Published:Updated:

திகார் சிறையில் ஆ.ராசாவுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு

புதுடெல்லி, பிப்.22-2011: டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவை டி.ஆர்.பாலு எம்.பி. சந்தித்து பேசினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, சி.பி.ஐ. விசாரணைக்கு பின் கடந்த 17-ந் தேதி முதல் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பாராளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று திகார் சிறைக்கு சென்று ஆ.ராசாவை சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.