என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

ஒடுப்புரை நாகம்மனும்.... சுட்ட கொழுக்கட்டையும்!

எழுத்தாளர்நீல.பத்மநாபன்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நீல.பத்மநாபன், தன் ஊர் 'இரணியல்’ பற்றி இங்கே நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

ஒடுப்புரை நாகம்மனும்.... சுட்ட கொழுக்கட்டையும்!
ஒடுப்புரை நாகம்மனும்.... சுட்ட கொழுக்கட்டையும்!

##~##''அரக்கன் இரணிய கசிபு வதம் நடந்த பகுதி என்பதால், ஊருக்கு இரணியல்னு பேரு வந்துச்சாம். பூம்புகார்தான் எங்க ஊர் மக்களோட பூர்வீகம். அதுக்கு ஒரு கதை சொல்வாங்க. மன்னரோட அரண்மனையில் ஒரு செட்டியார் வேலை பார்த் தாராம். அவருக்கு தங்கம்மை, தாயம்மைனு ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேரும் மதிநுட்பத் தோடு இருந்திருக்காங்க. அதைக் கேள்விப்பட்ட மன்னர், அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு இருக்காரு. இதுல செட்டியாருக்கு உடன்பாடு இல்லை. அந்தக் காலத்தில் பூமிக்கு அடியில் நில அறை கட்டி வெச்சிருப்பாங்க.ரெண்டு பொண்ணுங்களையும் நில அறைக்குள் போகச் சொன்ன செட்டியார், அவங்களை உயிரோட சமாதி ஆக்கிட்டாராம். மன்னர் கோபத் துக்குப் பயந்து, அந்த ஊர்ல இருந்த மொத்த செட்டியார் சமூக மக்களும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்துட்டாங்களாம்.

இங்க இரணியல், பத்மநாபபுரம், திருவிதாங்கோடு, பறக்கை, கணபதிபுரம், மிடாலம், குளச்சல்னு

ஏழு ஊர்களில் அவங்க குடியேறியதால் இந்தப் பகுதிவாசிகளை 'ஏலூர் செட்டி’னு சொல்லு வாங்க.

பூம்புகாரில் இருந்து செட்டியார் சமூக மக்கள் வரும்போது துணைக்கு கையில் ஒரு நாகரை யும் பிள்ளையாரையும் கொண்டுவந்திருக் காங்க. அந்த நாகர் சிலைதான் இன்னிக்கும் எங்க ஊர்ல இருக்குற 'ஒடுப்புரை நாகம்மன் கோயில்’. இந்தக் கோயிலுக்குள் தங்கம்மை, தாயம்மைக்கும் சிலை வைத்து பூஜை பண் றாங்க. அவங்க கொண்டுவந்த பிள்ளையார் சிலை 'சிங்க விநாயகர் கோயில்’ல இருக்கு.

ஒடுப்புரை நாகம்மனும்.... சுட்ட கொழுக்கட்டையும்!
ஒடுப்புரை நாகம்மனும்.... சுட்ட கொழுக்கட்டையும்!

எங்க அப்பா திருவனந்தபுரத்துல வேலை பார்த்ததால நான் சின்ன வயசுலயே கேரளா வந்துட்டேன். விடுமுறைக் காலங்களில் மட்டும் ஊருக்கு வருவோம். இரணியல் ஊருக்கு நடுவே 'வள்ளியாறு’னு ஒரு ஆறு ஓடுது. பக்கத்திலேயே திருவிதாங்கோட்டிலும் குளம் உண்டு. லீவுக்கு வர்றப்பலாம் குளத்தில் மணிக்கணக்கில் குளிப்பேன். 'ஓடுப்புரை நாகம்மன் கோயில் விழா’தான் எங்க ஊரோட முக்கியமான திருவிழா. அதுல நடக்குற 'கொழுக்கட்டை விழா’ ரொம்பவே பிரசித்தம். சித்திரை மாசம், ஆயில்யம் நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை, நிறைஞ்ச பௌர்ணமி இத்தனையும் ஒண்ணாச் சேர்ந்து வர்ற அன்னைக்குத்தான் கொழுக்கட்டை விழா நடக்கும். இப்படி எல்லாம் ஒண்ணா சேர்ந்து  வர்றதுக்கு 10 வருஷங்கள் ஆகலாம். ஏன் 40 வருஷங்கள்கூட ஆகலாம். ஆனா, அப்படி வந்துட்டா, விசேஷம் களைகட்டும். அந்த நேரத்தில் எங்கே இருந்தாலும் இரணியல் காரங்க அம்மனைக் கும்பிட வந்திருவாங்க. இந்த விழாவுக்காகத் தயாராகும் கொழுக் கட்டை ஒரு வருஷம்கூட கெட்டுப் போகாம இருக்கும். என்ன காரணம்னா, கொழுக் கட்டையை அவிக்க மாட்டாங்க. சுடத்தான் செய் வாங்க.

மூணு கல்யாணம் பண்ணிட்டு, கடைசி காலத்தில் கவனிக்க ஆள் இல்லாமல் செத்துப்போன பக்கத்து வீட்டுத் தாத்தா, சின்ன வயசுல நான் கீழே விழுந்து காலை உடைச்சிக்கிட்டப்ப, ரெண்டே நாள்ல சரியாக்கின காட்டுக்கடை ஆசான்னு இரணியல் கிராமத்து ஆட்கள்தான் எனக்குப் புதுசு புதுசா கதாபாத்திரங்களை உருவாக்கத் தூண்டுதலா இருந்தாங்க.

எங்க ஊரோட 'ஜரிகை’ உலகப் பிரசித்தி பெற்றது. நாகஸ்வர வித்வான் இரணியல் செல்லப்பா, ஏவி.எம். தயாரித்த 'அபிமன்யு’ திரைப்படத்தில் அபிமன்யுவாக நடித்த இரணியல் குமரேசன் என அப்போதும் இப்போதும் திறமைசாலிகள் நிறைந்த ஊர் இரணியல்!''

ஒடுப்புரை நாகம்மனும்.... சுட்ட கொழுக்கட்டையும்!

- என்.சுவாமிநாதன்
படங்கள்: ரா.ராம்குமார்