என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

நாய்களிடம் வழவழன்னு பேசக் கூடாது!

வீ.கே.ரமேஷ்

டல் நல ஆலோசகர், சட்ட ஆலோசகர் போல நல்ல நாய்களை வாங்கவும் பயிற்சி கொடுக்கவும் ஆலோசகராக  செயல்படுகிறார் சேலத்தைச் சேர்ந்த ஏ.வி.ஆர்.சக்தி நாதன்.

நாய்களிடம் வழவழன்னு பேசக் கூடாது!

##~## ''நாய்கள் பலவகை. என்ன காரணத்துக்காக நாய் வாங்கணும்ங்கிறது முக்கியம். சொல்ற வேலையை செய்ய லேபர் டாக், பார்த்தாலே பயப்பட வைக்க கிரேடன் டாக், செல்லம் கொஞ்ச பொமரேனியன், டெரரா இருக்க ராட்வீலர், வேட்டைக்கு ராஜபாளையம்... இப்படி நிறைய வெரைட்டி இருக்கு. நாய்க் குட்டி வாங்குறது சாதாரண விஷயம் இல்லை. அது பால் குடிக்குற விதம், முக அமைப்பு, பல் வரிசை, காது விறைப்பு, கால் நகத்தின் எண்ணிக்கை, உடல் அமைப்பு இதை எல்லாம் பார்த்து குட்டியைத் தேர்வு செய்யணும். நாய் குட்டிகளுக்கு மூணு மாசத்துல இருந்தே பயிற்சி கொடுக்கலாம். அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையும்தான் நாய்களுக்குப் பயிற்சி கொடுக்க ஏற்ற நேரம். இந்த நேரங்களில்தான் நாய்களின் புலன்கள் ஷார்ப்பா இருக்கும். மத்த நேரங்களில்  தூங்கி வழியும்.

ஒரு நாய்க்கு 50 நாட்கள் பயிற்சி நடக்கும். முன்னங்காலை தூக்கி உட்கார்வது, நீட்டிப் படுப்பது, தலையை தரையில் வைத்து மரியாதை செய்வது, படுத்து உருளுவது, ஒரு பொருளை கண்ணுக்குத் தெரியாமல் வீசி எறிந்தாலும் அதை எடுத்துட்டு வர வைக்குறதுன்னு பல பயிற்சிகளைக் கொடுக்குறோம்!

நாய்களுக்கு நாம கொடுக்குற கட்டளைகள் சிட் டவுன், ரன், ரோல், வாக், பேக் வாக்... இதுமாதிரி ஷார்ட்டா  இருக்கணும். அதுகிட்டபோய் வழவழன்னு பேசிட்டு இருந்தா ஒண்ணும் புரியாது. குழம்பி ஓடிடும். இல்லை கடிச்சு வெச்சிடும்'' எச்சரிக்கிறார் சக்திவேல்!

படம்: க.தனசேகரன்