Election bannerElection banner
Published:Updated:

சீறிப்பாய்ந்த காளைகள்... ஜல்லிக்கட்டில் சரிந்த மேடையால் அதிர்ச்சி

சீறிப்பாய்ந்த காளைகள்... ஜல்லிக்கட்டில் சரிந்த மேடையால் அதிர்ச்சி
சீறிப்பாய்ந்த காளைகள்... ஜல்லிக்கட்டில் சரிந்த மேடையால் அதிர்ச்சி

சீறிப்பாய்ந்த காளைகள்... ஜல்லிக்கட்டில் சரிந்த மேடையால் அதிர்ச்சி

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை புகைப்படம் மற்றும் காணொலி எடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஊடகத்துறையினருக்கான மேடை சரிந்தது. இதில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் கொஞ்சநேரம் கூச்சலும் குழப்பமுமாகப் பரபரப்பு எழுந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், குந்தனார்கோவில் அருகில் உள்ள கிள்ளனூர் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்கான முன் ஏற்பாடுகள் அத்தனையும் நேற்று முடிந்தது. அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி எல்லா மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில், வாடிவாசலுக்கு எதிராக இடதுபுறத்திலும் வலதுபுறத்திலுமாகப் பத்திரிகையாளர்களுக்கான இரண்டு மேடை அமைக்கப்பட்டது. அதில்தான் செய்தி சேகரிப்பவர்களும் புகைப்படம், காணொலி எடுப்பவர்களும் இருப்பார்கள். வாடிவாசலிலிருந்து சீறிப்பாயும் காளைகளையும் அதனை அடக்கும் மாடுபிடி வீரர்களையும் அந்தக் கோணத்தில் நின்று படம் எடுத்தால் சரியாக இருக்கும் என்று ஆரம்பத்திலேயே திட்டமிட்டு, அரசு வடிவமைத்த வழிகாட்டுதல் முறையின்படியே இந்த மேடை அமைக்கப்படுகிறது. இதுதவிர, வருவாய்த்துறை அதிகாரிகள் அமர்வதற்கும் கட்சி, ஊர் முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர் ஆகியோருக்கான மேடைகளில் வாடிவாசல் மேலாகக் கட்டப்படும். அப்படி அமைக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்ட மேடையில் ஒன்று சரிந்தது.
ஜல்லிக்கட்டு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

வழக்கமாகப் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த  காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. கிட்டடத்தட்ட 300 காளைகள் கலந்துக்கொண்டன. 200 மாடுபிடி வீரர்களும் இதில் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு தொடங்கியது முதலே திமில் பெருத்த முரட்டுக்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனாலேயே ஜல்லிக்கட்டு ஒருவித படபடப்புடன் களைகட்டியது. இதனால் மாடுபிடி வீரர்களும் பார்வையாளர்களும் உற்சாகம் அடைந்தார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பதற்றமும் ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு வளாகத்தில் பரவிக் கிடந்தது. இதற்குக் காரணமாக அமைந்தது காளைகள்தான். பல வருடங்களாக பல ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த அனுபவம் கொண்ட காளைகள் இந்த போட்டியில் கலந்துகொண்டன. அறிவிப்பாளர்களும் தங்கள் பங்குக்குக் காளைகளைப் பற்றிய அறிவிப்பை செம பில்டப் செய்து கூறினார்கள்.

இதனால், மாடுபிடி வீரர்கள் ஏக எதிர்பார்ப்புடன் காளைகளை அடக்கும் ஆவலுடனும் எகிறிக்கொண்டே இருந்தார்கள். இப்படியான சூழலில்தான் இடது புறத்திலிருந்து பெருங்கூச்சலும் குழப்பமும் எழுந்தது. எல்லோருடைய கவனமும் அந்தப் பக்கமாகத் திரும்பியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊடக மேடை 'மொடமொட' என்ற சத்தத்துடன் சரிந்தது. இத்தனைக்கும் அதில் அதிகமான எண்ணிக்கையில் யாரும் இருக்கவில்லை. மேடை கட்டிய விதத்தில் கவனக்குறைவாக இருந்திருக்கிறார்கள். அதனால், கட்டுக்கயிறு நெகிழ்ந்து மேடை சற்று சரிந்து, பிறகு சாய்ந்து நின்றது. அதில் நின்றபடியே தங்களது வேலையை ஊடகத்தினர் தொடர்ந்தனர். சற்று பரபரப்புக்குப்பிறகு ஜல்லிக்கட்டுத் தொடர்ந்து நடந்தது. போட்டி முடிந்ததும் பத்திரிகையாளர்கள் விழா கமிட்டியினரிடம் முறையிட்டார்கள். பதிலுக்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு