Election bannerElection banner
Published:Updated:

கிரண்பேடியுடன் ஹோலி கொண்டாடினார் முதல்வர் நாராயணசாமி

கிரண்பேடியுடன் ஹோலி கொண்டாடினார் முதல்வர் நாராயணசாமி
கிரண்பேடியுடன் ஹோலி கொண்டாடினார் முதல்வர் நாராயணசாமி

கிரண்பேடியுடன் ஹோலி கொண்டாடினார் முதல்வர் நாராயணசாமி

``ஹோலிப் பண்டிகையை நீரை வீணாக்காமல் வண்ண மலர்களுடன் கொண்டாடுங்கள்” எனப் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.

கிரண்பேடியுடன் ஹோலி கொண்டாடினார் முதல்வர் நாராயணசாமி

ஹோலிப்பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகர்களான ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் பகுதிகளில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஹோலிப்பண்டிகைக் கொண்டாட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பிரெஞ்ச் துணை தூதர் கேத்ரின் சுவாட், டி.ஜி.பி சுனில்குமார் கௌதம் மற்றும் காவல்துறையின் குடும்பத்தினர் பங்கேற்று, ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைப் பூசி ஹோலிப்பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். அதேபோல ஆளுநர் கிரண்பேடியும் முதலமைச்சர் நாராயணசாமியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

கிரண்பேடியுடன் ஹோலி கொண்டாடினார் முதல்வர் நாராயணசாமி

அப்போது பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ``ஹோலி அனைவரும் கொண்டாட வேண்டியப் பண்டிகை. ஆனால், தண்ணீரில் வண்ணப் பொடிகளைக் கலந்து கொண்டாடுவதுதான் எனக்கு வருத்தமளிக்கிறது. ஏனென்றால் அது நீரை வீணடிக்கும் செயல். நம் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் நீரைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமை. எனவே, வரும் காலங்களில் ஹோலிப் பண்டிகையை வண்ண மலர்களுடன் கொண்டாடுங்கள்” என்றார். அதேபோல முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “புதுச்சேரியில் மத ஒற்றுமை மற்றும் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் பண்டிகையாக ஹோலிப்பண்டிகை திகழ்கிறது. புதுச்சேரி மாநில  மக்களுக்கு என்னுடைய ஹோலிப்பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு