Published:Updated:

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!

கற்றோருக்கு  சென்ற இடமெல்லாம் சிறப்பு!
பிரீமியம் ஸ்டோரி
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!

கல்வி

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!

கல்வி

Published:Updated:
கற்றோருக்கு  சென்ற இடமெல்லாம் சிறப்பு!
பிரீமியம் ஸ்டோரி
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!

ற்றல் முறையில் புதிய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களைப் புகுத்தி, மாணவர்களின் கல்வித்திறனை மேன்மைப்படுத்தும் தமிழகப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் ‘சிறந்த டெக் ஸ்கூல் விருதை (Best Tech School Award)’ வழங்கி கௌரவப்படுத்துகிறது... மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பெரிய எம்என்சி நிறுவனங்கள் இணைந்த கூட்டு அமைப்பான `ஐசிடிஏசிடி’ (ICTACT). இந்த ஆண்டு இவ்விருதினைப் பெற்றுள்ள மூன்று பள்ளிகளில், சென்னை எஸ்.ஜே.டி சுராணா ஜெயின் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியும் ஒன்று.

கற்றோருக்கு  சென்ற இடமெல்லாம் சிறப்பு!

இந்த விருதுக்குப் பின் இருப்பது, பள்ளியின் முதல்வர் உமா நரசிம்மமூர்த்தியின் முனைப்பு. கல்வியுடனான அவரின் பயணம், மிக நீண்டது. ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக, மாலையில் மாணவர்களுக்கு இலவச கல்விச்சேவை புரிந்ததில் ஆரம்பித்த அவரின் கற்பித்தல் மீதான அர்ப்பணிப்பு... ரஷ்யா, செஷல்ஸ், எரித்ரியா, சவுதி அரேபியா என பல நாடுகளிலும் கல்வி சார்ந்த களப்பணிகளைப் பொறுப்பேற்று வழிநடத்தும் அளவுக்கு அவரை உயர்த்தியது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை உணரவைத்தன, உமா பகிர்ந்த அவரின் அனுபவங்கள்.

‘‘பள்ளியில் படிக்கும்போது பேச்சுப்போட்டி, நாடகம் என்று துறுதுறுவென இருப்பேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே, ஆல் இண்டியா ரேடியோவில் பகுதிநேரமாக ‘சிறுவர் சோலை’ உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். சென்னை, குயின் மேரிஸ் கல்லூரியில் பி.எஸ்ஸி., கணிதம் படித்தபோது என்.சி.சி அண்டர் ஆபீஸராக இருந்தேன். இந்திரா காந்தி நேஷனல் யுனிவர்சிட்டியில் எம்.சி.ஏ முடித்துவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.

1988-ம் ஆண்டு ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர், இளைய சமுதாயத்துக்காகச் சேவையாற்றும் கல்வியாளர்களை நாடு முழுக்கத் தேர்ந்தெடுத்து, ரஷ்யாவுக்கு ‘யூத் டெலிகேட்ஸ்’ ஆக அனுப்பிவைத்தனர். அதில் ஒருத்தியான நான், 15 நாட்கள் ரஷ்ய இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தேன்.

தமிழகப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு கொண்டுவரப்பட்ட நேரம், அது மாணவர்களுக்கு எளிதாகப் புரியும்வண்ணம் ஒரு புத்தகத்தை எழுதினேன். ‘இன்டல்’ என்ற கணினி புரோகிராமில் மாஸ்டர் ட்ரெயினராக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆசிரியர்களுக்கு இலவசமாக ‘இன்டக்ரேட்டிங் டெக்னாலஜி’ என்ற பயிற்சியை வழங்கினேன்’’ என்னும் உமா, பல நாடுகளில் கல்விப்பணியாற்றி அங்கும் விருது வென்றிருக்கிறார்.

‘‘தீவு நாடான சேஷல்ஸ் (Seychelles) நாட்டின் ஐ.டி கரிகுலம் ஹெட் ஆக, அந்நாட்டின் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி அளித்தேன். அடுத்து, எரித்ரியா நாட்டில் போர் முடிந்திருந்த காலம், அங்கு கல்விப் பணியாற்றச் சென்றேன். சவுதி அரேபியாவின் அபா (Abha) மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு யுனிவர்சிட்டியில், இ-லேர்னிங் மற்றும் எக்ஸாமி னேஷன் கமிட்டிக்கு ஹெட் ஆக மூன்று ஆண்டுகள் பணியாற்றி, மூன்று ஆண்டுகளும் சிறந்த ஆசிரியருக்கான அந்நாட்டின் தேசிய விருதினை வென்றது, பெரிய சந்தோஷம்’’ என்று வியக்கவைக்கும் உமா, இன்னும் பல நாடுகளுக்கு கற்பிக்கும் பணி சார்ந்த கான்ஃபரன்ஸ்களுக்குச் சென்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்றோருக்கு  சென்ற இடமெல்லாம் சிறப்பு!

‘‘தற்போதைய கல்விச் சூழலில், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பலர், புத்தகத்தில் இருப்பதை மட்டுமே படித்து, அதிக மதிப்பெண்களைப் பெறுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். தங்களின் துறையில் ஆழ்ந்த அறிவாற்றல் இல்லாததால் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் போராட்டங்களைச் சந்திப்பதுடன், பெற்ற வேலையைத் திறம்பட செயலாற்ற முடியாமலும் திணறுகின்றனர். இந்தத் தவறு, அடிப்படையிலேயே திருத்த வேண்டிய ஒன்று.

எங்க பள்ளியில் உள்ள டேப்லெட் லேப்பில், ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து, இன்டர்நெட் வாயிலாக புதிய தகவல்களைத் தெரிந்துகொள்வார்கள். கற்றுக்கொண்ட தகவல்களை, ஒவ்வொரு மாணவரும் கட்டாயமாக செமினார் எடுக்க வேண்டும் என்பதுதான் ஹைலைட். அடுத்ததாக, எங்கள் பள்ளி, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் உள்ள பள்ளிகளுட னும் டை-அப் வைத்துள்ளது. இதன் மூலம், எங்கள் மாணவர்கள் மற்ற நாடுகளில் உள்ள மாணவர்களுடன் ஸ்கைப் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சுழல், கலாசாரம், உணவு முறைகள் போன்ற விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுவார்கள், விவாதிப்பார்கள்.

மாணவர்களுக்குப் புரியாத பாடங்களில், எந்த அம்சம் புரிந்துகொள்ள சிக்கலாக இருக்கிறதோ அதை கீ வேர்டுகளின் மூலம் எளிமையாகக் கற்றுத்தரும் ‘நேர்வானிக்ஸ்’ (Nervanix) என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்துகிறோம்.

மொத்தத்தில், 21-ம் நூற்றாண்டுக்கான குளோபல் சிட்டிசன்களாக மாணவர்களை உருவாக்குவதே எங்களுடைய இலக்கு. அதற் கான அங்கீகாரமே, இந்த விருது. பள்ளியின் செகரெட்டரி பி.சுராணா, அகாடமி டைரக்டர் ஜெயந்தி பாலச்சந்திரனின் உழைப்பும் இதில் அதிகம்’’ எனும் உமா, பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கிய ‘இன்டர்நேஷனல் ஸ்கூல் விருது’, ‘மைக்ரோசாஃப்ட் இன்னோவேட்டிவ் விருது’ என தங்கள் பள்ளி பெற்றிருக்கும் மற்ற விருதுகளையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

பள்ளியின் மாணவர்களிடம் பேசினோம். வீணாகும் உணவை கம்போஸ்ட் உரமாக மாற்றுவது பற்றி கண்கள் விரியச் சொல்கிறது ஒரு குட்டிப்பூ. டேப் லேப்பில் தான் உலக வெப்பமயமாதல் பற்றித் தெரிந்துகொண்ட தகவல்களைத் தொகுத்து ஐந்தாம் வகுப்பு சிறுமி எடுத்த செமினாரில் நாம் அசந்துநிற்க, பெருமை உமா முகத்தில்!
 

கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்