உங்கள் வீடு அருகே இப்போது என்ன மாதிரியான ஹோட்டல்கள் இருக்கின்றன? ஐந்தில் ஒன்று நிச்சயம் அரேபியன் ஹோட்டலாக இருக்கும். 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் சைனீஸ் உணவகங்கள் பெருகியதைப்போல இப்போது அரேபியன், பார்பிக்யூ, மெக்ஸிகன், இத்தாலியன் உணவகங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன.

இட்லி, கல்தோசை, பரோட்டா என நம் இரவு உணவுமுறையை முதலில் தலைகீழாக மாற்றியது சைனீஸ் படையெடுப்பு. ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், சில்லி சிக்கன் என சைனீஸ் உணவுகள் பலரது விருப்பமாக மாறி, தெருவுக்கு இரண்டு ஃப்ரைடு ரைஸ் கடைகள் முளைத்தன. இதில் சுவைக்காகச் சேர்க்கப்படும் ‘மோனோ சோடியம் க்ளுட்டமேட்’ எனும் உப்பு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்கிற விழிப்புஉணர்வு பெருக ஆரம்பித்ததும் ஃப்ரைடு ரைஸ் கடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

இப்போது அராப் சீஸன். முழுக் கோழிகள் கொத்துக்கொத்தாகக் கம்பிகளில் குத்தப்பட்டு, கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டு, நம் நாக்கைச் சுழல வைக்கின்றன. நெருப்பில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடன், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டுப் பரிமாறப்படுகின்றன. ஹோட்டல்களின் தரநிலைக்கு ஏற்ப ரூபாய் 100-ல் இருந்து ரூபாய் 1,000 வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதை ருசிபார்க்கும் கூட்டத்தில் இருக்கும் பெரும்பாலானோர் இளைஞர்கள். இன்று அதிக அளவில் உண்ணப்படும் இந்தத் தந்தூரி கிரில்டு சிக்கன் எப்படித் தயாராகிறது தெரியுமா?

இறைச்சியில் மசாலா தடவி, குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கப்படுகிறது. செயற்கை நிறமூட்டிகள், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால் அதில் பிரச்னை இல்லை. ஆனால், எண்ணெய், மசாலாப்பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்களைச் சேர்த்து வாட்டும்போதுதான் பிரச்னை.

அராபுக்கு அடுத்தபடியாக தற்போது ட்ரெண்டாகிவருவது ‘தாய் உணவு’. பட் தாய் நூடுல்ஸ் (Pad Thai noodles), பழுக்காத பப்பாளி சாலட் (Ray papaya salad), கிரீன், யெல்லோ, ரெட் கறி (Green, yellow, red curry), சாட்டே நூடுல்ஸ் (Satay Noodles), லெமன்கிராஸ் சூப், சிக்கன், மீன் போன்ற உணவுகளில் வேர்க்கடலை சேர்ப்பது என புதிய காம்பினேஷன்களில் புதுச்சுவையோடு இருப்பதால் தாய் உணவுகள் பிரபலமாகிவருகின்றன.

``தேங்காய்பால், வேர்க்கடலை, மாங்காய், இஞ்சி, லெமன் கிராஸ் போன்ற சுவையூட்டிகளைச் சேர்த்து தாய் உணவுகள் புதுச்சுவையில் செய்யப்படுகின்றன. இந்த வகை உணவில் எண்ணெய் பயன்பாடு குறைவு என்பதால், இது ஹெல்த்தியான டயட்” என்கிறார் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

இதேபோல், ஜப்பானிய உணவுகளில் சுஷி (Sushi) மிகவும் பிரபலமானது. நம்மூரில் கொழுக்கட்டைகளை வாழை இலையில் வைத்து வேகவைப்பதுபோல சமைக்காத மீனை மெல்லியதாக நறுக்கி, இலையில் வைத்து சுருட்டி ஆவியில் வேகவைக்கப்படும். ஒரு வாய் சாப்பாடு, கொஞ்சம்போல நூடுல்ஸ், ஒரு டம்ளர் ஜூஸ், கிண்ணம் நிறைய சூப் என மல்ட்டிபேக்டு காம்போதான் சுஷி. இதில் புளி, காரம் இருக்காது. கடல்பாசிகள் அதிகம் சேர்க்கப்படும். எண்ணெய் பயன்பாடு குறைவு என்பதால், ஹெல்த்தி உணவுகள் லிஸ்ட்டில் ஜப்பானிய உணவுகளையும் சேர்க்கலாம்.

வட சென்னையில் பிரபலமான அத்தோ, பேஜோ, மொய்ங்கா, சீஜோ உள்ளிட்ட பர்மா உணவுகள் உடலுக்கு ஊறு விளைவிக்காதவை என்றாலும், அவை தயாராகும் விதம், விற்கப்படும் இடத்தின் சுகாதாரம் ஆகியவற்றையும் கணக்கில்கொள்ள வேண்டியது அவசியம்.

``செயற்கை உப்பு, நிறமி, சுவையூட்டிகள் உடலுக்குக் கேடு விளைவிப்பவை. தந்தூரி, கிரில் சிக்கன், பார்பிக்யூ சிக்கனில் சேர்க்கப்படும் இவை அல்சரில் தொடங்கி பல பாதிப்புகளை ஏற்படுத்தும். தொடர்ந்து இந்த உணவுகளை உண்ணும்போது அது புற்றுநோயில்கூட முடியலாம். சுகாதாரமற்ற இறைச்சிகளும் இங்கே அதிகம் புழங்குகின்றன. வெளிமாநிலங்களில் இருந்து முறையாகப் பதப்படுத்தப்படாத மற்றும் மீந்துபோகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பதப்படுத்தி, அதன் பின்னர் சுடச்சுட நம் தட்டில் வைத்துவிடுகின்றனர். அந்தக் கடைகளில் எப்போதும் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. மசாலா தடவப்பட்ட கோழிகள், ஒருபக்கம் ஃப்ரீஸரில் உலர்ந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரேநாளில் விற்றுத் தீர்ந்துவிடுவது இல்லை. எப்போது வெட்டப்பட்டது எனத் தெரியாத இறைச்சியைத்தான், பல நேரங்களில் நாம் வாங்கி ருசிக்கவேண்டியிருக்கிறது. தவிர, அதில் பயன்படுத்தப்படும் எண்ணெயால் உண்டாகும் கெட்ட கொழுப்பினால் இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்னைகள் உருவாகலாம்” என்று எச்சரிக்கிறார் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ்.ஜி. பாலமுருகன்.

விசா, பாஸ்போர்ட், பயணச் செலவுகள் இல்லாமல் வெளிநாட்டு உணவுகளை நம் ஊரிலேயே ருசிபார்க்க முடிவதுதான் இந்த வகை உணவுகளின் மிகப்பெரிய ப்ளஸ். அதேசமயம் இந்த வகை உணவுகளை தொடர்ந்து அதிக அளவில் எடுத்துக்கொள்வதும் ஆபத்துதான்!