உலகின் மிக சக்தி வாய்ந்த, அதிக பணம் படைத்த பிரபலங்கள் மீது போர் தொடுத்து, பத்திரிகை யாளர்கள் ஈட்டிய மிகப் பெரிய வெற்றியே பனாமா பேப்பர்ஸ்!

இங்கிலாந்து பிரதமர் தொடங்கி ஐஸ்வர்யா ராய் வரை நூற்றுக்கணக்கான பிரபலங்களின் பெயர்கள் இந்த ஆவணங்களின் மூலம் வெளிவந்துள்ளன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பல மில்லியன் டாலர் பணத்தை அதிரகசியமாக இவர்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப் பட்டுள்ளது. பரந்துபட்ட அளவில் இத்தனை பிரபலங்களை ஒரே நேரத்தில் இதுவரை யாரும் அம்பலப்படுத்தியதாக வரலாறே இல்லை.

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஜாக்கி சான், டேவிட் கேமரூன், ஸ்டான்லி குப்ரிக், விளாதிமிர் புடின், லியோனல் மெஸ்ஸி எனத் தொடங்கி பல நாடுகளைச் சேர்ந்த, பல துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரபலங்களின் எதிர்காலம், பனாமா ஆவணங்களால் கறை படிந்திருக்கிறது. இவர்களில் சிலர் தங்கள் பதவியை ஏற்கெனவே இழந்துவிட்டார்கள். இன்னும் சிலர் விரைவில் பதவி இழக்கக்கூடும். `எனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை' என, சிலர் தப்பித்துவிடுவதும் சாத்தியம்தான். ஆனால் ஒன்று நிச்சயம், விதிவிலக்கு இல்லாமல் எல்லோருடைய நம்பகத்தன்மையும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அந்த அளவில் பனாமா ஆவணங்களின் நோக்கம் ஏற்கெனவே நிறைவேறிவிட்டது.

பனாமா விவகாரம்!

இந்த விவகாரத்தை, குழந்தைக்கும் புரியும்படி அனிமேஷன் முறையில் எளிமைப்படுத்தி பலரும் விளக்கியிருக்கிறார்கள். அவற்றில் புகழ்பெற்றது, `பிக்கி பேங்க்’ உதாரணம். ஒரு குழந்தை, தன் வீட்டு உண்டியலில் நாணயங் களைச் சேகரித்துவருகிறது. ஆனால் வீட்டில் உள்ள அம்மா, அந்த உண்டியலை அடிக்கடி எடுத்துப் பார்க்கிறார். `அது எப்படிக் கிடைத்தது, எங்கிருந்து வந்தது, அதற்குள் இவ்வளவு பணம் சேர்ந்துவிட்டதா?' என்றெல்லாம் கேட்கிறார். உடனே குழந்தை உண்டியலை எடுத்துக்கொண்டு போய் தன் தோழியின் வீட்டு அலமாரியில் வைத்துவிடுகிறது. அங்கே எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படுவதும் இல்லை; உண்டியலும் பாதுகாப்பாக இருக்கிறது.

இதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்க வீடுகளில் உள்ள குழந்தைகளும் தங்கள் பெயர் எழுதப்பட்ட உண்டியலைக் கொண்டுவந்து அதே வீட்டில் வைக்கின்றன. ஒருநாள் அந்த அலமாரியைத் திறந்துபார்த்த அந்த வீட்டம்மா உள்ளே பல வண்ணங்களில் உண்டியல்கள் நிறைந்திருப்பதைக் காண்கிறார். எல்லா வீடுகளுக்கும் தகவல் அனுப்புகிறார். எல்லா குழந்தைகளும் மாட்டிக் கொள்கின்றன.

ஆனால் நிஜத்தில், நீங்கள் உங்கள் உண்டியலை வைத்துக்கொண்டு குழந்தையைப்போல் திண்டாடவேண்டியது இல்லை. அதை எப்படி, எங்கே பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைத்திருக்கவேண்டும் என ஆலோசனை கூற, பல சட்ட நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. `நீங்கள் யார், உங்கள் பின்னணி என்ன, உங்களுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது?' என்றெல்லாம் கேள்வி கேட்டுத் துளைக்காமல், நீங்கள் கொடுப்பதைப் பத்திரமாகப் பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கும் திறன் இவர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர்கள் கையாளும் உத்தி நுணுக்கமானது மட்டும் அல்ல, அயர்ச்சியூட்டக் கூடிய அளவுக்குக் குழப்பமானதும்கூட.

நம் வசதிக்காக சுருக்கமான அந்த நடைமுறை உத்தியை இப்படி புரிந்துகொள்ளலாம். முதலில் உங்களுக்காக பிரத்யேகமாக ஒரு லெட்டர் பேட் நிறுவனம் உருவாக்கப்படும். இதை `ஷெல் கம்பெனி' எனச் சொல்வார்கள். உங்கள் பணம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும். இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை சில வழக்குரை ஞர்களும் அக்கவுன்டன்ட்டுகளும் கவனித்துக் கொள்வார்கள். அவர்களுடைய பெயர்கள் நிர்வாகிகளாகக் காட்டப்படும். இந்த நிர்வாகிகள், உங்கள் முதலீட்டைப் பிரித்து வெவ்வேறு இடங்களில் மறுமுதலீடு செய்வார்கள். அவை ரியல்எஸ்டேட் போன்ற சட்டத்துக்கு உட்பட்ட துறைகளாக இருக்கலாம் அல்லது திரைமறைவு வேலைகளாகவும் இருக்கலாம்.

சம்பந்தப்பட்ட நபர், எப்போது வேண்டு மானாலும் இந்த லெட்டர் பேட் நிறுவனத்திடம் இருந்து தன் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆரம்பம் முதல் இறுதி வரை உங்கள் பெயர் வெளியில் வரவே வராது. ஷேர் மூலமாகவும் பாண்ட் மூலமாகவும் உங்கள் பதுக்கல் பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். இப்படிச் சேரும் செல்வத்துக்கு நீங்கள் உங்கள் சொந்த நாட்டிலும் வரி செலுத்தவேண்டியது இல்லை; ஷெல் நிறுவனம் அமைந்திருக்கும் சொர்க்கபுரியிலும் வரி செலுத்தவேண்டியது இல்லை.

மேற்படி ஷெல் நிறுவனங்கள், பொதுவாக சுவிட்ஸர்லாந்து, கேமன் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பனாமா போன்ற வரி இல்லா சொர்க்கபுரிகளில்தான் தொடங்கப்படும். இந்தக் காரியங்கள் அனைத்தையும் ஏற்று நடத்த பல சட்ட நிறுவனங்கள் உலகெங்கும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் தற்போது சிக்கியிருக்கும் `மொசாக் ஃபொன்சேகா' என்னும் நிறுவனம்.

எப்படிச் சிக்கினார்கள்?

அமெரிக்க ராணுவ ரகசியங்களையே விக்கிலீக்ஸ் அசாஞ்சே, எட்வர்டு ஸ்னோடன் போன்றோரால் உடைத்து வெளியில் கொண்டுவர முடிந்தபோது, ஒரு சட்ட நிறுவனம் பாதுகாத்து வைத்திருக்கும் டிஜிட்டல் தகவல்களை வெளியில் கொண்டுவரமுடியாதா என்ன? முகம் தெரியாத ஒருவரின் உதவியால் மொசாக் ஃபொன்சேகாவின் ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டன. `இன்டர் நேஷனல் கன்சார்டியம் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்ஸ்' என்னும் சர்வதேச அமைப்புதான் இதை ஒருங்கிணைத்தது.

மொத்தம், 2.6 டெரா பைட் அளவு தகவல்கள். அதாவது 11 மில்லியன் ஆவணங்கள். விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களைக் காட்டிலும் இது 100 மடங்கு அதிகம். இந்த பிரமாண்டப் புதையலை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பரிசீலித்துப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு நூற்றாண்டு ஆகும் என்பதால், நூற்றுக் கணக்கான பத்திரிகையாளர்கள் மேற்படி அமைப்புடன் இணைந்து மிகப் பெரிய தேடுதல் வேட்டையை நிகழ்த்தினார்கள். அதற்கு ஓர் ஆண்டு காலம் பிடித்தது. மெள்ள மெள்ள ஒவ்வொரு சொர்க்கபுரியிலும் உள்ள ஷெல் நிறுவனங்களையும், அவற்றில் பணத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும் செல்வந்தர்களையும் இணைக்கும் புள்ளிகளை இணைக்கத் தொடங்கினார்கள். அதிர்ச்சியூட்டும் வகையில் பல நாடுகளைச் சேர்ந்த, வெவ்வேறு துறை சார்ந்த பிரமுகர்களின் கணக்குகள் வெளிப்படத் தொடங்கின. இவர்கள் அவ்வளவு பேரும் மொசாக் ஃபொன்சேகாவின் வாடிக்கையாளர்கள். மொத்தம் 140 நிறுவனங்களில் இவர்கள் தங்கள் செல்வத்தைப் பதுக்கிவைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மொசாக் ஃபொன்சேகாவின் ரகசிய ஆவணங் களை, ஒரு மர்ம நபரிடம் இருந்து மேற்படி பத்திரிகையாளர் அமைப்பு பெற்றிருக்கிறது. வெவ்வேறு பத்திரிகையாளர்கள் வெவ்வேறு சமயங்களில் அந்த நபருடன் சங்கேத மொழியில் சாட்டிங் செய்து தகவல்களைத் திரட்டியிருக் கிறார்கள். தன் அடையாளம் வெளியில் வருவது ஆபத்தானது என்பதால், அவர் தன்னை இறுதி வரை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

யாரெல்லாம் சிக்கியிருக்கிறார்கள்?

பனாமா ஆவணங்கள் உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள ஒரே ஓர் உதாரணம், ஐஸ்லாந்து. இந்த நாட்டின் பிரதமர் சிக்மண்டுர் குண்லாக்சனும் அவர் மனைவியும் ரகசியமாக ஷெல் கம்பெனிகளை உருவாக்கி, பணம் பதுக்கி வைத்திருந்த தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பெரும் எதிர்ப்பலை வீசத் தொடங்கியது. `அவர் உடனே பதவி விலக வேண்டும்’ எனக் கோரிக்கைகள் எழுந்தன. `நாங்கள் சட்டப்படி எந்தத் தவறையும் செய்ய வில்லை' என்றெல்லாம் விளக்கம் அளிக்க முயன்று தோற்றுப்போன அதிபர், கடைசியில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

`நம் நாடு எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவால், நிதி மோசடிதான். நாம் அனைவரும் நேர்மையாக வரி செலுத்த வேண்டும்' என முழங்கிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் முகமும் இருண்டுகிடக்கிறது. அவருடைய கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த மூன்று முன்னாள் எம்.பி-க்கள், பிரபுக்கள் சபையைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் எனப் பலரும் பனாமா ஆவணங்களில் சிக்கியிருக்கிறார்கள். டேவிட் கேமரூனும் நேரடியாக இதில் சிக்கியிருக்கிறார். காலமான அவருடைய தந்தை, மொசாக் ஃபொன்சேகாவின் கஸ்டமர் என்பதாலும், அவர் சொத்தை தற்சமயம் அனுபவித்துவருபவர் கேமரூன்தான் என்பதாலும் அவரும் இந்த நிதி மோசடிக்குப் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. கேமரூனும் தன் தவறுகளைக் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டுள்ளார்.

கேமரூனின் தந்தையைப்போலவே அர்ஜென்டி னாவின் அதிபர் மாரிசியோ மாஸ்ரியின் தந்தையும் இப்படி சட்டத்தை வளைத்து பணம் பதுக்கிவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கேயும் எதிர்ப்புகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. `ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கு நெருக்கமானவர்கள் 2 பில்லியன் டாலரை ரகசியமாகப் பதுக்கியிருக்கிறார்கள்’ என்னும் செய்தி வெளிவந்ததும் வழக்கம்போல் புடின் அமெரிக்காவைக் குற்றம்சாட்டினார். `என் பெயரை இதில் இழுத்துவிட்டது அமெரிக்காதான், இது ஓர் அரசியல் சதி' என்றார். `விக்கிலீக்ஸ்கூட அப்படித்தான் சொல்லியிருக்கிறது. எனவே யாரும் பனாமா பேப்பர்ஸை நம்ப வேண்டாம்' என்றும் எச்சரித்தார் புடின். `நாங்கள் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை' என விக்கிலீக்ஸ் மறுத்து விட்டாலும், கிளிப்பிள்ளைபோல் இன்னமும் `அமெரிக்க சதி’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஊழலுக்குப் பெயர்போன ஒரு நாடாக சீனா வேகமாக மாறிவருகிறது என்பதற்கு மற்றோர் ஆதாரம் பனாமா பேப்பர்ஸ். கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவைச் சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் குடும்பங்கள் பனாமாவில் கணக்கு தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. `கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 1 ட்ரில்லியன் டாலர் சீனாவில் இருந்து வெளியில் பதுக்கப்பட்டிருக்கிறது’ என்கிறது ஒரு குறிப்பு. ஊழலை ஒழிப்பதே தன் முதன்மையான கொள்கை என அறிவித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உறவினர் பெயரில் இரண்டு ஷெல் கம்பெனிகள் இயங்கிவருவது தெரியவந்துள்ளது.

சற்று பக்கத்தில் பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சிக்கலில் இருக்கிறார். அவருடைய மகன்களும் மகள்களும் பணப் பதுக்கலில் நேரடியாக ஈடுபட்டிப்பது தற்போது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் மீடியா, பனாமாவை மும்முரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறது. இப்படி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 143 அரசியல்வாதிகள் பனாமா ஆவணங்களில் சிக்கியிருக்கிறார்கள்.

இறுதியாக, இந்தியா. `மொத்தம் 500 இந்தியர்கள் பனாமா ஆவணங்களில் சிக்கியிருக் கிறார்கள்' என்கிறது பத்திரிகையாளர் அமைப்புடன் இணைந்து பணியாற்றிவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு. பத்ம பூஷண் விருதுபெற்ற பில்லியனர் குஷால் பால் சிங், கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரியல் எஸ்டேட் பெரும்புள்ளி சமீர் கெஹ்லாத், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், சயிஃப் அலிகான் போன்ற பெயர்கள் இதுவரை வெளியில் வந்துள்ளன. இவர்கள் எல்லோருமே தங்கள் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்திருக்கிறார்கள்.

அடுத்தது என்ன?

மொசாக் ஃபொன்சேகா என்பது உண்மையின் ஒரு சிறு துளி மட்டுமே. உலகம் முழுக்க இப்படி பலரின் பல ஆயிரம் லெட்டர் பேட் நிறுவனங்கள் ரகசியமாக இயங்கிவருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான பணக்காரர்களின் பணம் பாதுகாப்பாகப் பதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அத்தனை பேரும் செல்வந்தர்கள் என்பதால், இந்தக் குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்படப் போவது இல்லை. பதுக்கிவைத்த பணம் பறிமுதல் செய்யப்படப்போவதும் இல்லை. ஐரோப்பிய நாடுகளிலேனும் பதவி விலகல் என்ற அளவில் அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப் படுகின்றன. இந்தியாவுக்கு இது ஒரு வார பரபரப்பு. இப்போது எல்லோரது கண்களும் மோடியை நோக்கித் திரும்பியிருக்கின்றன. `கறுப்புப் பணத்தை மீட்போம்' என்பதை மிகப் பெரிய முழக்கமாக முன்வைத்தவர் அவர். அதைச் செயல்படுத்துவதற்கான தருணம் இது. என்ன செய்யப்போகிறோம்?