Published:Updated:

“அவங்க நாங்கதான் ப்ரோ!”

“அவங்க நாங்கதான் ப்ரோ!”
பிரீமியம் ஸ்டோரி
“அவங்க நாங்கதான் ப்ரோ!”

அதிஷா, படம்: பா.காளிமுத்து

“அவங்க நாங்கதான் ப்ரோ!”

அதிஷா, படம்: பா.காளிமுத்து

Published:Updated:
“அவங்க நாங்கதான் ப்ரோ!”
பிரீமியம் ஸ்டோரி
“அவங்க நாங்கதான் ப்ரோ!”

`என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?' என தி.மு.க-வின் பிரசார விளம்பரம் தெறி ஹிட்டான அதே சமயத்தில், `உன் பேரை ரேஷன் கார்டுல பாத்திருப்ப, கல்யாணப் பத்திரிகையில பாத்திருப்ப, ஏன் விசிட்டிங் கார்டுலகூடப் பாத்திருப்ப... வாக்காளர் பட்டியல்ல பாத்திருக்கியா?' என இன்னொரு விழிப்புஉணர்வு விளம்பரமும் மாஸ் ஹிட்டானது. `நம்ம தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு இறங்கி அடிக்க ஆரம்பிச்சிருச்சா?' எனப் பலருக்கும் ஆச்சர்யம். அந்த அதிரடி விளம்பரங்களுக்குப் பின்னால் இருப்பது ஓர் இளைஞர் பட்டாளம். இந்த நிறுவனத்தின் பெயர் ஓ.பி.என். `ஓபன்' என்பதன் சுருக்கம்தான் ஓ.பி.என். (ஓபன் என்பதே சுருக்கமாத்தானே இருக்கு பாஸ்?)

 `என்ன பாஸ்... இன்னைக்கு வீடியோ, மீம்ஸ் எதுவும் கிடையாதா?' என கமென்ட்டில் கேட்டால், `நந்தனம் சிக்னல் பக்கத்துலதான் எங்க ஆபீஸ். வாங்க ப்ரோ, நிறையப் பேசுவோம்’ என உற்சாகமாகிறார்கள். போனால், `இது ஆபீஸா, இல்ல காபி ஷாப்பா?' என டவுட் வருகிறது. உள்ளே நுழைந்த என்னை, அழகான நாய் ஒன்று பாய்ந்து வந்து கட்டிக்கொள்ள, ``பயப்படாதீங்கஜி, இவன்தான் கூஃபீ. எங்க டீம்ல முக்கியமான ஆளு'' என அறிமுகப்படுத்துகிறது ஓ.பி.என் டீம்.

`` `நல்ல விஷயம் பண்றாங்க, குட்'னு உடனே கடந்து போகாம, அதை நாமளும் கடைப்பிடிக்கணும்; கூடவே நாலு பேர்கிட்ட ஆர்வத்தோடு ஷேர் பண்ணணும். இதுதான் எங்க டார்கெட். எங்களுக்கு லைக்ஸ் ரீட்வீட் எல்லாம் முக்கியம் இல்லை. எங்க செய்தி, நிறைய ஷேர் ஆகணும். எங்க ஷேரிங் வலையில நீங்களும் இருக்கீங்க. இப்போ எங்க போஸ்டர்ஸ், மீம்ஸ் எல்லாம் உங்க பத்திரிகையிலயும் வரும்ல?'' என கிரீன் டீ வாசத்தோடு கேட்கிறார் பாலா.

“அவங்க நாங்கதான் ப்ரோ!”

அனைவரையும் ஓட்டு போடச் சொல்லி வலியுறுத்தும் பிரசார வேலைதான் இப்போது ஓ.பி.என் டீமின் முழுநேர வேலை. தினமும் #TN100percent என்கிற ஹேஷ்டேகைப் போட்டு ஆன்லைனில் ட்ரெண்ட் செய்கிறார்கள். கூடவே பேருந்து நிலையங்களில் பேனர்கள், திரையரங்குகளில் படக் காட்சிகள், போஸ்டர்கள் என ஆஃப்லைனிலும் தொடர்கிறது ட்ரெண்டிங்.

``அரசாங்க ஃபார்முலாபடி நாங்களும் டெண்டருக்கு அப்ளை பண்ணினோம். எங்க வொர்க் பிடிச்சுக் கூப்பிட்டாங்க. மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி சார் முதல்லயே சொல்லிட்டாரு... `நம்ம டார்கெட் 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்கள்தான். அவங்களை அட்ராக்ட் பண்ற மாதிரி என்ன வேணா பண்ணுங்க. உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கு’னு. அப்புறம் என்ன... இறங்கி செம குத்துக் குத்தினோம். கொஞ்சம் லைட்டா பயம் இருந்தது ப்ரோ. பட், இப்போ செம வைரலா போறதைப் பார்க்கும்போது ஹேப்பியா இருக்கு'' என்கிறார் பாலா.

இந்த டீமின் சராசரி வயது 24. சமூக வலைதளங்களில் தொடங்கி, வாட்ஸ்அப்பில் அடிக்கிற போஸ்டர்களில் ஆரம்பித்து மீம்ஸ் போடுவது, டப்ஸ்மேஷ் வீடியோ பண்ணுவது, புளூப்பர் வீடியோவையே பயன்படுத்துவது என `பிரேக் தி ரூல்'தான் இந்த `எலெக்‌ஷன் சி.ஈ.ஓ' அணி ஃபாலோ பண்ணுகிற ஒரே ரூல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அவங்க நாங்கதான் ப்ரோ!”

``சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் `பெரிய விசில் அடிங்க...’ பண்ணது எங்க டீம்தான் பாஸ்'' என கெத்துகாட்டுகிறார் மூர்த்தி. இந்த அணியின் தலைமை டிசைனர். அடுத்த வைரல் வீடியோவுக்கு ரஜினி, கமலிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.அநேகமா ஓ.கே ஆகிவிடும் என்கிறார்கள்.

இந்த டீமின் அப்டேட்ஸுடன் தேர்தல் தொடர்பான தகவல்களுக்கு அப்டேட்டடாக இருக்க ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் TNelectionsCEO என்ற ஐ.டி-யைப் பின்தொடரலாம்!