கடந்த மத்திய பட்ஜெட்டில் கார்களுக்கு பல புதிய வரிகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி முதல் கார்களின் விலை உயர்ந்துள்ளது. பல கார் நிறுவனங்கள் இந்த விலையேற்றத்தை (பார்க்க விலை அதிகரிப்பு பட்டியல்) கடந்த மார்ச் மாதமே செய்துவிட்டன.

உதாரணமாக, ஹோண்டா கார் ரூ.4,000 முதல் ரூ. 79,000 வரை உயர்ந்திருக்கிறது. இந்த விலையேற்றத்தினால் கார் விற்பனை கொஞ்சம் சரிந்திருப்பதாக சொல்கின்றன கார் விற்பனை நிறுவனங்கள்.

கார்களின் விலையை ஒரே யடியாக உயர்த்துகிற அளவுக்கு பட்ஜெட்டில் அப்படியென்ன புதிய வரிகளை விதித்தார்கள் என்று முதலில் பார்ப்போம்.

நான்கு மீட்டர் நீளம் கொண்ட 1,200 சிசி கொள்ளளவுக்குக் குறைவான பெட்ரோல் - எல்பிஜி - சிஎன்ஜி எரிபொருள் இன்ஜின் கொண்ட கார்களுக்கு 1 சதவிகிதம் இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் (Infra Cess Tax) விதிக்கப்பட்டுள்ளது.

டீசல் கார்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், நான்கு மீட்டர் நீளத்துக்குள், 1,500 சிசி கொள்ளளவுக்குக் குறைவான டீசல் இன்ஜின் கார்களின் மீது 2.5 சதவிகிதம் இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காரின் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால், அவற்றின் மீது 1 சதவிகிதம் இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

பெரிய வாகனங்கள் அதாவது, பெரிய இன்ஜின் கொண்ட கார்கள், எஸ்யுவிகள், லக்ஸுரி செடான் கார்கள் போன்றவற்றின் மீது 4% இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் விதிக்கப் பட்டுள்ளது. ஆனால், மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்கள், வாடகை கார்கள், ஆம்புலன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங் களுக்கு இந்த இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் பொருந்தாது. இதனுடன் கோல்ஃப் கார்ட் மீது விதிக்கப்படும் சுங்க வரி 10 சத விகிதத்தில் இருந்து 60 சதவிகித மாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரிகளால் கார்களின் விலையை உயர்த்தி நிலைமையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

டீசல் கார்கள் மீது ஏன் கூடுதல் வரி?

கார்களின் விலை உயர்வதால், மாதாந்திர விற்பனை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது, டீசல் கார்களின் மீதான அதிக வரி விதிப்புக்கு முக்கிய நோக்கம், அவை பெட்ரோல் கார்களைவிட அதிகம் சுற்றுச்சுழலை மாசுபடுத்துவதுதான். இதன் வெளிப்பாடாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் காரணமாக, டெல்லியில் 2,000 சிசி கொள்ளளவுக்கும் கூடுதலான டீசல் இன்ஜின் கார்களை ஏப்ரல் 30-ம் தேதி வரை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவிர, ஒற்றை மற்றும் இரட்டை இலக்க (Odd - Even) பதிவு எண்களைக் கொண்ட கார்கள் சுழற்சி முறையில் ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை அமல்படுத்தப்பட்டது. மக்களின் ஆதரவினால், இந்த திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது. மேலும், இந்தியாவில் உள்ள பல நகரங்களில், வாகனங்கள் வெளியிடும் மாசு அளவு விதிமுறையான BS-3 தரத்தில் இருந்து BS-4 தரத்துக்கு ஏப்ரல் 2016-ல் அமல் செய்யப்படவிருக்கிறது.
ஹைபிரிட் / எலெக்ட்ரிக் கார்களின் எதிர்காலம்!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் டீசல் கார்களுக்கு ஒரு தீர்வாக ஹைபிரிட்/எலெக்ட்ரிக் கார் இருக்குமா என்பது முக்கியமான கேள்வி. சமீபத்தில் இது குறித்து பேசி மின்சாரம், நிலக்கரி, எரிசக்தித் துறையின் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், ‘‘2030-க்குள் இந்தியா எலெக்ட்ரிக் கார்களை முழுக்க பயன்படுத்தும் நாடாக மாறிவிடும்’’ என்று சொல்லி இருக்கிறார்.

என்றாலும் புதிதாக அறிமுகமாகும் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வந்த ஃபேம் (FAME - Faster Adoption & Manufacturing of Electric & Hybrid Vehicles in India) எனும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதில் இடம்பெறும் வாகனங்களின் திறனுக்கேற்ப, அவற்றின் விலையில் தள்ளுபடியாக ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்த விழிப்பு உணர்வு நம் நாட்டில் ஏற்பட்டு இருப்பதுடன், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வரவேற்கத்தக்க விஷயம்.

என்றாலும், கார்களின் விலை தற்போது குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இதனால் பலரது கார் கனவை இன்னும் கொஞ்சம் காலத்துக்கு தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.