என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

பாபா குகையில் ரஜினி ரசிகர்!

கே.கே.மகேஷ்

றாம் வகுப்பைக்கூடத் தாண்டாத  மதுரை இளைஞர் ஒருவர், தன்னந்தனியாக பாபா குகைக்குச் சென்று திரும்பியிருக்கிறார். காரணம், ரஜினிகாந்த் என்கிற காந்தம்! ஏ.எம்.கவுண்டர் (பெயரே அதுதான்) தீவிர ரஜினி வெறியர். 32 வயது. ஏதாவது கேட்டால், தாடியைத் தடவியபடி மெல்லிய குரலில் பதில் சொல்கிறார். எல்லாம் இமய மலை போய்வந்த எஃபெக்ட்!

பாபா குகையில் ரஜினி ரசிகர்!

##~##'மே மாசம்ணே... தலைவர் ரொம்ப சீரியஸா இருக்கிறதா செய்தி படிச்சேன். என்னால நம்ப முடியலை. ஆளாளுக்கு   'மொட்டை போடுறேன்’, 'தீ மிதிக்கப் போறேன்’னு  வேண்டுதல்களைச் சொன் னாங்க. நான் 'தலைவர் மனசுல இப்போ என்ன ஓடிட்டு இருக்கும்? அவரோட வேண்டுதல் என்னவா இருக்கும்?’னு யோசிச்சேன். அப்ப என் மனசுல வந்து போனது மகா அவதார் பாபாஜி. 'இமயமலைக்குப் போறேன்’னு சொன்னதும் எல்லாரும் கிண்டல் பண்ணினாங்க. ஆனா, நான் அசரலை. ரயில் டிக்கெட் எடுக்கப் போனேன். டிக்கெட் போடுறவருக்கே வழி தெரியலை. கம்ப்யூட்டர்ல எங்கெங்கேயோ தேடிப் பார்த்துட்டு, மொத்தம் 13 ரயில்கள்ல டிக்கெட் போட்டு கை நிறைய டிக்கெட்டா திணிச்சாரு.  மொத்தம் 21 நாள் பயணம். காத் கோதத்தில் இறங்கி, ராணிகட்டுக்கு கார் பயணம். அங்கே இருந்து துவாராகட்.

நம்ம கொடைக்கானல் ரோட்டுல அங்கங்க மண் சரிஞ்சுகிடந்தா எப்படி இருக்கும்? அப்படித்தான் அந்த ரோடு இருந்துச்சு. வழியில ஒரு டீக்கடையில் ரஜினியோடு அந்தக் கடைக்காரர் எடுத்துக்கிட்ட போட்டோவைப் பார்த்ததுமே, 'கரெக்ட் ரூட்லதான் போய்ட்டு இருக்கோம்’னு நம்பிக்கை வந்திருச்சு.

பாபா குகையில் ரஜினி ரசிகர்!
பாபா குகையில் ரஜினி ரசிகர்!

துவாராகட்ல 'பாபாஜி குகை எங்கே’னு கேட்டேன். யாருக்கும் புரியலை. 'தமிழ் நாடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குகை’னு சொன்னேன். சட்டுனு புரிஞ்சிக்கிட்டு வழி சொன்னாங்க. 'எங்க வீட்லகூட அவர் சாப்பிட்டு இருக்கார்’னு சொல்லி டீ கொடுத்தாங்க. எனக்கு டீ, காபி சாப்பிடுற பழக்கம் இல்லை. ஆனா, ரஜினி சாப்பிட்ட வீடுன்னு தெரிஞ்சதும், ரெண்டு டம்ளர் டீ வாங்கிக் குடிச்சேன்.

வழுக்கும் பாறை, அடர்ந்த மரங்கள், விலங்குகளின் விநோத சத்தத்துக்கு நடுவே இருந்துச்சு குகை. உள்ளே போகும் போதே, உடம்பைக் கழற்றிவெச்சுட்டு, உயிர் மட்டும் மிதக்குற மாதிரி இருந்தது. ரஜினி மாதிரி யோகாலாம் நமக்குத்

தெரியாது. சம்மணம் போட்டு உட்கார்ந்து, சின் முத்திரை பிடிச்சு, ரஜினி முகத்தையும் பாபாஜியோட முகத்தையும் மனசுல கொண்டுவந்துட்டே இருந்தேன். நான் ஊருக்குத் திரும்பியபோது, ரஜினியும் உடல்நலம் தேறி தமிழகம் திரும்பிவந்தார். அதுதான் பாபாவோட சக்தி.

மொத்தத்துல இது ஒரு புரியாத பயணம்னு வெச்சிக்கோங்களேன்.இல்லை  இல்லை... நிறையப் புரிஞ்சுது. ஆனா, சொல்லத் தெரியலைனு போட்டுக்கோங்க!''- ரஜினி மாதிரியே பேசுகிறார் கவுண்டர்!

  • தீபாவளி சமயத்தில், சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை களுக்கும் பட்டாசுக் கடைகளுக்கும் வெளியூர்களில் இருந்து பட்டாசு வியாபாரிகள் படையெடுப்பது வழக்கம்.  இந்த வியாபாரிகளைக் கவர்வதற்காக, இப்போது சிவகாசிக்கு வெளியே விருதுநகர் சாலையிலும்  சாத்து£ர் சாலையிலும்  பெரிய பெரிய ஷோரூம்களை அமைத்துள்ளனர் பட்டாசு முதலாளிகள்!
பாபா குகையில் ரஜினி ரசிகர்!

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்