Published:Updated:

கா... க்கா... க்க்கா!

தா.லின் மேன்சன்

கா... க்கா... க்க்கா!
கா... க்கா... க்க்கா!

தன் பிஞ்சு குழந்தைகளின் கொஞ்சல் மொழியை, நடைபயிலும் அழகை ரசித்து மகிழவே நேரம் இல்லை சென்னையில் பலருக்கு. இவர்களின் நடுவே காக்கைக் குடும்பம் ஒன்று கூடு கட்டியதில் தொடங்கி அவை முட்டையிட்டு குஞ்சு பொறித்து, அந்தக் குஞ்சுகள் வானில் பறந்த கணம் வரை தன் செல்போன் கேமரா மூலம் புகைப்படங்களாக ஆவணப்படுத்தி இருக்கிறார் நகைச்சுவை நடிகரும் புகைப்படக் கலைஞருமான ஐயப்பன் கோபி. அவரை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் சந்தித்தேன்.

'நான் சின்னப் பையனா இருந்தப்ப தாத்தா, அப்பா எல்லாம் சாப்பிடறதுக்கு முன்ன காக்காவுக்கு சாதம் வைப்பாங்க. 'ஏன்?’னு கேட்டா 'அதுங்க நம்ம பித்ருக்கள்’ம்பாங்க. ஆனா, இங்க அதுங்களை தங்களோட வீட்டு மரத்துல கூடு கட்டக்கூடவிட மாட்றாங்க. அப்படியே கூடு கட்டினாலும் அந்த மரக் கிளையையே ஒடிச்சிவிட்ருவாங்க. மூணு மாசத்துக்கு முன்ன எங்க வீட்டு முருங்கை மரத்துல ஒரு காக்கை ஜோடி கூடு கட்டத் தொடங்கினப்ப, அதை எல்லாரும் கலைக்கச் சொன்னாங்க. நான் கூடவே கூடாதுனு சொல்லிட்டேன். முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கிற வரை மரத்துல இருந்து முருங்கைக்காய், கீரை பறிக்கக் கூடாதுனும் சொல்லிட்டேன்.

கா... க்கா... க்க்கா!

பிறகு காலை, மாலைனு டெய்லி எங்க வீட்டு ஜன்னல் வழியா அந்தக் கூடை போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். ஒரு வீடு கட்ட நாம எவ்வளவு கஷ்டப்படுறோமோ அதுக்கு நிகரா கூடு கட்ட அதுங்க படுற கஷ்டத்தைப் பார்த்தேன். ஆரம்பத்துல காக்கைங்க ரெண்டும் என்னைப் பார்த்து பயந்து பறக்க ஆரம்பிச்சுதுங்க. ஆனா, நாளாக நாளாக என்னோட பழக ஆரம்பிச்சிடுச்சுங்க. ரெண்டும் ஜன் னல்ல வந்து உட்காரும். சாதம் வெச்சா தின்னுட்டு மறுபடியும் கூட்டுக்குப் போயிடும். முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பிச்சதும் ரொம்ப கவனமா கவனிச்சு போட்டோ எடுத்தேன். 

கா... க்கா... க்க்கா!

முதல் குஞ்சு வெளி வந்ததை என் மனைவிதான் பார்த்துட்டு சொன்னாங்க. அதையும் போட்டோவா பதிவு பண்ணினேன். அதை போட்டோ எடுக்கும்போது மனசுல அவ்வளவு சந்தோஷம். இப்படி வரிசையா நாலு குஞ்சு கள் பொறிச்சுச்சு. பிறகு கொஞ்சம் கொஞ்சமா அந்தக் குஞ்சுங்க நடக்க ஆரம்பிச்சது. அந்த ஜோடி காக்கைங்க வெளியில போய் எடுத்துட்டு வந்த இரையைக் குஞ்சுகளுக்கு ஊட்டுற அழகே அலாதியா இருக்கும். அதே மாதிரி அந்தக் குஞ்சுகள் முதன்முதலா வெளியே பறந்து போனதைப் பாக்குறப்ப, ஏதோ என் புள்ளை பெரிய நடிகனா வந்த மாதிரி சந்தோஷம்.

கா... க்கா... க்க்கா!

கூடு கட்டுனதுல இருந்து குஞ்சு பெருசாகி அதுங்க பறக்கத் தொடங்கினது வரை மூணு மாசத்துக்கும் மேல கிட்டத்தட்ட 700 போட்டோஸ் எடுத்திருக்கேன். ஏதோ எம் புள்ளைங்களை போட்டோ எடுத்த மாதிரி மனசுக்கு நிறைவா இருக்கு'' என்கிறார் ஐயப்பன் கோபி! 

கா... க்கா... க்க்கா!

படம்:பா.காயத்ரி அகல்யா

அடுத்த கட்டுரைக்கு