Published:Updated:

டெலிவரி ரோபோ! - On the way...

டெலிவரி ரோபோ! - On the way...
பிரீமியம் ஸ்டோரி
டெலிவரி ரோபோ! - On the way...

வால்டர் ஒயிட்

டெலிவரி ரோபோ! - On the way...

வால்டர் ஒயிட்

Published:Updated:
டெலிவரி ரோபோ! - On the way...
பிரீமியம் ஸ்டோரி
டெலிவரி ரோபோ! - On the way...

இனி உங்கள் வீட்டுக்கு டெலிவரி பாய்ஸுக்குப் பதிலாக டிங்... டாங்... என டெலிவரி ரோபோ வந்து நிற்கலாம். இந்தக் குள்ளமணி ரோபோக்களிடம் ‘என்னய்யா... பீட்சா ஆறிப்போயிருக்கு?’ என்றோ, ‘போனுக்குப் பதிலா செங்கல் இருக்கு?’ என்றோ சண்டை எல்லாம் போட முடியாது. வேண்டுமானால், அந்தச் செங்கல்லால் அதன் தலையில் ஒரு போடு போடலாம். ஆனால், அதற்கு வலிக்காது.

ன்லைனில் பொருட்களை விற்கும் நிறுவனங்கள், மனிதர்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்வதற்குப் பதிலாக இப்போது ரோபோக்களைக் கொண்டு டெலிவரி செய்ய களம் இறங்கிவிட்டன. டெலிவரி பாய்ஸுக்கான சம்பளத்தை நிறுத்தினால் லாப விகிதத்தைக் கூட்டலாம் என்பதால், தானியங்கி டெலிவரி தொழில் நுட்பங்களை பல காலமாக முயற்சிசெய்துகொண்டிருந்தார்கள். கடைசியாக, மும்பையில் ஒரு பீட்சா கம்பெனி, வானில் பறந்துபோய் டெலிவரி செய்யும் டிரான்களை (Drones) முயற்சி செய்தது. ஆனால், அதுவும் அதிகம் செலவு வைத்ததால் தொடரவில்லை. இதோ, டெலிவரி ரோபோக்கள் வந்திருக்கின்றன. அமெரிக்காவின் ஸ்டார்ஷிப் நிறுவனத்துக்காக, அடி ஹெய்ன்லா (Ahti Heinla), ஜனுஸ் ஃப்ரிஸ் (Janus Friis) என்கிற இருவர்தான் இதை வடிவமைத்திருக்கி றார்கள். இவர்கள் ஸ்கைப் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த டீமில் வேலைபார்த்தவர்கள்.

`நகரத்தின் எந்த மூலைக்கும் இந்த டெலிவரி ரோபோக்கள் மூலம் அரை மணி நேரத்தில் டெலிவரி செய்துவிட முடியும்' என்கிறார்கள். பொதுவாக ரோபோ என்றாலே, மனித உருவத்திலான ஓர் இயந்திரம்தான் நம் மனதில் தோன்றும். இந்த ரோபோ பார்ப்பதற்கு, வெள்ளை பெயின்ட் அடித்த  ட்ரங்கு பெட்டிபோல் இருக்கிறது. 

டெலிவரி ரோபோ! - On the way...

இதன் உள்ளே ஒன்பது கிலோ அளவுக்குப் பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். எலெக்ட்ரானிக் பூட்டு போடப்பட்டிருப்பதால், உரியவர்களால் மட்டும்தான் திறக்கவும் மூடவும் முடியும்.
`ஒவ்வொரு ரோபோவும் ஆறு சக்கரங்கள் கொண்டது. தெருமுனை ஆட்டோக்காரர்களிடம் அட்ரஸ் கேட்காமல், தானாகவே ஜி.பி.எஸ் உதவியுடன் வழியைக் கண்டுபிடித்து வீட்டை அடையக்கூடிய செல்ஃப் டிரைவிங் திறன் கொண்டவை. அதற்காக எப்போதும் 3ஜி வசதி ஆக்டிவாக இருக்கும். இது மணிக்கு மூன்று கி.மீ வேகத்தில் நகரக்கூடியது என்பதால், டெலிவரிக்கு கொஞ்சம் கூடுதலாக டைம் எடுத்துக்கொள்ளும். இதற்காகச் செலவழிக்கக்கூடிய தொகை, டிரான்கள் மற்றும் மனிதக்கூலிகளோடு ஒப்பிட்டால் 10 முதல் 15 சதவிகிதம் வரை குறைவாக இருக்கும்' என்கிறார்கள்.

சரி, இந்த ரோபோ சாலையோர நடைபாதையில் செல்லும்போது வழியில் பாதாளச் சாக்கடை திறந்திருந்தாலோ, எதிரில் ஒரு டாஸ்மாக் நண்பர் தள்ளாடியபடி வந்தாலோ என்ன செய்யும்? அல்லது நம்ம ஆட்கள், இதையே லவட்டிக்கொண்டு போய்விட்டால்?

`இதற்காகத்தான் இதன் மண்டைக்குள் ஒன்பது கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், 180 டிகிரியில் பார்க்க முடியும். இதில் ‘அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ்’ என்ற மென்பொருளும் இணைக்கப்பட்டிருக்கிறது. எதிரில் வரும் அல்லது நிகழும் ஆபத்துகளுக்கு ஏற்றாற்போல இதில் தன்னை நிறுத்தவும் திருப்பிக்கொள்ளவும் தாவிக் குதிக்கவும் இடித்துத் தள்ளவும் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது' என்று சொல்லியிருக்கிறார் அடி ஹெய்ன்லா.

இந்த ரோபோ, சரியான ரூட்டில் நம் வீட்டுக்குத்தான் வந்துகொண்டிருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெலிவரி ரோபோ! - On the way...

`செல்போன் செயலி ஒன்றின் வழி அதை ஜி.பி.எஸ் உதவியோடு வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியும். ‘இந்த ரோபோ முழுக்க முழுக்க மொபைல்போனில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், நம் மொபைல்போன்களே மினி ரோபோக்கள்தான். என்ன... அவற்றுக்குச் சக்கரங்கள் மட்டும்தான் இல்லை’ என்கிறார் அடி ஹெய்ன்லா.

ஆனால், இவை எல்லாம் சாலை வசதி பக்காவாக இருக்கும் நாடுகளுக்குதான். நம் ஊருக்கு யோசித்துப்பார்க்கவே முடியாது!