என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

திறமைக்கு திறக்கும் வாசல்!

திறமைக்கு திறக்கும் வாசல்!

ல்லாத் துறைகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் திறமை மிக்க எத்தனையோ கலைஞர்கள் முடங்கிப்போய் இருக்கிறார்கள். ஓவியத் துறையில் அப்படி முடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இளம் ஓவியர்களுக்கு தனது கேலரியில் இலவசமாக ஓவியங்களை வைக்க அனுமதித்து வருகிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் குமரன் ஆர்ட் கேலரி வைத்து இருக்கும் ஜெகநாதன்!

திறமைக்கு திறக்கும் வாசல்!

##~##''ஒன்பது ஆண்டுகளாக ஆர்ட் கேலரி நடத்தி வருகிறேன். இதுபோன்ற பிரபலமான ஆர்ட் கேலரிகளில் ஓவியங்களை வைக்க ஒருநாள் கட்டணமாக ஆயிரக்கணக்கில் வசூலிப்பார்கள். நானும் கட்டணம் வசூலித்துதான் வருகிறேன். இங்கு வரும் இளம் ஓவியர்கள் பலர் மிகவும் அருமையான ஓவியங்களை வரைந்து இருப்பார்கள். ஆனால், பிரபல ஆர்ட்கேலரி களில் வைக்கும்போதுதான் அவர்களின் திறமை வெளி உலகத்துக்குத் தெரியும். அவர் களும் பிரபலம் அடைவார்கள். ஆனால், வசதி இல்லாத காரணத்தால் திறமையான பல ஓவியக் கலைஞர்கள் முடங்கிவிடுகிறார்கள்.

அப்போதுதான் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் என்ன... என்ற எண்ணம் தோன்றியது. கடந்த ஆறு மாதங்களாக இந்தத் திட் டத்தைச் செயல்படுத்திவருகிறேன். இளம் ஓவியர்கள் ஒரு வாரம் எனது கேலரியில்இலவச மாக அவர்களின் ஓவியங்களைக் கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைத்துக்கொள்ளலாம். விற்பனைத் தொகையில் ஒரு பைசாகூட எனக்குக் கொடுக்கத் தேவை இல்லை. இந்த வாய்ப்பு ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே. இந்தத் திட்டத் தால் பல திறமையான ஓவியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது...'' என்கிறார் புன்னகையுடன்!

கட்டுரை, படங்கள்: த.சித்தார்த்