்தே பந்தை சிக்ஸருக்கும் பௌண்டரிக்கும் விரட்டுவார் என்பதால் தென்ஆப்பிரிக்கா சேஸிங்கில் கில்லியாகியிருக்கிறது. ஆனால், உலகக்கோப்பைக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும்தான் முன்ஜென்மப் பகை இருக்கிறதே. ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் மட்டும் அல்ல, 20/20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளிலும் இதுவரை ஒருமுறையும்கூட தென்ஆப்பிரிக்கா தகுதிபெற்றது இல்லை. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையைத் தவறவிட்டதைப்போல்  இந்த முறை விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது தென்ஆப்பிரிக்கா. மிக முக்கியமான போட்டிகளில் பதற்றத்தைத் தவிர்த்து, பக்குவமாக விளையாடினால் கோப்பை நிச்சயம்.

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

இளசு புதுசு: கிரிஸ் மோரிஸ், ககிசோ ரபடா, ரிலே ரஸ்ஸவ்.

இந்தியா

பந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்!

அசத்தும் பேட்ஸ்மேன்கள், துடிப்பான இளம் பெளலர்கள், பறக்கும் ஃபீல்டர்கள் என  20/20 கிரிக்கெட்டில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது இந்தியா. ரோஹித், தவான், ரஹானே, கோஹ்லி என பேட்டிங் ஸ்பெஷலிஸ்ட்டுகளோடு யுவராஜ், ரெய்னா, பாண்டியா என அதிரடி ஆல்ரவுண்டர்களும் தெறி ஃபார்மில் இருப்பது இந்திய அணியின் பலம். இந்திய மண்ணில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துகள் மாயாஜாலச் சுழலைக் காட்டும் என்பதால், தில்லாக இருக்கிறார் கேப்டன் தோனி. இதுவரை நடந்த அத்தனை டி-20 உலகக்கோப்பைகளையுமே தோனி தலைமையில்தான் இந்திய அணி சந்தித்திருக்கிறது. அதிக அனுபவம்கொண்டவர் என்பதோடு, நெருக்கடியான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய கூல் கேப்டன் என்பதும் இந்திய அணிக்கு பலம். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களையும் பெளன்ஸர்களையும் கண்டால் பதுங்கும் அணியாக இருப்பது இதன் பலவீனம். பெளலிங் சொதப்பினாலும் சிக்கல்தான். அனைத்து வீரர்களுமே ஒன்றுதிரண்டு விளையாடினால்தான், இந்தியா இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும்.

இளசு புதுசு: ஹர்திக் பாண்டியா, ஜாஸ்பிட் பும்ரா, பவான் நெகி.