Published:Updated:

FOREIGN சரக்கு!

FOREIGN சரக்கு!
பிரீமியம் ஸ்டோரி
FOREIGN சரக்கு!

FOREIGN சரக்கு!

FOREIGN சரக்கு!

FOREIGN சரக்கு!

Published:Updated:
FOREIGN சரக்கு!
பிரீமியம் ஸ்டோரி
FOREIGN சரக்கு!

2000-ம் ஆண்டு வெளிவந்த ‘பாயும்புலி பதுங்கும் நாகம்’ படத்தின் இரண்டாம் பாகம், கடந்த மாதம் ரிலீஸாகி ஹிட் அடித்தது. இரண்டு பாகத்திலும், ஆக்‌ஷனில் கலக்கியவர் மிச்சல் இயோ. படத்தைப் பற்றி மிச்சலிடம் கேட்டால்கூட, நேபாள் பற்றித்தான் பேசுகிறாராம். காரணம், கடந்த ஆண்டு நேபாளில் நிகழ்ந்த நிலநடுக்கப் பேரழிவால், பாதிக்கப் பட்டவர்களுக்காக தொடர்ந்து உதவி வருகிறாராம் மிச்சல். வாழ்த்துகள் மிச்சல்!

FOREIGN சரக்கு!
FOREIGN சரக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தைத் தொடர்ந்து பல அமெரிக்கப் படங்களில் நடித்து வருகிறார் படத்தின் கதாநாயகி ஃப்ரீடா பின்டோ. ருட்யார்ட் கிப்லிங்கின் ‘தி ஜங்கிள் புக்’ தொகுப்பு, சிறுவர்களிடையே பயங்கர ஃபேமஸ். அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் இதன் பட வெர்ஷனில் சிறுவன் மவுக்ளியின் தாயாக நடிக்க இருக்கிறார் ஃப்ரீடா. ‘நான் இதுவரை குழந்தைகளுக்கான படம் எதுவும் நடிச்சதில்லை. அதனால்தான் இந்தப் படத்தில் அம்மா கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கிறேன்’ என பேட்டியளித்து இருக்கிறார் ஃப்ரீடா. நீங்களே குழந்தை மாதிரிதான் இருக்கீங்க!

FOREIGN சரக்கு!

கடந்த வாரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு நிர்வாணப் படம் ஒன்றை வெளியிட்டு ஷாக் கொடுத்தார் கிம் கர்தாஷியன். படத்தில் சில பாகங்களை மட்டும் கருப்பு மையினால் அழித்தவாறு அப்லோடி இருந்தார் கிம். ஒரு ரோல் மாடல் போல் இருக்கும் கிம் இப்படிச் செய்யலாமா என சிலர் எதிர்ப்புக் கணைகளை வீசினர். சிலரோ இது வெறும் போட்டோஷாப் எனக் குற்றம் சுமத்தினர். கடுப்பான கிம்மோ, அடுத்த நாள் தன் கைகளை வைத்து மட்டும் மறைத்தவாறு, தன் முழுப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இப்படியெல்லாமா பதிலடி தர்றது?

FOREIGN சரக்கு!

நடிகை, தயாரிப்பாளர், மாடல், தொழிலதிபர் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர் சோஃபியா வெர்கரா. கடந்த ஆண்டு, நடிகர் ஜோ மங்கானியெல்லோவை இரண்டாம் முறையாகத் திருமணம் செய்துகொண்டார். குழந்தைகள் பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, ‘அதெல்லாம் நாம முடிவு பண்ணிச் செய்ய முடியாது. அதுவாக நடக்கும்னு காத்திருக்க வேண்டியதுதான். ஆனா, அதற்கு எதிராகவெல்லாம் இல்லை’ எனக் குழப்ப ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார். காத்திருக்கோம்!