Published:Updated:

சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்

சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்
பிரீமியம் ஸ்டோரி
சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்

அதிஷா, செ.சல்மான்

சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்

அதிஷா, செ.சல்மான்

Published:Updated:
சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்
பிரீமியம் ஸ்டோரி
சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்

`வாங்களேன், ஒரு வாக் போயிட்டு வரலாம்' என யாராவது கூப்பிட்டால், எழுந்து நடக்கத்தான் தோன்றுகிறது. மாதம் முழுக்க ‘வெச்சு செய்யும்’ வேலைகளுக்கு நடுவில், வீக் எண்ட் விடுபடல்கள்தான் இனிய ஆசுவாசம். சினிமா, ஷாப்பிங், சண்டே லன்ச், ஓட்டம், நடை, சைக்கிளிங், பைக்கிங், அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் என விடுபடல்களில் பலவகை உண்டு. மதுரை `பசுமை நடை', நெஞ்சுக்கு நெருக்கமான ஒன்று.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் எண்ணம்தான் இதன் ஆரம்பம். ஆர்வமுள்ள பலர் அடுத்தடுத்து சேர, ஆரம்பமானது பசுமை நடை. வார இறுதி நாட்களில் மதுரையைச் சுற்றியுள்ள ஏதேனும் ஒரு தொல்லியல் சின்னம் நோக்கிக் கிளம்புகிறார்கள். வழி எல்லாம் நடை, நடை முழுவதும் பேச்சு, பேச்சு எல்லாம் இயற்கை... என அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். வரலாறு, தொல்லியல், பொழுதுபோக்கு, பொது அறிவு எல்லாம் இணைந்த இயற்கை காம்போவான இந்தப் பசுமை நடை, ஐந்து ஆண்டுகளாகத் தொடர்கிறது.

 அரிட்டாப்பட்டி, அழகர்மலை, கிடாரிப்பட்டி, கீழவளவு, கருங்காலக்குடி, திருவாதவூர், மாங்குளம், வரிச்சியூர், திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி, ஆனைமலை... என மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏராளமான சமணர் வசிப்பிடங்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் வரலாற்றுத் தடம். ஆனால், போதிய கவனிப்போ, பராமரிப்போ இல்லாமல் கிரானைட் நிறுவனங்கள் சிதைத்து அழிக்கின்றன. பசுமை நடை மூலம் தொடர்ச்சியான மக்கள் கண்காணிப்பு இருப்பதால், இப்போது சமணர் மலைகள் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்படுவதில், சற்று நிம்மதி!

சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்

2010-ம் ஆண்டு, 30 பேருடன் தொடங்கப்பட்ட பசுமை நடை, இன்று ஆயிரக்கணக்கானோரின் இயக்கமாக மாறியிருக்கிறது. பசுமை நடை குழுவுக்கு மதுரையில் தனி மரியாதை, தனி அடையாளம் கிடைத்திருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், தினக் கூலிகள் என வெவ்வேறு பிரிவினர் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். ஒருமுறை பசுமை நடையில் கலந்துகொண்டவர்கள், அடுத்த முறை குடும்பத்தினரையும் அழைத்துவருகிறார்கள்.

 ‘`ஆனைமலை பற்றிய எனது கட்டுரையை வாசித்த பலர், 2010-ம் ஆண்டில் மதுரை ஒத்தக்கடை அருகே பிரமாண்டமாகப் படுத்திருக்கும் ஆனை மலைக்குச் செல்ல விரும்பினார்கள். எங்களுடன் பேராசிரியர் சுந்தர்காளியும் வந்திருந்தார். அதுவரை சாலையில் செல்லும்போது, `ஏதோ ஒரு மலைதானே' எனக் கடந்து சென்ற ஆனைமலையைப் பற்றி பேராசிரியர் சொன்ன பல விஷயங்கள், மதுரையைச் சுற்றியுள்ள சமண மலைகள் மீதான ஆர்வத்தை அதிகமாக்கின. தமிழகத்தில் சமணம் செழித்தோங்கி பின்னர் அழிக்கப்பட்டதன் அடையாளங்கள், இன்றும் மதுரையின் மலைகளில் சாட்சியங்களாக இருப்பதைத் தெரிந்துகொண்டோம்.

இதுபோன்ற சமண மலைகள் பலவற்றை, அவற்றின் தொன்மை தெரியாமல் கிரானைட் மாஃபியாக்கள் வெட்டி எடுத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த வரலாற்று ஆவணங்களைக் காக்க முடிவெடுத்தோம். பெருமை மிகுந்த மலைகளுக்கு மக்கள் யாரும் வருவது இல்லை என்பதால்தான் இந்த நிலை உண்டாகிறது. அதனால் ஒவ்வொரு சமண மலைக்கும் பசுமை நடை செல்ல ஆரம்பித்தோம்’’ என, பசுமை நடையின் வரலாற்றைக் கூறுகிறார் அ.முத்துக்கிருஷ்ணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்

இந்த அமைப்பு, யாரிடமும் கட்டணம் வாங்குவது இல்லை. பயணம் வருபவர்களுக்கு அந்த மலையைப் பற்றிய கையேடு வழங்கப்படும். தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஒவ்வோர் இடத்தையும் காட்டி, எளிமையாக விளக்குவார்கள். கிட்டத்தட்ட அது ஒரு முழுமையான வரலாற்று வகுப்பு.

 ‘`பசுமை நடையோடு இன்னும் பல வரலாற்று ஆச்சர்யங்களை அறிந்துகொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி தெப்பக்குளம், கோரிப் பாளையம் தர்கா, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா போன்ற இடங்களுக்கும் எங்கள் பசுமை நடை செல்ல ஆரம்பித்திருக்கிறது’’ என்கிறார் அ.முத்துக்கிருஷ்ணன்.

சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்

நவீனக் கருவிகள், உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிடுவதாகச் சொல்கிறோம். ஆனால், நமக்கு உள்ளூரின் வரலாறே உண்மையாக, முழுமையாகத் தெரிவது இல்லை. உண்மையில், பசுமை நடை அனைத்து ஊர்களுக்கும் தேவையான நடை!

சுமை நடைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள, greenwalkindia.com என்ற இணைய தளத்துக்குச் செல்லலாம். இந்த அமைப்பின் உடனடி அப்டேட்களுக்கு ஆண்ட்ராய்டில் செயலி ஒன்றும் வைத்திருக்கிறார். ப்ளே ஸ்டோரில், `Green walk’ எனத் தேடினால் கிடைக்கும்.