யாருக்குதான் இல்லை சொந்த வீடு ஆசை? கோஸ்ட்டா ரிக்கா நாட்டைச் சேர்ந்த மேனுவல் பாரந்தீஸ் என்ற இவருக்கும் சொந்த வீடு ஆசை வந்தது. அதை அவர் எப்படிச் செயல்படுத்தினார் என்பதுதான், வேற லெவல். பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி, 2,000 சதுரஅடி வீடு ஒன்றை அமைத்திருக்கிறார். தரைக்கு மேலே வாசல் மட்டும்தான். மொத்த வீடுமே பூமிக்கு அடியில்.

இந்தச் சுரங்க வீட்டை, 12 வருடங்களில் தனி மனிதனாக உருவாக்கியிருக்கிறார் பாரந்தீஸ். எந்தவிதமான பெரிய இயந்திரங்களையும் பயன்படுத்தாமல், இரண்டு சாதாரண மண்வெட்டிகளைக்கொண்டே இதைச் சாதித்திருக்கிறார். `வீடு வாங்க பணம் இல்லாமல் இதைச் செய்தாரோ!' என அவரைக் கேலி செய்தவர்களுக்கு, பாரந்தீஸ் சொல்லும் காரணங்கள் மரண மாஸ் ரிப்ளை.

`பருவநிலை மாற்றம், ஒலி மாசு, காற்று மாசு என இந்த உலகம் மோசமாகிக்கொண்டே வருகிறது. இவற்றில் இருந்து தப்பிக்கவே இந்த வீட்டைக் கட்டினேன்’ என்கிறார் பாரந்தீஸ்.

சுரங்க வீடு என்றால், ஆதிவாசிகள் காலத்து வீடு என நினைத்துவிட முடியாது. பாரந்தீஸுக்கு, கலை ஆர்வம் அதிகம். வீட்டின் சுவர்களில் அழகிய ஓவியங்களையும் சிற்பங்களையும் உருவாக்கி, எக்ஸ்ட்ரா அழகு சேர்த்திருக்கிறார்.

இந்தச் சுரங்க வீட்டில், மொத்தம் மூன்று படுக்கை அறைகளும், ஒரு கிச்சனும், பெரிய ஹால் ஒன்றும், தியான அறை ஒன்றும் உண்டு.

வீட்டின் பெயர் `டோப்பாலேண்டியா' (Topolandia). ஆர்வம் இருக்கும் சுற்றுலா பயணிகளை மட்டுமே தனது வீட்டுக்குள் விருந்தினராக அனுமதிக்கிறார் பாரந்தீஸ். அவர்களுக்கு டோப்பாலேண்டியா உருவான கதையை சுவாரஸ்யமாக விவரிக்கிறார்.

இன்னும்கூட ஓய்வெடுக்காத பாரந்தீஸ், 2,000 சதுரஅடி வீட்டை மேலும் பெரிதாக்கி, ஒவ்வொரு சதுரஅடியையும் அழகாக்கிக் கொண்டே இருக்கிறார். `வாழும் வரை என் வீட்டின் ஒவ்வொர் அங்குலத்தையும் மெருகேற்றுவேன்' என்கிறார்.