Published:Updated:

இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?

இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: ஜெ.வேங்கடராஜ்

இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?

“முடிவுபண்ணிட்டீங்க. வேண்டாம்னு சொன்னாலும் விட மாட்டீங்க. ம்ம்... கேளுங்க” என தம்ஸ்அப் காட்டுகிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

``தலை சுத்தி மயக்கம் வர்றது மாதிரி கேள்வி எதுவும் கேட்டுற மாட்டீங்கள்ல?’’ - சிரிக்கிறார் கவிஞர் விக்ரமாதித்தன்.

“நான் தயாரிச்ச ‘சதுரங்க வேட்டை’ படத்துக்கு விகடன்ல அதிகமான மார்க் கொடுத்ததை நினைச்சு, தினமும் சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். அதே மாதிரி இதுலயும் எனக்கு நிறைய மார்க் போட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்” - இது நடிகர் மனோபாலா.

“ஆமா... ஜி.கே கொஸ்டீன்ஸுக்கு எனக்குப் பதில் தெரியும்னு எந்தத் தைரியத்துல முடிவு பண்ணீங்கஜி? சரி... நான் பல்பு வாங்கத் தயாரா இருக்கேன். ஆட்டத்தை ஆரம்பிங்க” என ஆர்வமாகிறார் காமெடி நடிகர் சென்ராயன்.

“அரசியலில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அதிகமா... சசிகலா குடும்ப உறுப்பினர்கள் அதிகமா?”

பதில்: கருணாநிதி குடும்பம்.

ஷாலினி:
“அய்யோ! ஏங்க... போன வாரம்தான் ரத்தத்தின் ரத்தங்கள்... அதாங்க அ.தி.மு.க-காரங்க என் க்ளினிக்குக்கு வந்து ‘தேர்தல் நிதியா 12,000 ரூபாய் கொடுங்க’னு ஒரே கலாட்டா பண்ணினாங்க. நான் கொடுக்கவே முடியாதுனு அனுப்பிட்டேன். இப்ப இதுக்கு பதில் சொல்லி, திரும்பவும் வந்துடப் போறாங்க” என ஜெர்க்கானவர், “சரி... எனக்குத் தெரிஞ்ச பதிலைச் சொல்றேன். கருணாநிதி ஃபேமிலி ஆட்களைவிட சசிகலா ஃபேமிலி ஆட்கள்தான் அதிகம். கருணாநிதி ஃபேமிலி வெளியே தெரியுது; சசிகலா ஃபேமிலி தெரிய மாட்டேங்குது. தட்ஸ் இட்.”

இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?

விக்ரமாதித்தன் : ``ரொம்பக் கஷ்டமான கேள்வியா இருக்கேப்பா...’’ எனச் சிரித்தவர், ``ஒவ்வொருத்தருக்கும் பதில் நிச்சயமாத் தெரிஞ்சிருக்கணும். இப்ப எனக்குத் தெரியாம இருக்கிறது கொஞ்சம் வருத்தமா இருக்கு. நம்மை ஆள்கிறவர்களைப் பற்றி தெரிஞ்சிவெச்சுக்கிறது நல்லதுதானே!’’

மனோபாலா :
“நான் அ.தி.மு.க-வுல இருக்கேன். அப்ப என்ன பதில் சொல்வேன்? கருணாநிதி குடும்பம்தான் அரசியலில் பெரிசு. அவங்க ஆட்சியில் இருக்கும்போதுதான் அவங்க ஃபேமிலி போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்குக் கொடுத்து தேடிப்போய் ஆப்பு வெச்சுக்கிட்டாங்க. இப்ப இதையே குற்றச்சாட்டா எல்லாரும் சொல்றாங்க.”

சென்ராயன்: “பாலிட்டிக்ஸ் பக்கமே எட்டிப்பார்க்காத சென்ராயன்கிட்ட இந்தக் கேள்வியா? இவங்க ரெண்டு குடும்பத்தைவிட எங்க சினிமா குடும்பம்தான் ரொம்ப ரொம்பப் பெருசு. அப்பாடா... எப்படி எஸ்கேப் ஆனேன் பார்த்தீங்களா?”

“இரண்டு கேப்டன்களில் எந்த கேப்டன் பெஸ்ட்... விஜயகாந்த், தோனி?''

பதில்: உங்க சாய்ஸுக்கே விட்டுர்றோம் மக்களே...

ஷாலினி: “இப்போ உள்ள சூழ்நிலையைப் பார்த்தா தோனிதான் பெஸ்ட். இந்திய கிரிக்கெட் டீமை சூப்பரா வழிநடத்தி வெற்றி பெறவைக்கிறார். விஜயகாந்தும் அவர் கொண்டுபோற டீமை வெற்றிபெற வெச்சார்னா வேணா, பெஸ்ட் கேப்டனா... இல்லையானு யோசிக்கலாம்.”

விக்ரமாதித்தன்
: ``கேப்டன் தோனிதான். நான் கிரிக்கெட் பார்க்க மாட்டேன். கிரிக்கெட் பத்தியும் அவ்வளவா தெரியாது. ஆனா, கேப்டன் தோனியைப் பற்றி நிறையப் பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். அதுவும் இந்தியா மாதிரி ஒரு நாட்டுல கேப்டன் ஆகிறது எல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். அப்புறம் `கேப்டன்' விஜயகாந்த் பெஸ்ட் கேப்டன் இல்லைனு நான் சொல்லலை. அதையும் குறிப்பிட விரும்புகிறேன்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?

மனோபாலா: “இப்ப நீங்க எல்லாம் `ப்ரோ’, `ட்யூட்’னு கூப்பிடுறீங்க. அப்ப நாங்க பலரையும் `தலைவா’, `பாஸ்’, `அண்ணா’னு கூப்பிடுவோம். அப்படித்தான் விஜயகாந்த்தை நாங்க பாசமா ‘கேப்டன்’, ‘கேப்டன்’னு கூப்பிட்டுட்டு இருப்போம். அப்படித்தான் அவர் பேருக்கு முன்னால் ‘கேப்டன்’ என்ற சொல் வந்தது. வரலாறு முக்கியம்னுதான் இந்தத் தகவலை உங்களுக்குச் சொல்றேன். ஆனா, ரெண்டு கேப்டன்ல எனக்குப் பிடிச்சது தோனிதான்.   மத்த கேப்டனைப் பத்தி நான் ஒண்ணும் சொல்ல விரும்பலை.”

சென்ராயன்
: “அண்ணா... ஏன்ன்னா... ஏன்? நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா? இப்படி வலைவிரிச்சு சிக்கவைக்கிறீங்களே. இருங்க யோசிச்சுத்தான் பதில் சொல்வேன்” என அடம்பிடித்து யோசித்தவர், “சூப்பர்... பாயின்ட் பிடிச்சுட்டேன். ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கிற தோனியும் பெஸ்ட்தான்; ஹெலிகாப்டர் மாதிரி பறந்து பறந்து அடிக்கிற விஜயகாந்த்தும் பெஸ்ட்தான். எப்படி நம்ம டைமிங் ரைமிங்?”

“2016-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?”

விடை: கோவா தலைநகர் பனாஜி.

ஷாலினி:
“டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை, திருவனந்தபுரம்... இத்தனை பேரு எல்லாம் சொல்லக் கூடாதா? இந்த ரூல்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் எல்லாம் முன்னாடியே சொல்லலையே நீங்க. போங்கு ஆட்டம் ஆடுறீங்க. சரி, நீங்களே பதிலைச் சொல்லிடுங்க.”

விக்ரமாதித்தன்:
``பத்திரிகைளுக்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தமே கிடையாது. என் வாழ்க்கையே வேற. இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாம போகக் கூடாதுனுதான் டீ கடைக்குப் போகும்போது, அங்கே இருக்கிற பத்திரிகையை சும்மா புரட்டிப்பார்ப்பேன். ஆனா, இந்த மாநாட்டைப் பத்தி நான் கேள்விப்படலை. மாநாடு சிறக்க என் வாழ்த்துகள்.’’

மனோபாலா
: “ம்ம்... எனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாதுனுதானே நினைக்கிறீங்க. பதில் தெரியுமே... இந்த வருஷம் பிரிக்ஸ் மாநாடு கோவாவுல நடக்குது.”

இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?

சென்ராயன்: “என்ன தலைவா சொல்றீங்க... ‘விக்ஸ்’க்கு எல்லாம் மாநாடு நடத்த ஆரம்பிச்சுட்டாங்களா? விக்ஸ் ஆக்‌ஷன் 500, விக்ஸ் மிட்டாய், விக்ஸ் தலைவலி மாத்திரைதான் கேள்விப்பட்டிருகேன். இப்பதான் புதுசா ‘விக்ஸ் மாநாடு’ கேள்விப்படுறேன்” என்றவரிடம் மீண்டும் கேள்வியைத் தெளிவாகச் சொல்லி கேட்டால், “பிரிக்ஸ்ன்னா தமிழில் ‘செங்கல்’னு நினைக்கிறேன். செங்கலுக்கு எதுக்கு மாநாடு நடத்துறாங்க. நாட்டுல ஒண்ணுமே புரிய மாட்டேங்குது!”

“பிரதமர் மோடிக்கு, எந்த நாட்டில் மெழுகுசிலை வைக்கப்போகிறார்கள்?”

பதில்: இங்கிலாந்து, மேடம் டுஸாட்ஸ் மியூசியம்.

ஷாலினி: கேள்வியை முடிக்கும் முன்னரே வேகமாகப் பதில் வருகிறது “டுஸாட்ஸ் மியூசியம். லண்டன்ல இருக்கு. இதையும் சோஷியல் மீடியாவில கிண்டல் அடிச்சுட்டிருந்தாங்க.”

விக்ரமாதித்தன்:
``இதுவே ஏதாவது கவிஞர்களுக்குச் சிலை வெச்சிருந்தாங்கனா சந்தோஷப்படுவேன். அரசியல்வாதிகளுக்குச் சிலை வைக்கும் செய்தியைத் தெரிஞ்சுட்டு நான் என்ன செய்யப்போறேன்?’’
 
மனோபாலா
: “அட... இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியும்ப்பா... ‘சாடூஸ் அல்லது சடுஸ்’னு ஏதோ பேர் வரும். நான் லண்டன்ல அந்த மியூசியத்துக்குப் போயிருக்கேன். பாதியைச் சுத்திப் பார்க்கவே ஒரு நாள் ஆகிருச்சு. அங்கே நம்ம இந்திரா காந்தி, அமிதாப் பச்சன்னு பலரோட சிலைகளை வெச்சிருக்காங்க. இப்ப மோடி சிலையும் வைக்கப்போறது நமக்கு எல்லாம் ரொம்பப் பெருமைதானே?!”

இரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்?

சென்ராயன்: “அவர் ஊர் டெல்லியிலதான் வெச்சிருப்பாங்க. அந்த ஊர் மக்களுக்கு நிறைய நல்லது பண்ணியிருப்பார். அதனால சிலை வைக்கிறாங்க.”