`Are you looking for a change?’ - இந்த வாக்கியமே எங்களின் `திருவாசகம்’. நீங்கள் எந்த நிறுவனத்துக்கு வேலைக்குப் போனாலும் முதலில் உங்களைச் சந்திப்பது நாங்கள்தான். அதேபோல் நீங்கள் வேலையைவிட்டுப் போகும்போது உங்களை கடைசியாகச் சந்தித்து வழியனுப்புவதும் நாங்கள்தான். சிலர் புன்னகையோடு பிரிவார்கள்; பலர் திட்டிக்கொண்டே போவார்கள். இப்போது புரிந்திருக்குமே... நாங்கள்தான் மனிதவள மேம்பாட்டு ஊழியர்கள், சுருக்கமாக HR.

பொதுவெளியில் ஹெச்.ஆர் என்றால் பயங்கர பவர்ஃபுல் ஆட்கள், ஓர் அலுவலகத்தின் எல்லா இடங்களுக்குள்ளும் நுழையும் சர்வவல்லமை படைத்தவர்கள் என்பதுபோல கெத்துகாட்டும் நாங்கள் படும் அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா... கொஞ்சம் இருங்க மூச்சுவிட்டுக்கிறேன்.

வேலை தேடும் படலம் ஆரம்பித்ததும், ரெஸ்யூமை `நெளக்ரி', `மான்ஸ்டர்' போன்ற ஜாப் போர்ட்டல்களில் அப்லோடுவது ஒரு சம்பிரதாயம். அதாவது `நான் இந்த வேலையில் இருக்கிறேன். இதே வேலைக்கு ஆள் தேவைப்பட்டால், என்னைத் தொடர்பு கொள்ளவும்’ என்ற ஓப்பன் இன்விடேஷன். பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்தான் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். `அப்ரைசல் சரியாக இல்லை’, `நல்ல இன்க்ரிமென்ட் கிடைக்கவில்லை’ போன்ற காரணங்களால் ராஜினாமா செய்துவிட்டு, 30-40 சதவிகிதம் சம்பள உயர்வு தரும் கம்பெனிகளை நோக்கிப் படையெடுக்கக் கிளம்பிவிடுவது ஐ.டி கலாசாரம். மற்ற வேலைகளில் இருப்பவர்களுக்கும் இதே கலாசாரம் இப்போது தொற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இவ்வாறாக `பேப்பர் போட்ட’ ஆட்களின் இடத்தை நிரப்புவது எங்கள் வேலை. இதற்கான ஜாப் டிஸ்கிரிப்ஷன், ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும் என்பதுபோல் இருக்கும். அதைப் படித்துப் புரிந்துகொண்டு, கூகுளில் குடைந்து, டெக்னிக்கல் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்துகொண்டு, நெளக்ரியில் டெக்னிக்கல் வார்த்தைகளைப் போட்டு, சில ரெஸ்யூம்களைப் படித்து, போன்செய்து `ஆர் யூ லுக்கிங் ஃபார் ஜாப் சேஞ்ச்?’ என்ற வாசகத்தில் ஆரம்பித்து, பேசி, அந்த ரெஸ்யூமை ஹயரிங் மேனேஜருக்கு அனுப்பினால்... `மிக்ஸி இல்லையே, கிரைண்டர் இல்லையே’ எனக் கூறிவிடுவார்.

சரி, `விடாமுயற்சி விஸ்ரூப வெற்றி’ என மீண்டும் தேடிப்பிடித்து ஒருவனை இன்டர்வியூக்கு அனுப்பினால், `காது நார்மலா இல்லை, ஐப்ரோ லெங்த் இல்லை, ஷார்ப் நோஸ் இல்லை’ எனக் கழித்துக்கட்டுவார்கள். இதற்கு இடையில் நம் ஹயரிங் மேனேஜர் `தீயா வேலைசெய்யணும் குமாரு’ என மோட்டிவேட் செய்கிறேன் என்ற பெயரில் கடுப்பேற்றுவார். இதில் ஒரு வாரம் ஓடிவிடும். அப்போது மனவிரக்தியில் நெளக்ரியில் விளம்பரம் போடலாம் எனப் போட்டால், மெயில் குவியும். 100 மெயில்களில் நான்கு தேறும். அவர்களிடம் பேசி இன்டர்வியூவுக்கு அனுப்பும்போது, `ஜெய் மகிழ்மதி’ என வீர முழக்கமிட்டு, `நாலுல ரெண்டாவது தேறணும்’னு குலதெய்வத்தை வேண்டிக்கிட்டு இருக்கணும். இதுல ஒண்ணு தேறும். அப்படி ஒண்ணுமே தேறலைனா எங்க தலைதான் உருளும்.

இது மாதிரி 10 வேற வேற லெவல்ல வேற வேற பொசிஷன்ல ஆட்களைத் தேடணும்கிறபோது நிலைமை ரொம்பக் கவலைக்கிடமாகிடும். ஆனா, இந்த பிரஷரைக் கொஞ்சமும் காட்டாம, குரல்ல கனிவோடு வேலை தேடுபவர்களை அணுகும்போது, கிரெடிட் கார்டு வாங்கக் கூப்பிடுற மாதிரி விரட்டிவிடுவாங்க. சரி, கிடைத்த ஒருவரை இன்டர்வியூ செய்யலாம் என மேனேஜரிடம் ஒரு டைம் ஸ்லாட் வாங்கி கேண்டிடேட்டுக்கு டைம் சொல்லலாம்னு போன்செய்ததுமே கட் செய்துவிடுவார். பிஸியா இருக்கிறாராம்.

10 நிமிடங்கள் கழித்து மிஸ்டு கால் குடுப்பார். `சரி, ஆபீஸ் காசுதானே... அவங்களே போன் போடட்டும்’னு நினைத்திருப்பார். அதான் உண்மை, சரி நாமே கால் செய்வோம் என அழைக்கும்போது, `மீட்டிங்ல இருந்தேன். அதான் போன் அட்டெண்ட் பண்ண முடியலை’ என்பார். டீ குடிக்கத்தான் போயிருப்பார் என்பது தெரிந்த விஷயம்.

`சரி, இந்தத் தேதி, இந்த நேரம் உங்களுக்கு இன்டர்வியூ. டெலிபோன் இன்டர்வியூதான், எடுக்க முடியுமா?’ எனக் கேட்டால், உடனே ஒப்புக்கொள்ள மாட்டார்கள், `செக் பண்ணிச் சொல்றேன்’ என்பார்கள். மறுபடியும் போன் பண்ணி வேற ஸ்லாட் இல்லை, இதுதான் ஃபைனல் எனக் கொஞ்சம் அழுத்திச் சொல்லும்போது, போனால் போகட்டும் என ஒப்புக்கொள்வார்கள். டெலிபோன் இன்டர்வியூவில்தான் நல்ல கூத்து நடக்கும். `சிக்னல் கிடைக்கலை’, `சுவிட்ச்டு ஆஃப்’, `மேனேஜர் பக்கத்துல இருக்கார்’, `கிளையன்ட் கால்’னு பல சாக்குபோக்குச் சொல்லித் தள்ளிப்போடுவாங்க. ஏன்னா, டெலிபோன் இன்டர்வியூ எடுக்க மூட் இருக்காது. அதுதான் உண்மையான காரணம். ஹயரிங் மேனேஜர் `இது எல்லாம் முதல்லயே நீங்க சரிபார்க்க மாட்டீங்களா?’னு நம்மைக் கிழிப்பார்.

ஆனால், எங்களால் கேண்டிடேட்டைத் திட்ட முடியாது. இன்னொரு ஸ்லாட் வாங்கி மறுபடியும் ஷெட்யூல் போட்டு, `இந்த முறை நிச்சயமா இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணணும். இல்லைனா மறுபடியும் எடுக்க முடியாது’ என ஐ.சி.யூ வார்ட் நர்ஸ்போல் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, `இந்த முறை அந்த கேண்டிடேட் நிச்சயம் ஃபோன் எடுப்பார்' என வாக்குறுதி குடுத்து, எடுக்கவெச்சுருவோம். அப்புறம் இப்படி ஒரு இன்டர்வியூ நடந்ததே மேனேஜருக்கு மறந்துடும். நமக்கு நல்லா ஞாபகம் இருக்கும். ஏன்னா, அது நம்ம டார்கெட். ஒரு வாரமாவது ஆகும்... அது என்ன ஆச்சுனு தெரிஞ்சுக்க. இதற்கு இடையில் கேண்டிடேட் தினமும் நமக்கு போன் போடுவார். `என்னாச்சு... என்னாச்சு... எனக்கு எப்போ இன்டர்வியூ?னு கேட்பார். அவர்கிட்ட, `இங்க மேனேஜர் இன்னும் பார்க்கலை’னு சொல்ல முடியாது. ‘மேனேஜர், மீட்டிங் போயிட்டார்; ஆன் சைட் போயிருக்கார்; வெளியூர் போயிருக்கார். இன்னும் அவர் சொல்லலை, பார்த்துச் சொல்வார்’னு ஒரு வாரத்தைக் கடத்தினதும், நம்மை மறந்துடுவாங்க. அப்புறம் 15 நாட்கள் கழிச்சு, `நேர்ல இன்டர்வியூக்குக் கூப்பிடுங்க’னு சொல்வார் மேனேஜர். ஆனால், கேண்டி டேட்டுக்கு மீண்டும் நம்மை ஞாபகப் படுத்துறதுக்குள்ள, `மூன்றாம் பிறை’யில் கமல், ஸ்ரீதேவிக்கு தன்னை ஞாபகப்படுத்த பட்ட பாடைவிட கொடுமையா இருக்கும்.

சரி, லக்கிலி கேண்டிடேட்டுக்கு நம்மை ஞாபகம் வந்துருச்சுனு வெச்சுக்கங்க, ‘கோடானு கோடி நன்றிகள்’னு சொல்லிட்டு அவரை வரச் சொல்வோம். அப்போதான் செத்த பாட்டியைத் திரும்பவும் கொல்வாங்க. நல்லா இருக்கிற டயரை, பஞ்சர் ஆக்குவாங்க. நல்லா இருக்கிற உடம்பை ஆக்ஸிடன்ட் ஆக்குவாங்க. `வேலை இருக்கு, இன்னொரு நாள் கண்டிப்பா அட்டெண்ட் பண்றேன். இன்னொரு நாள் ஷெட்யூல் பண்றீங்களா?’ எனக் கேட்கும் நல்ல மனிதர்களுக்கு நம் நாட்டில் பஞ்சம் இல்லை. இப்படி ஒருவழியா இன்டர்வியூ முடிச்சு அந்த பொசிஷன் க்ளோஸ் பண்ணிட்டோம்னு பெருமூச்சு விடுறப்போ, இந்த கம்பெனியில வாங்கின ஆஃபரைக் காண்பித்து அதைவிட அதிகமா அடுத்த கம்பெனியில ஆஃபர் வாங்கிருவாங்க. நாம் வழக்கம்போல அடுத்த `ஆர் யூ லுக்கிங் ஃபார் ஜாப் சேஞ்ச்?’ஐ தேடுவோம்!