Published:Updated:

``நம் எனர்ஜியைக் குறைக்கும் விஷயங்களைத் தவிர்த்தாலே போதும், ஸ்ட்ரெஸ் வராது!’’ –விஜய் யேசுதாஸ் #LetsRelieveStress

``நம் எனர்ஜியைக் குறைக்கும் விஷயங்களைத் தவிர்த்தாலே போதும், ஸ்ட்ரெஸ் வராது!’’ –விஜய் யேசுதாஸ் #LetsRelieveStress
``நம் எனர்ஜியைக் குறைக்கும் விஷயங்களைத் தவிர்த்தாலே போதும், ஸ்ட்ரெஸ் வராது!’’ –விஜய் யேசுதாஸ் #LetsRelieveStress

விஜய் யேசுதாஸ், பின்னணிப் பாடகர். தன் கந்தர்வக் குரலால் பல மொழிகளில் பாடி, பல லட்சம் பேரைக் கிறங்கடித்த கே.ஜே.யேசுதாஸின் மகன். இளைய தலைமுறை நடிகராகவும் வளர்ந்து வருபவர். விஜய் யேசுதாஸ் தன் ஸ்ட்ரெஸ் பஸ்டர் குறித்து நம்முடன் பேசினார்...

''பெரும்பாலும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் இதெல்லாம் ஏற்படாத மாதிரிதான் என் மைண்ட்செட்டைவெச்சுக்குவேன். என்னைப் பொறுத்த வரைக்கும் எந்த நேரத்துல நாம டென்ஷனானாலும், அது அந்த நேரத்துல நடந்த ஒரு நிகழ்வு அவ்வளவுதான். அதனால யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படப்போறதில்லை. டென்ஷனும் ஸ்ட்ரெஸ்ஸும் நல்ல சூழ்நிலை, நல்ல நண்பர்கள் இதையெல்லாம் கெட்டுப் போறதுக்குத்தான் அது உதவும். அதனால நான் எப்பவும் என் மனசை ஒரு பாசிட்டிவ்வான போக்குலதான் வெச்சிக்குவேன். எதுக்கும் பெருசா அலட்டிக்க மாட்டேன்’’ என்றவரிடம், ``நீங்கள் நடிகரானது உங்கள் அப்பா யேசுதாஸுக்குப் பிடிக்கவில்லை. அதனால நீங்க ரொம்ப வருத்தப்பட்டீங்கனு கேள்விப்பட்டோமே...’’ என்று கேட்டோம்.

''அப்படியெல்லாம் கிடையாது. அப்பாவுக்கு மியூசிக்ல நான் நல்லா வரணும்னு விருப்பம். ஆனா, அதுக்காக நடிக்கக் கூடாதுனு அவர் சொல்லலை. அப்பாவோட அப்பா அகஸ்டியன் ஜோசப்... 1950-களில் கேரளாவில் சிறந்த மேடை நாடக நடிகராக இருந்தவர். அவர் காலத்துல, சத்தமா பாடி, நடிக்கணும். அவருக்கு மேடை நாடகத்துல ரொம்ப ஈடுபாடு இருந்தது. அதனால அப்பா நான் நடிக்கிறதுக்கு மறுப்பு எதுவும் சொல்லலை. அதுவும் இப்போ நான் நடிச்சிருக்கிற 'படை வீரன்' படத்தைப் பார்த்துட்டு `நல்லா இருக்கு’னு சொன்னார். 

பெரும்பாலும் மன அழுத்தம், பதற்றம் இதெல்லாம் எனக்கு ஏற்படாம பார்த்துக்குவேன். இன்னொரு முக்கியமான ஒரு விஷயத்தை நாம புரிஞ்சுக்கணும். நம்மோட மனசு டஸ்ட் பின் கிடையாது. தேவையில்லாத விஷயங்களை நம்முடைய தோல்விகள், ஏமாற்றங்களை அதுல போட்டு ஸ்டோரேஜ் பண்ணக் கூடாது. குறிப்பா நடந்து முடிந்த பழைய விஷயங்களைத் திரும்பத் திரும்ப அசைபோடக் கூடாது.அது நம்ம எனர்ஜி லெவலைக் குறைக்கத்தான் செய்யும். 

ஷூட்டிங், சாங் ரெக்கார்டிங்குக்குக் கிளம்பிப் போவோம். சில நேரங்கள்ல டிராஃபிக் ஜாம் ஆகி லேட் ஆகும்; ரெக்கார்டிங் கேன்சல் ஆகும். அப்போல்லாம் ஒரு பதற்றம் ஏற்படத்தான் செய்யும். அது எல்லாருக்குமே ஏற்படுறதுதான்.

சில நேரங்கள்ல காரணமே இல்லாம மைண்ட் பிளாங்க்கா இருக்கும். அப்போ பேட் மின்ட்டன், பேஸ்கட் பால், கிரிக்கெட்னு விளையாடப்போயிடுவேன். விளையாட்டு நமக்கு மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீஃப். விளையாடும்போது எவ்வளவு வளர்ந்திருந்தாலும், நாம குழந்தையாகிடுவோம். குழந்தையாகிட்டா குதூகலமும் குஷியும் தானா வந்துடும்.

எனக்கு செல்ஃப் டிரைவிங் ரொம்பப் பிடிக்கும். கார் ஓட்டும்போது மனசு ஒரு சீரான நிலைக்கு வந்துடும். அதனால நானே காரை எடுத்துக்கிட்டு லாங் டிராவல் கிளம்பிடுவேன். கேரளாவுல, கொச்சின்ல இருக்கிற எங்க வீட்டுக்குப் போவேன். இடங்கள் மாறும்போது நம் மனமும் மாறும்.

மனசுக்குள்ள பிடிச்ச பாடலைப் பாடுவேன். அதுலேயே மனசு லேசாகிடும். அப்படி இல்லைனா, மலையாளம், தமிழ், இந்தி, என எல்லா மொழிகளிலும் உள்ள சிறந்த பாடல்களை விரும்பிக் கேட்பேன். அப்பாவோட பாடல்கள் கேட்பேன். மனசுக்கு ரொம்ப இதமாக இருக்கும். அவர் பாடினதில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள்ல 'கல்யாணத் தேன் நிலா' எனக்கு ரொம்பப் பிடிக்கும். ''