Published:Updated:

பயணிகள் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 10 பைசா உயரும்?

பயணிகள் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 10 பைசா உயரும்?
பயணிகள் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 10 பைசா உயரும்?
பயணிகள் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 10 பைசா உயரும்?

புதுடெல்லி: ரயில் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 5 பைசா அல்லது 10 பைசா கட்டணம் உயர்த்த வேண்டியிருப்பதாக ரயில்வே இணை அமைச்சர் சூர்யபிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"இந்திய ரயில்வேயில் பயணிகள் பிரிவில் மட்டும் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

##~~##
இதனால் வரும் பட்ஜெட்டில் ரயில் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 5 அல்லது 10 காசு அதிகரிப்பதன் மூலம் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். அவ்வாறு கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ரயில்வேத் துறை நலிவடையும் நிலை ஏற்படும்" என்றார்.
எனினும் ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் உயர்த்தும் திட்டமுள்ளதாகவும், இதை ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பதா அல்லது அதற்கு முன்பாக அறிவிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.