Election bannerElection banner
Published:Updated:

ஆந்திராவில் 84 தமிழர்கள் கைது..!

ஆந்திராவில் 84 தமிழர்கள் கைது..!
ஆந்திராவில் 84 தமிழர்கள் கைது..!

ஆந்திராவில் 84 தமிழர்கள் கைது..!

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்து உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் 84 தமிழர்களைச் செம்மர கடத்தல்தடுப்பு காவல்துறை கைது செய்துள்ளனர். ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த லாரி ஒன்றை காவல்துறை சோதனைசெய்தனர். அப்போது அந்த லாரியில் 80-க்கும் அதிகமானோர் இருந்துள்ளனர். அவர்களிடம் சமையலுக்கு தேவையானபொருட்களும் இருந்துள்ளது. அவர்களை விசாரித்ததில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டைச் சேர்ந்தவர்கள்  என்றும் அனைவரும் செம்மரம் வெட்ட ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், அனைவரும் கைதுசெய்து ஆஞ்சநேயபுரம் சோதனைசாவடியிலேயே தங்கவைத்து விசாரித்துவருகின்றனர்.  

ஆந்திராவில் 84 தமிழர்கள் கைது..!

மொத்தம் 84 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பலர் தான் எதற்கு அழைத்துவரப்பட்டதாகத் தெரியாது என்றும், சிலர் கட்டிட வேலைக்குஅழைத்து வரப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மாணவர்களை விசாரித்ததில் அதிக பணம் தருவதாக கூறி அழைத்துவரப்பட்டதாக கூறியுள்ளனர். செம்மரக்கட்டைகளை வெட்டிக் கடத்துவதாககூறி ஆந்திர எல்லையில் பலதமிழர்கள் கைதுசெய்யப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு