மகிழ்ச்சி ஃபார்முலா

`கஷ்டப்பட்டு உழைத்தால் சந்தோஷமாக இருக்கலாம்' என்றுதான் நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அதனாலேயே பெரும்பாலான நேரங்களில் நாம் சந்தோஷமாக இருக்க, கஷ்டப்படுகிறோம். ஆனால், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி `சந்தோஷமாக இருக்கிறவர்கள்தான் சிறப்பாக உழைக்கிறார்கள்’ என்கிறார்கள். `இருக்கிற வேலையில் எப்படிங்க சந்தோஷமா இருக்கிறது? வேலை, கொலையா கொல்லுதுங்க' என்பவர்களுக்கு ‘தி ஹேப்பினஸ் ஈக்வேஷன்’ என்கிற நீல் பாஸ்ரிச்சா எழுதிய நூல் உதவும். எந்தச் சூழலிலும் மகிழ்ச்சியாக இருக்க நான்கு சூத்திரங்களைக் கற்றுத்தருகிறார் நீல். அதன் சாராம்சம் இங்கே...

வாரத்தில் மூன்று முறையாவது வாக்கிங்

தினந்தோறும் வாக்கிங் போக முடியாவிட்டாலும், வாரத்தில் மூன்று நாட்களாவது 20 நிமிடங்கள் வாக்கிங்போவது உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும். வாக்கிங் போக முடியாவிட்டால், 20 நிமிட உடற்பயிற்சி!

தெரியாதவர்களுக்கு உதவுங்கள்

நம்மை யார் என்றே தெரியாத ஐந்து பேருக்கு ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு வகையில் உதவுங்கள்.

சக மனிதருக்கு உதவிசெய்வது என்பது, நம்மை நாமே பாசிட்டிவ்வாக எண்ணிக்கொள்ள உதவும். ரத்ததானம் செய்வதில் தொடங்கி, சாலை ஓரம் டிராஃபிக்கைச் சரிசெய்வது வரை எதுவும் செய்யலாம்.

பாசிட்டிவ் விஷயங்களை எழுதுங்கள்

ஒவ்வொரு நாளிலும் நமக்கு நடந்த பாசிட்டிவ் விஷயம் ஒன்றை அன்றாடம் டைரியிலோ ஆன்லைன் பிளாக்கிலோ எழுதிவைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நடந்த ஒரு பாசிட்டிவ் நிகழ்வை எழுதும்போது அந்த மகிழ்ச்சியைத் திரும்பவும் அனுபவிப்பீர்கள். அதை மறுபடியும் வாசிக்கும்போது, அதே மகிழ்ச்சியை மீண்டும் உணர்வீர்கள்.

தியானம்

‘நாம் கண்களை மூடி அமைதியாக, மூச்சுவிடுவதை மட்டும் கவனிப்பதன் வழியே நம்முடைய செயல்பாடுகளைச் சிறப்பாகவும், மூளையை முழுமையாகவும் பயன்படுத்த முடியும்’ என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் நீல். தியானம், செயல்களின் மீதான கவனத்தை அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களாவது தியானம் செய்வது நம் ஆற்றலைக் கூட்டி, நம்மைத் துடிப்பாக, மகிழ்வாக இருக்கவைக்கும்.

பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் ஏன் பெட்ரோல் விலை குறைவது இல்லை... நம் நாட்டில் பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? பாலைவனத்தில் தொடங்கும் பெட்ரோலின் பயணம், கப்பல் மூலமாகக் கொண்டுவரப்படுவதில் தொடங்கி, சுத்திகரிப்பு முடிந்து டீலர்கள் வழியாக பெட்ரோல் பங்க்குகள் வரைக்கும் பயணிக்கிறது. இந்தப் பயணத்தை `Factly' என்கிற யூடியூப் சேனலில் எளிய அனிமேஷனில் வீடியோவாக்கி இருக்கிறார்கள். `Understanding Petrol Pricing in India' என்ற இந்த வீடியோ இணைப்பு: www.youtube.com/watch?v=RRRRVGg-n_Q

கெமிஸ்ட்ரி ஸ்டூடன்ட்ஸ் கவனத்துக்கு...

தனிம வரிசை அட்டவணையை (Periodic TABLE) நினைவில் வைத்துக்கொள்வது மிகப் பெரிய சவால். பள்ளி மாணவர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இந்தத் தனிம அட்டவணைத் தலைவலி உண்டு. இவர்களுக்கு உதவவே இந்த வீடியோ. இதில் சிறிய படங்களின் வழியே ஒட்டுமொத்த அட்டவணையையும் புரியும்படி விளக்கி நினைவில் வைத்துக்கொள்ளப் பயிற்றுவிக்கிறார்கள். How To Memorize The Periodic Table - Easiest Way Possible என்ற இந்த வீடியோவை இணையத்தில் காண - www.youtube.com/channel/UCGGtl3nZmwzcfwHY4ck_G0Q