Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்
பிரீமியம் ஸ்டோரி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

Published:Updated:
அலசி ஆராய்வது அப்பாடக்கர்
பிரீமியம் ஸ்டோரி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்
அலசி ஆராய்வது அப்பாடக்கர்

தட் ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’ மொமென்ட்:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த டிராஃபிக் ராமசாமியை எந்தக் கணக்கில் சேர்க்கிறதுனு தெரியலை. திடீர்னு எல்லா அரசியல் கட்சிகளையும் எதிர்க்கிறார். அப்புறம் கருணாநிதியையும் விஜயகாந்தையும் சேர்க்கிறார். லேட்டஸ்டா பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்திச்சவர், ‘உங்க கூட்டணியில் கண்டிப்பா தே.மு.தி.க-வையும் த.மா.கா-வையும் கூட்டணியில் சேர்க்கணும்’னு சொல்லியிருக்கார். ஆனா இவர் பா.ஜ.க கூட்டணியில் சேரப்போறதில்லையாம். கேட்கும்போது நமக்கே தலை சுத்துதே, பொன்னார் என்ன ஆனாரோ?

தட் ‘பொசுக்குனு போட்டாரே பொக்ரான்’ குண்டு விருது

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

‘‘கலைஞர் குடும்பம் குற்றவாளி என்கிறோம். ஜெயலலிதா குற்றவாளி என்கிறோம். பா.ம.க குற்றவாளி என்கிறோம். விரலை நீட்டிச் சொல்கிறோம். பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். இதை நூறு கூட்டத்தில் பேசிவிட்டேன். நூற்றி ஒன்றாவது கூட்டத்திலும் பேசுகிறேன். நீ ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா விரலை நீட்டி எங்களைக் குற்றவாளினு சொல்லுங்கடா பார்ப்போம்” - இது யார் பேசுன பேச்சுனு கேட்கிறீங்களா? நம்ம இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோட தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசினது. பொதுவா கம்யூனிஸ்ட்காரங்க இப்படில்லாம் சவால் விட்டுப் பார்த்ததே இல்லை. அதிலேயும் பெண்ணியம்லாம் பேசுற கம்யூனிஸ்ட் கட்சியோட தலைவர் பேசின பேச்சைக் கேட்டு அப்டியே ஷாக் ஆகிட்டேன்! ஆமா, அதென்ன ‘வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா’..? ஏன் பேன்ட் போட்ட ஆம்பளையையெல்லாம் ஏத்துக்க மாட்டாராமா? எனக்குத் தெரிஞ்சு எப்பவுமே பக்கத்தில இருக்கிற தொல்.திருமாவளவன் பேன்ட்தான் போடறார். இப்படியே சிறுத்தையை சீண்டிப்புட்டீங்களேப்பு!

தட் ‘கொஞ்சம் நடிக்காதீங்க பாஸ்’ மொமென்ட்:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

தி.மு.க-வில் கொளத்தூர் தொகுதிக்கு யாருமே வேட்புமனுத் தாக்கல் பண்ணலையாம். ஸ்டாலின் பெயரால் ஏகப்பட்ட வேட்புமனுக்களாம். அதனால் ஸ்டாலினைத் துரைமுருகன் நேர்காணல் பண்றார். பக்கத்திலேயே கருணாநிதியும் அன்பழகனும். எப்பா புல்லரிக்குதுப்பா! இதைப் பார்க்கும்போதுதான் ‘என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா?’னு கேட்கத் தோணுது!

தட் ‘அப்போ அதானே நடக்கும்’ மொமென்ட்:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

‘‘நாங்கள் பா.ஜ.க கூட்டணியில் இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருப்பது அவர் குழம்பிப் போயிருப்பதைக் காட்டுகிறது. நாங்கள் அவர்களோடு பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை’’னு பொங்கி எழுந்து போர்க்குரல் எழுப்பியிருக்கார் வைகோ. (சும்மாவே பொங்குவாரு!) பாவம், பொன்னார் என்ன பண்ணுவார். விஜயகாந்தோட கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினா, குழம்பாம இருந்தாதான் ஆச்சர்யம்!

தட் ‘அப்டியே ஷாக் ஆகிறோம்’ மொமென்ட்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

‘காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள 70 தொகுதிகள் தேர்வு’னு பேப்பர்ல படிச்சேன். அதை அப்படியே அலாக்காத் தூக்கிட்டுப் போய் தி.மு.க-விடம் கொடுத்துக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்போறாங்களாம். எனக்கென்னமோ கட்சி உறுப்பினர்கள் இருக்கிற தொகுதிகளை எல்லாம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்னு முடிவு பண்ணிட்டாங்களோ?

தட் ‘உளவுத்துறையே ஒர்த் இல்லை’ மொமென்ட்

விவசாயக் கடன் வாங்கப்போறவனை வெளுத்துக் கட்டுற வங்கிகள்தான் விஜய் மல்லையாவுக்கு கடனைக் கொடுத்துட்டு கண்ணாமுழி பிதுங்கி நிற்குது. 9000 கோடி ரூபாய் மோசடிப் புகார்ல விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறையினர் புகார் பதிவு செஞ்சுருக்காங்க. உச்சக்கட்டமா, ‘விஜய் மல்லையா மார்ச் மாசமே நாட்டை விட்டுப் போயிட்டாரு’னு கோர்ட்ல சொல்லியிருக்கு. இதை நக்கலடிச்சு நரேன் ராஜகோபால்ங்கிறவர் போட்டிருக்கிற ஃபேஸ்புக் ஸ்டேட்டஸைப் படிங்க, சிரிங்க!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்

‘ராகுல் காந்தி எந்த ஊர்ல இருக்கிறாருனு கண்டுபிடிக்க முடியலை, ஓகே. விஜய் மல்லையா இந்தியாவுலேயே இல்லைனு கண்டுபிடிக்கக்கூடவா இவ்வளவு நேரமாகும். இந்த இன்டலிஜென்ஸை வெச்சுக்கிட்டு அரசாங்கத்தை நடத்தினா, ஒண்ணுல்ல ஒவ்வொரு நாளும் பதான் கோட்டுதான் பார்டர்ல!’