Published:Updated:

கிறுக்கல் கலை!

கிறுக்கல் கலை!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கல் கலை!

கார்க்கிபவா

கிறுக்கல் கலை!

கார்க்கிபவா

Published:Updated:
கிறுக்கல் கலை!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கல் கலை!
கிறுக்கல் கலை!

`கிராஃபிட்டி' என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்று ஃபேஸ்புக்கில் எழுதாதவர்களை, `கற்கால மனிதர்கள்' என ஈஸியாகச் சொல்லிவிடுகிறார்கள். அரசாங்கம் முதல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சினிமா வரை எல்லாவற்றையும் விமர்சித்து ஃபேஸ்புக் சுவரில் எழுதுகிறோம். நிஜ சுவரில் இதுபோன்ற புரட்சியைச் செய்த வரலாறுதான் `கிராஃபிட்டி’.
 
இது ரோமன் காலத்துக் கலை. எந்த ஒரு தளத்திலும் (Surface) நாம் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளத்தைப் பதிவுசெய்வதுதான் கிராஃபிட்டி. மலையில், பேருந்தில், கோயிலில், டாய்லெட்டில்... என எங்கும் நாம் வரையும் கிறுக்கல்கள்கூட அப்படித்தான். `கிராஃபிட்டி’ என்றால் இத்தாலி மொழியில் `கிறுக்குவது’ என அர்த்தம்.

ஹிப்ஹாப் என்ற கலாசாரத்தின் இசை வடிவமே ராக். அதன் ஓவிய வடிவம், கிராஃபிட்டி. 1960-களில்தான் இது புகழ்பெற ஆரம்பித்தது. அன்றைய அமெரிக்காவில் ஒருவர், கிடைக்கும் சுவர் எங்கும் தன் பெயரை எழுதிக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் அவர் பெயர் பெரும்பாலான மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. அப்போதுதான் மக்கள் சுவர்களை தங்களின் கருத்துக்களைச் சொல்லும் மீடியமாகப் பார்த்தார்கள்.  அரசாங்கத்தை எதிர்த்து கருத்துச் சொல்லவும் சுவரைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பிறகு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சுவர்களில் ஓவியம் வழியாகவும், அரசியல் கேலிச் சித்திரங்கள் மூலமாகவும், கிராஃபிட்டி கலை அதிவேகமாக வளர்ந்தது.

கிறுக்கல் கலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு ஏரியா சுவரில் யார் பெயர் இருக்கிறதோ, அவர்தான் அந்த ஏரியா `ரூட்டு தல’ என்பது, ஆரம்பத்தில் அமெரிக்காவில் இருந்த நடைமுறை. அடுத்த ஏரியா ஆட்கள் அந்தச் சுவரில் ஏதாவது எதிர்த்து எழுதிவிட்டால் அவ்வளவுதான், `ரூட்டு தல டொக்காகி விட்டார்’ என அர்த்தம். இந்தியாவில் `கிராஃபிட்டி’ என்றால் அரசியல் சுவர் விளம்பரங்கள்தான். சமீபத்தில்தான் மற்ற வகை ஓவியங்களை வரையத் தொடங்கியிருக்கிறார்கள்.

`நம் கலாசாரத்தில் இல்லாத ஓவியமா... கிராஃபிட்டியில் என்ன புதுசு?’ என்ற சந்தேகத்தை சென்னையைச் சேர்ந்த கிராஃபிட்டி கலைஞர் ஜாய்ஸ்டனிடம் கேட்டேன்.

``சுவர் ஓவியங்கள் என்பவை ஏற்கெனவே இருக்கும் ஒரு பிம்பத்தின் நகலாக வரையப் படுபவை. அவை கிராஃபிட்டி ஆகாது. மற்ற ஓவிய வகைகளைப்போல கிராஃபிட்டியில் எந்த விதிகளும் இல்லை. எதையும் புதிதாக, சுதந்திரமாக வரையலாம். அதுதான் இதன் தனித்தன்மை” என்கிறார் ஜாய்ஸ்டன்.

கிறுக்கல் கலை!

சென்னை, ரிட்ச்சி தெருவில் கடை வைத்தி ருக்கும் ஒருவர் ஜாய்ஸ்டனை அழைத்து, தெருச் சுவரில் மக்கள் எச்சில் துப்புவதாக வருத்தப் பட்டிருக்கிறார். உடனே அந்தச் சுவரில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் மார்லன் பிராண்டோ முதல், நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை கிராஃபிட்டி கலையைப் பயன்படுத்தி, சுவரில் கொண்டு வந்துவிட்டார் ஜாய்ஸ்டன். அதன் பிறகு மக்கள் யாரும் அந்தச் சுவரை அசுத்தமாக்கவில்லை.

கிறுக்கல் கலை!

பிறந்த எல்லா குழந்தைகளும் யாரும் சொல்லிக்  கொடுக்காமலேயே ஒரு சில விஷயங்களைச் செய்வார்கள். அதில் முக்கியமானது சுவரில் கிறுக்குவது. அந்த வகையில் எல்லோருமே கிராஃபிட்டி கலைஞர்கள்தான். வளர வளர அந்தத் திறமை குறைகிறதே தவிர, யாரும் வளர்த்துக்கொள்வது இல்லை. ஜாய்ஸ்டன்போல ஒரு சிலர் அதைப் பிடித்துக்கொள்கிறார்கள்.

``நம்ம ஊருல கிராஃபிட்டிக்குப் பெரிய மதிப்பு இல்லை. மலையாளத்துல `பெங்களூர் டேஸ்'னு ஒரு படம். அதுல ஹீரோ துல்கர் சல்மான் கிராஃபிட்டி கலைஞரா வருவார். அதே படம் தமிழ்ல ரீமேக் பண்ணப்ப, ஹீரோவை செல்ஃபி பிரியரா மாத்திட்டாங்க” என சோக எமோஜி போடுகிறார் ஜான்.

கிராஃபிட்டி கலையைக் கொண்டாடுவோம் மக்களே!