Published:Updated:

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 10

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 10
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 10

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 10

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 10

நாம் மருத்துவக் காப்பீடு எடுப்பதே சிகிச்சை பெறுவதில் பணத்துக்காகத் தாமதமோ, தடையோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்குத்தான். சில சமயங்களில், `மெடிக்ளெய்ம்தான் வைத்திருக்கிறோமே’ என நாம் செய்யும் சில தவறுகள், நமக்குப் பிரச்னையை உருவாக்கிவிடும். அதில் முக்கியமானது `ரூம் ரென்ட்’ எனப்படும் மருத்துவமனை அறை வாடகை. இன்று கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ரூம் ரென்ட் என்பது யானை விலை, குதிரை விலை... சாதாரண பொது வார்டுக்கே 2,500 வாங்குகிறார்கள். அதுவே, தனி அறை என்றால், ஸ்டார் ஹோட்டல்களைவிடக் கட்டணம் அதிகமாக இருக்கும். பொது வார்டில் தொடங்கி,  இரண்டு மூன்று பேர் ஷேர்செய்யும் அறை, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், சூட் என விதவிதமான அறைகளை வைத்திருக்கிறார்கள்.

`நாம் நிறையத் தொகைக்கு க்ளெய்ம் செய்திருக்கிறோமே... கூடுதலாக சில ஆயிரங்கள்தானே வித்தியாசம்?’ என்று டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் அறையைத் தேர்வுசெய்வோம். அதில்தான் தொடங்குகிறது வில்லங்கம்.பொதுவாக, ஒவ்வொரு மருத்துவக் காப்பீடு நிறுவனமும் பாலிசி தொகையில், ஒரு சதவிகிதம் அல்லது ஒன்றரை சதவிகிதம்தான் அறை வாடகைக்குச் செலவிடும். அதாவது, ஒரு லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்திருந்தால், ஒரு நாள் அறை வாடகை 1,000  ரூபாய் வரை மட்டும்தான் அனுமதிப்பார்கள். அதுவே, 10 லட்சம் ரூபாய் பாலிசி எடுத்திருந்தால், 10 ஆயிரம் ரூபாய் வரை அனுமதிப்பார்கள் என்றும் எண்ணக் கூடாது. இதற்கும் வரம்பு நிர்ணயித்து இருப்பார்கள்.

பாலிசி வாங்கும்போதே, `பாலிசி தொகையில் ஒரு சதவிகிதம், 5,000 ரூபாய்க்கு மிகாமல்...’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுவார்கள். அதாவது, அறை வாடகை 7,500 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். காப்பீட்டு நிறுவனம் அனுமதிக்கும் தொகை 5,000 ரூபாய் மட்டுமே. `இதனால் என்ன, கூடுதலாக 2,500 ரூபாய்தானே அதிகம்... பார்த்துக்கொள்ளலாம்’ என நினைப்பவர்கள் அதிகம்.

ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன், ஒரே நாளில் இரண்டு பேர் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருமே மெடிக்ளெய்ம் பாலிசி வைத்திருக்கின்றனர். முதலாவது நபர் இரண்டு லட்ச ரூபாய்க்குத்தான் பாலிசி வைத்திருக்கிறார். இரண்டாவது நபரோ ஐந்து லட்ச ரூபாய்க்கு பாலிசி வைத்திருக்கிறார்.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 10

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால், முதலாவது நபர் 2,500 கட்டணம் உள்ள பொது வார்டில் தங்கி சிகிச்சை பெற்றார். இரண்டாவது நபர், 6,000 ரூபாய் கட்டணம் உள்ள டீலக்ஸ் ஏ.சி அறையைத் தேர்வுசெய்தார். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரேமாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலாவது நபருக்கு மொத்தச் செலவு, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அறை வாடகை ரூ.4,000 சேர்த்து, ஒரு லட்சத்து 4,000 ரூபாய் கட்டணம் வந்தது. காப்பீட்டு நிறுவனமும் க்ளெய்ம் அனுமதித்தது. இரண்டாவது நபருக்கு, சிகிச்சை செலவு ஒன்றரை லட்சமும், அதனுடன் அறை வாடகை 10 ஆயிரம் சேர்த்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் வந்தது. இரண்டாவது நபர், இதில் எவ்வளவு க்ளெய்ம் பெற்றிருப்பார் என்று நினைக்கின்றீர்கள்? அவர்தான் ஐந்து லட்ச ரூபாய்க்கு க்ளெய்ம் செய்திருக்கிறாரே. அதனால், ஒரு லட்சத்து 60 ஆயிரம் க்ளெய்ம் பெற்றிருப்பார் என்று நீங்கள் கருதினால், அது தவறு. ஆம், அவருக்கு ஒரு லட்சம், மற்றும் இரண்டு நாள் அறை வாடகை 10 ஆயிரம் சேர்த்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் மட்டும்தான் க்ளெய்ம் கிடைத்தது. மீதி 50,000 ரூபாயை அவர் தன் கையில் இருந்துதான் கட்ட வேண்டியதாக இருந்தது.

இதில் காப்பீட்டு நிறுவனங்களையோ, மருத்துவமனை நிர்வாகத்தையோ குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில், காப்பீடு வாங்கும்போதே அதில் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். காப்பீடு பாலிசியில், அறைக் கட்டணம் விதிமுறைகளுக்கு உட்பட்டது   என்று குறிப்பிட்டிருப்பார்கள். ஒவ்வொரு மருத்துவமனையும் அதன் வார்டுகளின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர். இதன் அடிப்படையில்தான் பில் தயாரிக்கப்படுகிறது. காப்பீட்டு நிறுவனம் ஒரு தொகையை நிர்ணயம் செய்திருக்கும். அந்த அளவுக்குத்தான் க்ளெய்ம் அனுமதிக்கும்.

பொது வார்டில், மருத்துவர் ஆலோசனைக்கு 500 ரூபாய் வாங்கிறார்கள் என்றால், சிறப்பு வார்டில், அதன் நிலைக்கு ஏற்ப 750, 1,000 ரூபாய் என்று கன்சல்டேஷன் ஃபீஸ் ஏறிக்கொண்டே இருக்கும். இதுமட்டும் அல்ல... நர்ஸிங் ஃபீஸ், சிகிச்சைக் கட்டணம் உட்பட எல்லா கட்டணமும் அறையின் தன்மைக்கு ஏற்ப மாறும். மாத்திரை, மருந்து தவிர்த்து அனைத்துக்கும் கட்டணம் வேறுபடுவதால், பில்லில் இவ்வளவு பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது.

காப்பீட்டு நிறுவனங்களோ, ஒரு சிகிச்சைக்கு இவ்வளவுதான் என்று கட்டணம் நிர்ணயித்தி ருக்கும். அதைத்தான் வசூலிப்பார்கள். டாக்டர் ஃபீஸ் 500 ரூபாய் என்று நிர்ணயித்திருந்தால், அந்த அளவுக்கு மட்டுமே க்ளெய்ம் அனுமதிக்கும். மீதம் உள்ள தொகையை நாம்தான் செலுத்த வேண்டும். எனவே, மெடிக்ளெய்ம் பாலிசி வைத்திருத்தாலும், அதன் துணைக் கட்டணங்கள், விதிமுறைகளைத் தெரிந்திருப்பது நல்லது.

- தொடரும்

படம்: ர.க.சர்வின்