Published:Updated:

நான் பேய்களின் டாக்டர்!

நான் பேய்களின் டாக்டர்!

நான் பேய்களின் டாக்டர்!

நான் பேய்களின் டாக்டர்!

நான் பேய்களின் டாக்டர்!

Published:Updated:
நான் பேய்களின் டாக்டர்!

பேய்களைப் பிடித்து பாட்டிலில் அடைக்கும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் நாம் சும்மா இருப்போமா? ஒரு பாட்டிலுடன் சென்று சந்தித்தால்...

நான் பேய்களின் டாக்டர்!

‘‘என் பெயர் அப்பாஸ் காதிரி பாபா. மவுன்ட் ரோடு தர்காவில் நிர்வாகியாக இருக்கேன். நான் மந்திரவாதியெல்லாம் கிடையாது தம்பி. பேய்களின் டாக்டர். சிம்பிளா சொன்னா பில்லி, சூனியம், ஏவல் மாதிரி கெட்ட சக்திகளிடம் இருந்து மக்களைக் காப்பாத்தும் நல்ல சக்தி. கிட்டத்தட்ட பத்து வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன், நான் இதுக்கு முன்னே ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்ல டீம் மேனேஜரா இருந்தேன். திடீர்னு ஒருநாள் பேய்களோடு பேசும் பவர் கிடைக்க, பேங்க் வேலையை விட்டுட்டு பேய் ஓட்ட ஆரம்பிச்சிட்டேன். இதுவரை ஆயிரம் பேய்களுக்கு மேல ஓட்டி சாதனை படைச்சிருக்கேன்’’ என்று டெரர் அறிமுகம் கொடுத்தார் அப்பாஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் பேய்களின் டாக்டர்!

‘‘பொதுவாத் தலையில் அடிபட்டு செத்த பேய்களுக்கு மெமரிலாஸ் பிரச்சனை இருக்கும். தன்னோட பேரு, அட்ரஸ் எதுவும் அதுக்கு சொல்லத் தெரியாது. ஆக்ஸிடென்ட்டில் செத்த பேய்கள் அதே இடத்தில்தான்  சுத்திக்கிட்டிருக்கும். அப்படிப்பட்ட பேய்களை விரட்ட என்னிடம் கொண்டுவருவாங்க. ஏன் இவரைப் பிடிச்சிருக்கேன்னு நான் கேட்கும்போது ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு காரணம் சொல்லும். ரோட்ல நிறைய ஆட்கள்  போனாங்க, ஆனா இவர் போட்டிருந்த டி-ஷர்ட் எனக்குப் பிடிச்சிருந்துச்சு, அதனால நான் இவரைப் பிடிச்சேன்னு பதில் சொல்லும். பொதுவா ஆண் பேய்கள் சுடிதார் போட்ட பொண்ணுங்களைத்தான்

நான் பேய்களின் டாக்டர்!

குறி வெச்சுப் பிடிக்கும். அப்படிப்பட்ட பேய்களை நான் பிடிச்சு பாட்டிலில் அடைச்சு சுடுகாட்டில் கொண்டுபோய்ப் புதைச்சிடுவேன்’’ என்று கிலியூட்டியவர்...

‘‘நான் சொன்னா நம்ப மாட்டீங்க. தமிழ்நாட்டின் நம்பர் ஒன் சினிமா பிரபலம் ஒருத்தர் கனடாவில் இருக்கும் அவருடைய நண்பரைக் கூட்டிக்கிட்டு என்னைப் பார்க்க வந்தார். அந்த கனடாக்காரரின் அப்பா பல வருஷங்களுக்கு முன்னே செத்துப்போயிட்டாராம். அவர் எப்படி செத்தார்னு என்னைக் கண்டுபிடிக்கச் சொன்னாங்க. மகன் உடம்பில் அப்பாவின் ஆவியை வரவெச்சு வாக்குமூலம் வாங்கினேன். ஐந்து பேர் சேர்ந்து என்னை அடிச்சுக் கொன்னு இலங்கையில கடல்ல தூக்கிப் போட்டாங்கனு சொல்ல அதை வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்த சினிமாப் பிரபலம் மிரண்டு போயிட்டார்.

பேய்களைப் பேசியே விரட்டுவது ஒரு வகை என்றால், மிரட்டி ஓட விடுவது இன்னொரு வகை. எப்பவும் என் மேஜையில ஒரு தண்ணி பாட்டிலை வெச்சிருப்பேன். சாதாரணமா குடிக்கிற தண்ணிதான். பேய் பிடித்தவரோட உடம்புல அதைத் தெளிச்சு இது பெட்ரோல்னு பொய் சொல்வேன். இப்போ நீ போறியா இல்லை, கொளுத்தி விடவான்னு தீப்பெட்டியை வெச்சு மிரட்டும்போது கொளுத்திடாதீங்கனு பயந்து ஓடிடும். ஒருவர் உடம்பில் ஒரே ஒரு பேய்தான் இருக்க முடியும். பேய் உள்ளே இருக்கும்போது அந்த நபரின் உண்மையான ஆத்மா அவர் பக்கத்திலேயே நின்னுக்கிட்டிருக்கும். கெட்ட ஆவியை நான் விரட்டினதும் உண்மையான அவருடைய ஆத்மா சொந்த உடம்பில் புகுந்திடும்.

நான் பேய்களின் டாக்டர்!

சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் ஒரு பெண் சென்னையில் இருக்கும் தன்னோட மாமியாருக்கு, மந்திரவாதி மூலம் தாயத்து, தகடு, எலுமிச்சைப் பழங்களை வெச்சு செய்வினை வெச்சாங்க. அந்த மந்திரவாதிகிட்ட இருக்கும் ஒரு பேய் அந்தப் பொருட்களைத் தூக்கிட்டு சென்னை வந்து மாமியார் வீட்டில் ஒளிச்சு வெச்சிடுச்சு. இந்த விஷயத்தை நான் கண்டுபிடிச்சு முள்ளை முள்ளால் எடுக்கிற மாதிரி அந்த பெங்களூர் ஆவியை அடக்கி அது வெச்ச பொருளை அதன் மூலமாவே எடுக்க வெச்சேன். பேய் வர்றது சில அறிகுறிகளை வெச்சுக் கண்டுபிடிக்கலாம். கொலுசு சத்தம் கேட்டா பொம்பளைப் பேய். மண்ணெண்ணெய் வாடை வந்தா தீயில வெந்து செத்த பேய். நான் செய்த ஆராய்ச்சியில் பேய்கள் காதலிக்கும். பேய்கள் பழி வாங்காது. பேய்கள் வெள்ளை கலர்ல இருக்கும்.  ட்ரெஸ் எதுவும் போடாது. 18,000 ரூபாய் சம்பளத்தில் பேங்கில் வேலை பார்த்த நான், அதை விட்டுட்டு இந்தத் தொழிலுக்கு வந்திருக்கேன்னா பேய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யத்தான்’’ என்று முடித்தார் அப்பாஸ்.

எனக்கு லைட்டா தலை சுத்துச்சு. உங்களுக்கு..?

-ஜுல்ஃபி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்