Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

Published:Updated:
ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் த ரெக்கார்டு!

ன்ச் நடிகர் நடித்துள்ள தெறிக்கும் படத்தின் இயக்குநர், நடிகரை ட்விட்டரில் திடீரென அன்ஃபாலோ செய்துவிட்டார். இதனால் கடுப்பான நடிகரின் ரசிகர்கள் இயக்குநரைக் கடுமையாகத் திட்டி வருகிறார்களாம். இதைக் கேள்விப்பட்ட நடிகர் வருத்தப்பட்டாராம்!

• ராஜதந்திரமான நடிகைக்கும், தெலுங்கில் மெகா ஸ்டார் உறவினரான சாய் நடிகருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே காதலாம். இருவர் வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாலும் நடிகை நடிப்பைத் தொடரப் போவதாகக் கூறியதால் நடிகர் அப்செட்டாம்!

• காதல் ஜோடியின் பெயரில் படத்தை எடுத்த இயக்குநர் இயக்கும் அடுத்த படத்தின் கதை ஒரு உதவி இயக்குநருடையதாம். இதனால் பஞ்சாயத்து கூட, 10 லட்சம் தரேன் என இயக்குநர் சொல்ல, உதவி இயக்குநர் அதிகமாகக் கேட்க, வேறு கதையை நான் ரெடி பண்ணிக்கிறேன் எனச் சொல்லிவிட்டாராம் இயக்குநர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஃப் த ரெக்கார்டு!

• பேய்ப் படத்துக்குப் பிறகு நாட்டாமையை இயக்குவதாகச் சொன்ன குறியீடு இயக்குநர், நடிக்கப் போய்விட்டதால் அந்தப் படத்தைத் தள்ளிப்போட்டார். தற்போது நாட்டாமையை டீலில் விட்டுவிட்டு அதே கதையை அவரது சங்க எதிரியான கறுப்பு நடிகரை வைத்து இயக்க ரெடியாகிவிட்டார். இதனால் கடுப்பில் இருக்கிறாராம் நாட்டாமை!

• இரண்டு ஹீரோக்கள் நடித்த கொட்டாவி படத்தினால் உயிர் நடிகருக்கும் லொள்ளு வாரிசுக்கும் இடையில் மனஸ்தாபமாம். இதனால் வாரிசு இருக்கிற இடத்தில் நான் இருக்க மாட்டேன் எனக் கூறி ஹீரோயினோடு சேர்ந்து பிரமோஷன் செய்யப் போனாராம் உயிர் நடிகர்!

• ஒரு டஜன் படங்களில் நடித்து வந்த பப்ளி நடிகை தற்போது கைவசம் படங்கள் ஏதும் இல்லாததால், நிறைய ஓய்வெடுத்தவர் தற்போது ரொம்பவே குண்டாகி விட்டாராம். இப்படியே போனால் இனி பட வாய்ப்பு வராது என்று நினைத்தவர் டயட் கன்ட்ரோல், உடற்பயிற்சி என உடம்பைக் குறைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்!

• நடிக்க ஆசைப்பட்டு கிட்டத்தட்ட ஷூட்டிங் வரை சென்ற ஒல்லி இசையமைப்பாளர் சூப்பர் நடிகரின் அட்வைஸால் அப்போது நடிக்கவில்லை. ஆனால், தற்போது தீவிரமாக நடிக்க முயற்சி செய்து வருகிறாராம். முன்னணி நடிகைதான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளாராம்!