Published:Updated:

“வெளிப்படையா சொன்னா சாமிக் குத்தம் ஆகிடும்!”

  “வெளிப்படையா சொன்னா சாமிக் குத்தம் ஆகிடும்!”
“வெளிப்படையா சொன்னா சாமிக் குத்தம் ஆகிடும்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: க.தனசேகரன்

“வாராவாரம் குறும்புக் கேள்விகள் படிக்கும்போது எல்லாம்  `நம்மை எப்ப கேட்கப்போறாங்களோ?’னு கரன்ட் நியூஸ் எல்லாம் அப்டேட் பண்ணி வெச்சிருக்கேன். படிச்சது எல்லாம் இப்ப யூஸ் ஆகுதானு பார்ப்போம்... கேளுங்க” என உற்சாகமாகிறார் டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஈரோடு மகேஷ்.

“இந்த நேரத்துல பாலிட்டிக்ஸ் கொஸ்டீன்ஸ் வேணாம் தம்பி. வேற கொஸ்டீன்ஸ் கேளுங்க. ஜாலியாப் பேசுவோம்” - உஷாராகிறார் நடிகர் இளவரசு.

“கூட்டத்துல பேசிப் பேசி தொண்டையே சரியில்லை. கொஞ்சம் கரகரனு பேசுவேன் புரிஞ்சுக்கோங்க. ஆனா, விஜயகாந்த் ஸ்டைலில் பேச மாட்டேன்” - கலகலப்பாக ஆரம்பிக்கிறார் அ.தி.மு.க பேச்சாளர் நடிகை விந்தியா.

  “வெளிப்படையா சொன்னா சாமிக் குத்தம் ஆகிடும்!”

“வாவ்... இந்த மாதிரி யாரும் என்கிட்ட பேட்டி கேட்டது இல்லை. ஐ'யம் ரெடி. ஆனா, தெரியாததைத் `தெரியாது’னு சொல்லிடுவேன். டீல் ஓ.கே-வா?” - நடிகை சிருஷ்டி டாங்கே.

“விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கியுள்ள மொத்தக் கடன் தொகை எவ்வளவு?”

விடை : 9,000 கோடி ரூபாய்க்கு மேல்.

ஈரோடு மகேஷ்: “7,000 கோடி ரூபாய்னு இப்பதான் படிச்ச மாதிரி ஞாபகம். கடன் வாங்கும்போது அவங்கவங்க தகுதிக்கு ஏற்ப வாங்குவோம். நாம 7,000 ரூபாய் வாங்குவோம். அவர் 7,000 கோடி வாங்குறார். பேங்க்ல டூ வீலர் லோன் வாங்கவே நமக்கு எல்லாம் நாக்கு தள்ளுது. இதை எல்லாம் என்னன்னு சொல்றது?” என்றவரிடம் பதிலைச் சொன்னதும் “அட, நான் படிச்சு முடிச்சு, ரெண்டு மணி நேரம் ஆச்சுப்பா. அதுக்குள்ள வேற எங்கேயாவது 2,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பார்போல. எனக்கு நீங்க மார்க் கொடுத்தே ஆகணும் சொல்லிப்புட்டேன்” - சிரிக்கிறார்.

இளவரசு: “இப்ப ஃபேஸ்புக், வாட்ஸ்அப்னு எங்க போனாலும் அவர் போட்டோவைத்தானே போட்டுக் கிழிச்சுத் தொங்கவிடுறாங்க. 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக் காராம். ஆத்தாடி... 9,000 ஆயிரம் கோடிக்கு எத்தனை சைபர்னு நேத்துதான் எண்ணிப்பார்த்தேன். 9-க்குப் பின்னாடி 12 சைபர் வருது” என யோசித்தவர், “எத்தனை சைபர்னு இன்னொரு முறை செக் பண்ணிட்டு எழுதுங்க தம்பி. இல்லைன்னா கடன் வாங்கினவனை விட்டுருவாய்ங்க. சைபர் தப்பா சொல்லிட்டோம்னு நம்ம மண்டையை உருட்டிருவாய்ங்க.”

விந்தியா : “இந்தப் பிரச்னைக்குத்தான் நான் யார்கிட்டயும் கடன் கேக்கிறதும் இல்லை... கொடுக்கிறதும் இல்லை. 7,000 கோடி ரூபாய்னு படிச்சேன்.’’

சிருஷ்டி டாங்கே: “9,000 கோடி ரூபாய். நான் எங்க அப்பா அம்மாகிட்ட மட்டும்தான் கடன் வாங்குவேன். ஒரு நாளைக்கு 2,000 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் ஷாப்பிங் போனா 10,000 ரூபாய் வரை செலவு பண்ணுவேன். அதுக்கும் அம்மாகிட்ட கணக்கு சொல்லிடுவேன். குட்கேர்ள்.”

  “வெளிப்படையா சொன்னா சாமிக் குத்தம் ஆகிடும்!”

தேர்தல் விதிமுறைப்படி, ஒரு வேட்பாளர் எவ்வளவு ரூபாய் வரை அதிகாரபூர்வமாகச் செலவு செய்ய முடியும்?”

விடை : 28 லட்சம் ரூபாய்.

ஈரோடு மகேஷ்: “எனக்கு அரிசி ஆசை உண்டு. அரசியல் ஆசை இல்லைங்க. நான் நல்லா சாப்பிடுவேன். சென்னையில எனக்குப் பிடிச்ச ஹோட்டல் எல்லாம் நிறைய இருக்கு. அது என்னன்னா (ஹலோ... ஹலோ... பிரதர் கேள்வி என்னன்னா...) அட, `நமக்கு எதுக்கு வம்பு?’னு எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா விட மாட்டீங்களே. இப்பல்லாம் வேட்பாளரா வர்றதுக்கே செலவு பண்ணணும். அதை வெளிப்படையா சொன்னா, சாமிக் குத்தம் ஆகிடும். சரி, குத்துமதிப்பா மூணு லட்சம் போட்டுக்கோங்க. என்னை யாரும் குத்தாம இருந்தா சரி.”

இளவரசு: “இதைத்தான் பிளாக் காமெடினு சொல்வாங்க. எப்படி இருந்தாலும் ஒவ்வொருத்தரும் கோடிக்கணக்குல செலவு பண்ணுவாங்க. தேர்தல் புரோட்டோகாலுக்கு வேணும்னா இவ்வளவுதான் செலவு பண்ணோம்னு சொல்லிக்கலாம். இதை விதிமுறை, அதிகாரபூர்வம்னு சொல்லி என்ன ஆகப்போகுது தம்பி. எல்லாமே இங்கே காமெடிதான்.”

  “வெளிப்படையா சொன்னா சாமிக் குத்தம் ஆகிடும்!”

விந்தியா: “ `28 லட்சம் வரை செலவு பண்ணலாம்'னு சொல்லியிருக்காங்க. என்கிட்ட 28 லட்சம் ரூபாய் பணம் இல்லைங்க. நீங்க ஸ்பான்ஸர் பண்ணுறீங்கன்னா சொல்லுங்க. இப்பவே அம்மாகிட்ட அப்ளிக்கேஷன் போட்டுடறேன். ஆனா, அப்ளிக்கேஷன் தேதியும் முடிஞ்சுபோச்சே!”

சிருஷ்டி டாங்கே: “எலெக்‌ஷன் கேண்டிடேட் ஒரு ரூபாய்கூட செலவு செய்யக் கூடாது. இப்ப டெல்லியில அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துக்கோங்க. அவர் எல்லாம் பணமே செலவு பண்ணாமதான் ஜெயிச்சார். தமிழ்நாட்டுலயும் கேண்டிடேட் செலவு பண்ணாம ஜெயிக்க முடியும்னு நினைக்கிறேன்.” (பாவம் பொண்ணு... இவ்வளவு வெள்ளந்தியா இருக்கே!)

“சரோஜாதேவி யூஸ் பண்ண சோப் டப்பா இப்ப யார்கிட்ட இருக்கும்?”

விடை : சரோஜாதேவியிடம்...

ஈரோடு மகேஷ்: இடைவிடாமல் சிரித்தவர், “ஏங்க என்னை எல்லாம் பார்த்தா பாவமா தெரியலையா? வாழ்க்கையில எவ்வளவு பிரச்னைகளோட வாழ்ந்துட்டு இருக்கேன். என்கிட்ட போய் இப்படிக் கேட்டுட்டீங்களே... மெட்ராஸ்ல அவன் அவன் குளிக்கத் தண்ணி இல்லாம சுத்திட்டு இருக்கான். இதுல எங்க இருந்து சோப் வாங்க... சோப் டப்பா வாங்க? பதில் இதுதான்... மண்ணெண்ண... வேப்பெண்ண... வெளக்கெண்ண... சரோஜாதேவி சோப் டப்பா இப்ப யாருகிட்ட இருந்தா எனக்கென்ன! என்னா ஒரு வில்லத்தனம்.”

இளவரசு:
“ஹா... ஹா... ஹா... சரோஜாதேவிகிட்டதான் அந்த சோப் டப்பா இருக்கணும். என்ன தம்பி என்னைப் பார்த்து டக்குனு இப்படிக் கேட்டுப்புட்ட?”

விந்தியா:
“கடைசியாக சூர்யா ‘பிதாமகன்’ படத்துல யாருக்கோ வித்தாரு. ஆனா, யார் அந்த சோப் டப்பாவை இப்ப வெச்சிருக்காங்கனு தெரியலையே. என்கிட்டயே நிறைய சோப் டப்பா இருக்கு. அதை எல்லாம் யாரும் கேக்க மாட்டேங்கிறாங்க. இதை எல்லாம் ஓ.எல்.எக்ஸ்., ஃபிளிப்கார்ட்ல  விக்க முடியுமா?” - சிரிக்கிறார்.

சிருஷ்டி டாங்கே
: “ஜெயா டி.வி-யில பழைய பாட்டு எல்லாம் வரும். அதுல எம்.ஜி.ஆர் சார், சரோஜாதேவி பாட்டு எல்லாம் பார்த்திருக்கேன். செம க்யூட்டா இருக்கும். ஆனா, சரோஜாதேவியோட சோப் டப்பாவை யார் வெச்சிருக்காங்கனு எனக்குத் தெரியாதே. நானும் நிறையப் படங்களில் நல்லா நடிச்சு மக்கள் மனசுல இடம்பிடிச்சுட்டேன்னா... என் சோப் டப்பாவையும் யார் வெச்சிருக்காங்கனு 20 வருஷம் கழிச்சுக் கேட்பாங்கள்ல... வெரி ஃபன்னி.”

“தமிழகத்தில் மிக நீண்டகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தவர் யார்?”

விடை: எம்.ஜி.ராமச்சந்திரன். (10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்)

ஈரோடு மகேஷ்: யோசித்தவர் சந்தேகமாக “கருணாநிதியா? அவர்தான் 12 வருஷத்துக்கும் மேல தொடர்ந்து முதலமைச்சரா இருந்தார்னு நினைக்கிறேன். அப்புறம் தம்பி, கடைசியாக ஒரு சின்ன ஹெல்ப். அண்ணனுக்கு ஏதாவது ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சரியாச் சொன்ன மாதிரி எழுதிடுறிய்யா. அது மல்லையா கொஸ்டீன்னா இருந்தாலும் சரி, இல்லை இந்த கொஸ்டீன்னா இருந்தாலும் சரி. ஏன்னா, இந்த உலகம் என்னை பெரிய அறிவாளினு நம்புது. அதைத் தக்கவெச்சுக்கணும்ல... ப்ளீஸ் ஹெல்ப் மீ. யூ ஆர் எ குட் பாய். ஓ.கே?” எனச் சிரிக்கிறார். (நோ... ப்ரோ. நான் ரொம்ப பேட் பாய். அப்படியே எழுதிட்டேன் பார்த்தீங்களா?)

  “வெளிப்படையா சொன்னா சாமிக் குத்தம் ஆகிடும்!”

இளவரசு: “தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் மட்டும்தான் தம்பி தொடர்ந்து ஒன்பது வருஷம் முதலமைச்சரா இருந்தார். கருணாநிதி, ஜெயலலிதா எல்லாருமே மாறி மாறித்தான் ஆட்சியைப் பிடிச்சாங்க.”
 
விந்தியா: “காமராஜர். அவர்தான் தொடர்ந்து ஒன்பது வருஷம் ஆட்சியில இருந்தார். ஆனா, காமராஜர் ஆட்சியைவிட ‘அம்மா’ ஆட்சிதான் சிறந்தது. அவர் இப்ப இருந்திருந்தார்னா, இந்த அளவுக்கு நல்லது செஞ்சிருக்க முடியுமானு தெரியலை. இங்கே இந்த அஞ்சு வருஷத்துல அவ்வளவு நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. அடுத்து ‘அம்மா’ மீண்டும் ஆட்சியைப் பிடித்து இந்தச் சாதனையை முறியடிப்பார்” என்றவர் திடீரெனப் பதறுகிறார்... “அய்யோ... ரொம்ப ஸாரிங்க. சரியான பதில் எம்.ஜி.ஆர். அவர்தான் தொடர்ந்து ஆட்சியில இருந்தார். எப்படி மறந்தேன்?” - வருத்தப்படுகிறார்.

சிருஷ்டி டாங்கே:
“ `அம்மா’ இல்லைன்னா எம்.ஜி.ஆர். ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்தாங்க. ஒருத்தரை மட்டும் சொல்ல ணும்னா எம்.ஜி.ஆர்னு வெச்சுக்கோங்க. சரியா? ஐ... நான் சரியா சொல் லிட்டேன். இந்தப் பொண் ணுக்கு பாலிட்டிக்ஸ் தெரியாதுனு நினைச் சுட்டீங்களா?”
 

அடுத்த கட்டுரைக்கு