இதுதான் உண்மையான வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இணையத்தில் #InternationalWomensDay என்ற டேக்கில் பெண்களைப் போற்றி ட்விட் செய்தனர் நெட்டிசன்ஸ். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஐ.டியான @INCIndia வில் தடைகளை மீறி வென்ற பெண்கள் என ஒரு பட்டியல் வெளியிட்டது அந்த ஐ.டி. ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வின் சுஷ்மா ஸ்வராஜ் போன்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களைப் பட்டியலிட, ஷாக் ஆகி காங்கிரஸ் கட்சியைப் பாராட்டினர் நெட்டிசன்ஸ். ஒருவேளை திருந்திட்டாங்களோ?
இது வேற தோனி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்கெனவே தமிழில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட ஒரு படம் ‘தோனி’ என்ற பெயரில் வெளியானது. தற்போது பாலிவுட்டில் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு ‘எம்.எஸ்.தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி’ என்ற படத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி #msdhonitheuntoldstory என்ற டேக்கில் ஹிட் அடித்தது. வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை ‘எ வெட்னஸ்டே’ (தமிழில் உன்னைப்போல் ஒருவன்) ஸ்பெஷல் 26 ஆகிய பாலிவுட் படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே இயக்குகிறார். படமும் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்குமா?
அருமை அமைச்சரே

மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. நம் நாட்டில் அமைச்சர்கள் என்றாலே அவர்களின் காருக்கு முன்னால் பத்து கார்களும், பின்னால் பத்து கார்களும் செல்வதுதான் வழக்கம். அப்படிச் சென்ற ஒரு கார், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை மோதிவிட்டது. அந்தப் பெண், அவரது தந்தை என இருவருக்கும் பலத்த அடி. அந்தப் பெண் உதவி கேட்டும், ஸ்மிருதி இரானி கண்டுகொள்ளாமல் காரில் பறந்தார். விஷயம் இணையத்தில் பரவி, #smritihitandrun என்ற டேக்கில் அமைச்சரை திட்டித் தீர்த்தனர் நெட்டிசன்ஸ். மனிதவளத் துறை மனிதனை நல்லாப் பார்த்துக்குது!
கார்களுக்குள் வாழ்த்து

கடந்த வாரம் 7-ம் தேதி பிஎம்டபுள்யூ என்ற ஜெர்மன் நிறுவனம் வாகனத் தயாரிப்பில் 100 ஆண்டுகளை நிறைவு செய்தது. 100 ஆண்டுகள் நிறைவு பற்றி பிஎம்டபுள்யூ நிறுவனம், தன் ட்விட்டர் தளத்தில் எந்தவொரு ட்விட்டும் இடவில்லை. ஆனால், சக போட்டியாளரான மெர்சடீஸ் பென்ஸ் வீடியோ ஒன்றைத் தயாரித்து, பிஎம்டபுள்யூவை வாழ்த்தியது. 100 ஆண்டுகளாகப் போட்டி போட்டதற்கு நன்றி, கடந்த 30 ஆண்டுகள் பயங்கர போர் அடித்தன, அடுத்த 100 ஆண்டு போட்டிக்கு வாழ்த்துக்கள் என ட்விட்கள் செய்தது பென்ஸ் நிறுவனம். @BMW ,@MercedesBenz என்ற இரு ஐடிகளுமே உலக அளவில் ட்ரெண்ட் ஆகின. விர்ர்ரூம் போட்டி!
கை அசைவில் இசை

தொழில்நுட்பங்களின் மூலம் இசையை அதன் அடுத்த கட்டத்துக்கு எப்போதும் அழைத்துச் செல்வது ரஹ்மான்தான். கை அசைவுகளை மட்டும் வைத்தே, கணிணி உதவியுடன் இனி இசை அமைக்க முடியுமாம். இந்த முறையில் தன் பாடல்களை மேடையில் இசையமைத்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கப்போகிறாராம் ரஹ்மான். இணையம் முழுக்க இந்த வீடியோ செம வைரல். @arrahman என்ற டேக் ட்ரெண்ட் அடித்தது. இசை எங்கே இருந்து வேணும்னாலும் வரும் போல!
டபுள் சூப்பர் ஸ்டார்

பிரபல ஹீரோக்களின் லேட்டஸ்ட் போட்டோ வெளியானாலே இணையம் களை கட்டும். ‘சுல்தான்’ படத்திற்காக ஷூட்டிங்கில் இருந்த சல்மானை நட்பு முறையில் ஷாரூக் சந்திக்க, அந்தப் படம் இணையத்தில் ஒரு ரவுண்ட் வந்தது. ஷாரூக்கின் ‘ஃபேன்’, சல்மானின் ‘ சுல்தான்’ இரண்டையும் குறைக்கும் வகையில் #FANmeetsSultan என்ற டேக், தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது. தல-தளபதி ஒரு போட்டோ போடலாமே!
பங்களாதேஷ் போச்சா!

ஆசியக் கோப்பையில் யாரும் பங்களாதேஷ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என்றெல்லாம் எண்ணவில்லை. ஆனால் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் மோதியது. பங்களாதேஷ் ரசிகர்களோ, இந்திய அணி கேப்டன் தோனியின் தலையை வெட்டி எடுப்பதுபோல் போட்டோஷாப் மீம்கள் செய்து அட்ராசிட்டி செய்தனர். பங்களாதேஷ் வீரர்களும் சற்று அதிகமாகவே பன்ச் வசனங்கள் பேச, ஆட்டத்தில் பரபரப்பு எகிறியது. எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது இந்தியா. #byebyebangladesh என்ற டேக்கில் பங்களாதேஷ் அணியை ஓட்டித்தள்ளினர் நெட்டிசன்ஸ். பேச்சைக் குறைங்கப்பா
-ட்ரெண்டிங் பாண்டி