Published:Updated:

சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

Published:Updated:
சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

‘வீட்டுக்குள்ள யாராச்சும் வரும்போது, கதவுக்குப் பின்னாடி நின்னுக்கிட்டு ‘ப்பே...’னு கத்துறதுதான் நமக்குத் தெரிந்த சர்ப்ரைஸ். ஆனால், விதவிதமான சர்ப்ரைஸ் கொடுப்பதற்காகவே ஒரு குழு இயங்குகிறது சென்னையில்! குழந்தைகளுக்கு, காதலர்களுக்கு, அம்மா - அப்பா, தாத்தா - பாட்டிக்கு என... அத்தனை பேருக்கும் முக்கியமான நிகழ்வுகளில் சர்ப்ரைஸ் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறது, ‘மேஜர் அண்ட் மைனர்ஸ்’ அமைப்பு. இதன் ஒருங்கிணைப்பாளர் தீபக் ராஜ்குமாரிடம் பேசினேன்.

சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

‘‘சொந்தக்காரங்களுக்கு, நண்பர்களுக்கு, காதலர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறதெல்லாம் வெளிநாடுகள்ல சகஜமா நடக்கிற விஷயம். இதை ஏன் நாமும் பண்ணக் கூடாதுனு யோசிச்சப்போதான், ‘மேஜர் அண்ட் மைனர்ஸ் டீம்’ உருவாச்சு. இதே பெயர்ல நாங்க ஒரு மியூஸிக் பேண்டும் வெச்சிருக்கோம். என் சொந்த ஊர் சென்னைதான். நான் ஒரு கிரிக்கெட் பிளேயர். இந்தியன் ஏர்லைன்ஸ், தமிழ்நாடு டீமுக்காக விளையாடியிருக்கேன். கிரிக்கெட்ல இருந்த ஆர்வம் குறைஞ்சதும், மியூஸிக் டைரக்டர் ஆகலாம்னு முயற்சி பண்ணேன். அதுவும் முடியாமப் போச்சு. வீட்டுல ‘வேலைக்குப் போ, வேலைக்குப் போ’னு ஒரே நச்சரிப்பு. நமக்குப் பிடிச்ச வேலையைத்தான் செய்யணும்னு உறுதியா இருந்ததனால, மியூஸிக் பேண்டோட சர்ப்ரைஸ் கொடுக்கிறதுக்காகவும் டீமை ரெடி பண்ணியாச்சு. சென்னையில மட்டும் இருந்த எங்க ‘மேஜர் அண்ட் மைனர்ஸ்’ டீம் இப்போ கோயம்புத்தூர், பெங்களூருக்கும் ஷிஃப்ட் ஆகியிருக்கு. கூடிய சீக்கிரம் இந்தியா முழுக்கக் கொண்டு வரணும்!’’ ஆர்வமாக அறிமுகம் கொடுக்கிறார் தீபக் ராஜ்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

‘‘ஆரம்பத்துல நண்பர்கள் மூலமா சில பேருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தோம். ஒருத்தருக்கு கிடார் இசை ரொம்பப் பிடிக்குமாம். அவருடைய பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறதுக்காக, நானும் இன்னொரு நண்பரும் சம்பந்தப்பட்ட நபர் வீட்டுக்கு சர்ப்ரைஸா கிளம்பி, கிடார் வாசிச்சு சந்தோஷப்படுத்தினோம். அவர் ரொம்வே ஹாப்பி ஆயிட்டார். பிறகு, ‘உங்க டீமை ஃபேஸ்புக்குல இறக்குங்க. அப்போதான், நிறையப் பேருக்கு ரீச் ஆகும்’னு நண்பர் ஒருத்தர் சொல்லவே, மேஜர் அண்ட் மைனர்ஸ் பெயர்லேயே ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பிச்சு, நிறையப் பேருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தோம். நண்பர்களுடைய கல்யாணம், பிறந்தநாள், அப்பா-அம்மாவோட கல்யாண நாள், தாத்தா-பாட்டிக்கு திடீர் சர்ப்ரைஸ்னு எக்கச்சக்க வாய்ப்புகள் வந்தன. தன் அம்மாவுக்கு இளையராஜா இசை பிடிக்கும்னு ஒருத்தர் எங்ககிட்ட வந்தார். அவங்க அம்மாவுக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, திடீர்னு அவங்களுக்கு முன்னாடி இளையராஜா பாடல்களைப் பாடினப்போ, மகனோட பாசத்துல கண் கலங்கிட்டாங்க’’ என்றவர், தொடர்ந்தார்.

சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

‘‘சன்டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஞ்சனா, ‘கயல்’ சந்திரனுடைய பிறந்தநாளுக்கு எங்க டீமை புக் பண்ணி, சர்ப்ரைஸ் கொடுக்கச் சொன்னாங்க. பிறகு, அவங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் சர்ப்ரைஸ் கொடுக்க, ‘கயல்’ சந்திரனோட தம்பி எங்களைத் தேடி வந்தார். கேக் வெட்டுற சாதாரண சம்பிரதாயங்களைத் தாண்டி பாட்டுப் பாடுறது, ரோட்டுல பொக்கே கொடுக்கிறது, ஏன், நடுக்கடல்ல கூட்டிக்கிட்டுப் போய்க்கூட சர்ப்ரைஸ் கொடுத்திருக்கோம். ஆரம்பிச்ச ரெண்டே வருசத்துல 100-க்கும் அதிகமான சர்ப்ரைஸ் கொடுத்து, பல பேரை சந்தோஷப்படுத்தியிருக்கோம். மனசுக்குப் பிடிச்சவங்களுக்கு இப்படியெல்லாம் பண்ணணும்னு பலருக்கு ஐடியா இருந்தாலும், என்ன பண்றதுனு யோசிக்க யாருக்குமே நேரமில்லை. அந்த வேலையைத்தான் நாங்க செய்றோம்!’’ என்றவரிடம், சர்ப்ரைஸ் கொடுப்பதற்கான விலை விபரங்களைக் கேட்டேன்.

சர்ப்ரைஸ் கொடுங்க... சந்தோஷப்படுங்க!

‘‘ஒருத்தருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னா, நாங்க முதல்ல கேட்கிற விஷயமே பட்ஜெட்தான்! ஏன்னா, 500 ரூபாய் மட்டுமே வெச்சிருக்கிற பையனுக்கு, தன்னோட காதலிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தோணும். அதுக்கும் நாங்க ரெடிதான்! என்ன பண்ணுவோம்னா, சம்பந்தப்பட்ட நபரோட காதலிக்கு காலையில இருந்து சாயங்காலம் வரை... மணிக்கு ஒருமுறை யாருனே தெரியாத நபர்கள் மூலமா, ‘உங்க காதலர் உங்களுக்குக் கொடுக்கச் சொன்னார்’னு கிரீட்டிங்ஸ் கார்டு கொடுப்போம். ஆக, பணமெல்லாம் பிரச்னை கிடையாது. ஜாகுவார் கார்ல டிராவல் பண்ண வைப்போம், அவங்களுக்குப் பிடிச்ச பைக்கை ஒருநாள் முழுக்க ஓட்டச்சொல்லி ரசிப்போம். வயசானவங்க ரொம்பநாளா போகணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கிற இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போவோம். வாடிக்கையாளர்கள் சொல்ற பட்ஜெட்ல நாங்க கொடுக்கிற சர்ப்ரைஸ் வெரைட்டியா இருக்கலாம். ஆனா, சந்தோஷம் எல்லோருக்கும் ஒண்ணுதானே?’’ என்கிறார் தீபக்.

கரெக்ட்!

- கே.ஜி.மணிகண்டன்