Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

இந்த ஆண்டு சம்மருக்கு கொஞ்சம் ஸ்பெஷல் இடங்களுக்குப் போகும் திட்டம் இருக்கா? உங்களுக்காகவே இந்த சாய்ஸஸ்...

லம்பாசிங்கி - ஆந்திரா

விகடன் சாய்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாகப்பட்டினத்தில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள இந்த மலைப்பகுதியை, `தென் இந்தியாவின் காஷ்மீர்' என்கிறார்கள்.  தென் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் பனிப்பொழிவைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு ஆண்டு முழுவதும் குளிரோ குளிர். டிசம்பரில் மைனஸ் டிகிரி அளவைக்கூட எட்டும் இடம் இது. சம்மரில் காலை 10 மணிக்கு மேல்தான் சூரியனையே பார்க்க முடியும். இங்கு உள்ள காபி மற்றும் மிளகுத் தோட்டங்கள் கண்ணுக்கு இதம். தங்கும் இட வசதிகள் குறைவு என்பதால், அறைகளை இணையத்தில் பதிவுசெய்துவிட்டுச் செல்லலாம். மிஸ் பண்ணக் கூடாத இடம்!

கவி - கேரளா

கேரளா, பத்தனம்திட்டாவில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கிறது இந்தப் பச்சைப் பசேல் கிராமம். அதிகம் வெளியே தெரியாத இடம் என்பதாலேயே, இங்கே இன்னும் இயற்கை அதன் உண்மை அழகுடன் வசீகரிக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், கவிக்குச் செல்ல வல்லக்கடவு வனத்துறை அலுவலகத்தில் அனுமதிபெற வேண்டும். இந்தப் பகுதி, தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தின் உள்ளே இருக்கிறது. யானை, புலி, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, மான் என ஏராளமான விலங்குகள் இருக்கின்றன.

விகடன் சாய்ஸ்

3,500 அடி உயரத்தில் இருப்பதால், எந்நேரமும் ஜில்லென இருக்கும். வழி எங்கும் அருவிகள், வாய்க்கால்கள், ஓடைகள் என உற்சாக அனுபவத்துக்கு கியாரன்டி. இங்கே தங்கும் இடங்கள் எதுவும் இல்லை. ஹோம்ஸ்டேதான் ஒரே வழி. அதற்கும் முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். இதைச் செய்துவிட்டு கவிக்குச் சென்றால், கூலான சம்மர் காத்திருக்கிறது!

பெல்லிக்கல் - தமிழ்நாடு

விகடன் சாய்ஸ்

ஊட்டியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் அதிகம் பிரபலமாகாத, சுத்தமான சுற்றுலாத் தலம். பறவைகளின் அழகை ரசிப்பவர்களுக்கும், ஹனிமூன் ஜோடிகளுக்கும் ஏற்ற இடம். புலிகள், காட்டு எருமைகள் என ஏகப்பட்ட காட்டு விலங்குகள் உலவும் பகுதி. ஏரிதான் பெல்லிக்கல்லின் தனிச்சிறப்பு. சரியான நேரத்தில் அங்கு இருந்தால், காட்டு யானைகள் தண்ணீர் அருந்த வரும் காட்சியைக் கண்டு ரசிக்கலாம். இங்கே தவற விடக்கூடாத இன்னொரு விஷயம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர். பெல்லிக்கல்லில் தங்கும் இடங்கள் குறைவு. ஊட்டியிலேயே தங்கிக்கொள்ளலாம். அமைதியும், பசுமையும், குளிரும் நிறைந்த பெல்லிக்கல் போய்வந்தால் அது உங்கள் நினைவில் இருந்து அகலாது. 

கோகர்னா - கர்நாடகா

`புத்தம்புது பூமி வேண்டும், நித்தம் ஒரு வானம் வேண்டும்...' எனப் புதுமை விரும்புவோருக்கான சரியான சாய்ஸ். கர்நாடகாவில் இருக்கும் மிகச் சிறிய கடற்கரை நகரம் இது. உற்சாகமான சூரியோதயம், பரவசப் பகிரல்கள், மனஅமைதியை அள்ளித்தரும் சூழ்நிலை, உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் நிலவொளி என இயற்கை நம்மை அரவணைத்துக் கொள்ளும் அற்புத சுகானுபவங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

விகடன் சாய்ஸ்

ஐந்து கடற்கரைகள். ஒவ்வொன்றும் ஒரு விதம். தங்குவதற்கு மூங்கில் குடில்கள் உள்ளன. கடலையொட்டி அமைந்திருக்கும் காடுகளை ரசித்தபடி நடை பழகலாம். பழைமையான கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யலாம். பீச் ட்ரெக்கிங் இங்கே பிரபலம்.