Election bannerElection banner
Published:Updated:

“கமலுக்கு கள் பற்றி என்ன தெரியும்?” - கள் இயக்க நல்லசாமி கேள்வி

“கமலுக்கு கள் பற்றி என்ன தெரியும்?” - கள் இயக்க நல்லசாமி கேள்வி
“கமலுக்கு கள் பற்றி என்ன தெரியும்?” - கள் இயக்க நல்லசாமி கேள்வி

“கமலுக்கு கள் பற்றி என்ன தெரியும்?” - கள் இயக்க நல்லசாமி கேள்வி

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் `கள்' பற்றி தெரிவித்த கருத்துக்கு, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

“கமலுக்கு கள் பற்றி என்ன தெரியும்?” - கள் இயக்க நல்லசாமி கேள்வி

‘மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஒரு பேட்டியில், “பெண்களின் ஓட்டுகளை வாங்க, பூரண மதுவிலக்கு என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது என்பது என் கருத்து. அப்படி செய்தால் அது கள்ளால் வரும் கொடுமைகளைவிட பெரியதான கொலைகள் நடக்கும்’’ என்று கூறியிருந்தார். 

.

“கமலுக்கு கள் பற்றி என்ன தெரியும்?” - கள் இயக்க நல்லசாமி கேள்வி


இந்தக் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள கள் இயக்க ஒருறங்கிணைப்பாளர் நல்லசாமி, ‘‘கள்ளுக்கும் மதுவுக்கும் உள்ள  வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார் கமல்ஹாசன். கள் என்பது கொலைகள் செய்யத்தூண்டும் கொடுமையான போதைப்பொருள் என்று புரிந்துகொள்ளும் ரீதியில் உள்ளது அவரது பேச்சு. கள் வேறு, சாராயம் வேறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்கு ஆலோசகர்களாக இருக்கும் கவிஞர் சினேகன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், பாரதி கிருஷ்ணகுமார் போன்றவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

கள் என்பது ஓர் உணவுப்பொருள். தாவரங்களில் இருந்து கிடைக்கிற மற்ற உணவுப் பொருள்களைப்போலத்தான், கள்ளும் தென்னை, பனை மரங்களில் இருந்து கிடைக்கும் விளைபொருள். அது ஒரு மருத்துவப் பொருளும்கூட. கக்குவான் இருமல் நோய் கண்டுள்ள குழந்தைகளுக்குகூட ஒரு மரத்துக் கள் கொடுத்து குணப்படுத்தும் வழக்கம் இன்னும் சில கிராமங்களில் உள்ளது. மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்கிறார் கமல். பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் உள்ளபோதும் அங்கு கள்ளுக்குத் தடையில்லை. அதேபோல், கேரளா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் கள் இறக்கி விற்கப்படுகிறது. எனவே, கள் ஒரு விவசாய விளைபொருள். என்பதைப் புரிந்துகொண்டு, எங்களுடன் கைகோத்து கள்ளுக்கான தடையை நீக்கப் போராட வேண்டும் என்பதே ஆசை” என்றார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு