ஒரு திருநங்கை அல்லது பெண் வித்தியாசமான ஆடை அணிந்து சென்றால் என்ன செய்வோம் நாம்?

நம்மில் பலர் வெறித்துப் பார்ப்போம். சிலர் என்ன பண்ணுவார்கள் என்பதை உங்கள் சாய்ஸுக்கே விட்டுவிடலாம். அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநர் அல்லி கோடெஸ் என்பவர் சைனி பியர்ஸ் என்ற மேடை நாடகக் கலையில் ஆர்வமுள்ள பெண்ணுடன் இணைந்து ஒரு வீடியோ சோஷியல் எக்ஸ்பரிமென்ட் செய்திருக்கிறார். ‘American Reflexxx’ என்ற அந்த வீடியோ இப்போது வைரல்.

ஒருமணி நேரம் ஒரு பெண் எந்த வித எதிர்ப்பும் காட்டாவிட்டால் என்னவெல்லாம் இந்த உலகம் அந்தப் பெண்ணுக்குச் செய்யும் என்பதே கான்செப்ட். தெற்கு கரோலினாவில் இருக்கும் மிர்ட்டில் பீச்சில் இந்த வித்தியாசமான பரிசோதனையை இருவரும் செய்து பார்த்தார்கள். அந்தப் பெண் கண்ணாடி போன்ற ரிஃப்ளெக்டர் மாஸ்க் அணிந்துகொண்டு வீதிகளில் நடக்க நடக்க விதவிதமான எதிர்வினைகள். சிலர் தொட்டுத் தடவிப் பார்க்கிறார்கள். சிலர் கடிக்கிறார்கள். சிலர் கிள்ளுகிறார்கள். சிலர் அடிக்கிறார்கள். சிலர் முரட்டுத்தனமாக இடித்துத் தள்ளுகிறார்கள் என எல்லாமே முரட்டுத்தனமானவை!

அந்தப் பெண் ஆடை அணிந்த விதம் திருநங்கையைப் போலவே இருந்ததாலும், முகம் மறைக்கப்பட்டிருந்ததாலும் மிக மோசமாக சிலர் தாக்கவும் செய்தார்கள். ‘அமெரிக்காவில் வாழும் 73 சதவிகித எல்.ஜி.பி.டி சமூகத்தினர் இது போன்ற தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்தான் என்ற புள்ளிவிபரத்தை உலக மனித உரிமைகள் ஆணையம் சொல்லி இருக்கிறது. அதை சோதித்துப் பார்க்கத்தான் இந்த வீடியோ’ என்று சொல்லும் அல்லி கோடெஸ் தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ரத்தக்காயத்தோடு அந்தப் பெண், ‘இனி இதுபோன்ற சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோவில் நடிக்க மாட்டேன்!’ என்று சொல்லி இருக்கிறார்.

திருந்துவோம்...திருத்துவோம்!

-ஆர்.சரண்