Published:Updated:

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

Published:Updated:
சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விடுகதை!

மிழ் சினிமாவைக் கலக்கும் விஜய் சேதுபதி சினிமா டைட்டில்கள் தான் இந்த வாரசினிமா விடுகதைக்கான விடைகள் பாஸ்!

சினிமா விடுகதை!

1. நட்பதிகாரம் பேசினாக்கா முதுகுல குத்துவேன்னாரு. குத்து வாங்கினாலும் கும்கியைக் கட்டுவேன்றாரு. ‘ன்’ல முடியுற படத்துல ஹீரோ ஊரு கண்டமனூரு! என்ன படம் பாஸ்?

2.
மதுரைக்குத் தெற்கே மழை பெய்யக் காரணம். வீராயி-முருகைய்யன் பாசம் சொல்லும் ஒரு படம். ‘கள்ளிக்காட்டு நாயகனுக்கு விருது ஒண்ணு பார்சேல்...’ என்ற படம் எந்தப் படம்?

3.
தலைப்பு பங்கமா இருந்தாலும் எந்திரப்பாசம் பேசுன படம்.  நாட்டியப்பேரொளிக்கும் கரகாட்டக்கரனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைனாலும் சம்பந்தம் இருக்கே..! என்ன படம் பாஸ்?

4. சின்னப் புள்ளைங்களுக்குப் பிடிச்ச ஐட்டம். சம்மர்ல கடைகள்ல கிடைக்கிற ஐட்டம். காயா இருந்தா புளிக்கும். பழமா இருந்தா இனிக்கும். அது என்ன?

5. சூதாட்ட கேமு... படம் ஓடலையே மாமு. மம்மிக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு. ஆனா டம்மி ஹீரோதான் சார் இதுல. சுமாரான படத்துக்கு ரெண்டெழுத்து மாமு. அது என்ன?

6. ரியல் எஸ்டேட்காரங்க கண்ணுல பட்டா போச்சு. சித்தன் போக்கு சிவன் போக்குனு ஆச்சு. போடா...னு திட்டுனா ஈஸியா கண்டுபிடிக்கலாமே ஃப்ரெண்ச்.

7. சின்னப் புள்ளைங்க கையில புக்கைக் கொடுத்தா பிச்சுத் துன்னுமே பாவம். அதனால ஆகுமே புக்கும் தானே பாவம். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, டைட்டில் கிடைக்குமே லாபம்! அது என்ன?

8. வடிவேலு சொன்ன வசனம். அதுக்கு ஏன் இம்புட்டு விசனம்? சிவப்பு சட்டை போட்டா மட்டும் நாயகிக்கு வருமே கோபம். அது என்ன?

விடைகள்: 1. சுந்தரபாண்டியன் 2. தென்மேற்குப் பருவக்காற்று 3. பண்ணையாரும் பத்மினியும் 4. ஆரஞ்சு மிட்டாய் 5. ரம்மி 6. புறம்போக்கு எனும் பொதுவுடமை 7. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 8. நானும் ரௌடிதான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-சரவ்