Published:Updated:

சிக்கினாங்க!

சிக்கினாங்க!
சிக்கினாங்க!

சிக்கினாங்க!

லகம் உன்னிப்பாக உற்று நோக்கிய சில ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகள் இவை..!

ஜான் கென்னடி-மர்லின் மன்றோ: அமெரிக்க வரலாற்றில் ஜான் கென்னடி இருக்கும் வரை மர்லின் மன்றோவின் பெயரும் இருக்கும். பார்ட்டிகளில் சந்தித்துக்கொண்ட படங்களையும் தாண்டி இருவருக்குள்ளும் நிகழ்ந்த ரொமான்ஸ் வீடியோ என ஒன்று இன்றுவரை உலகைக் கலக்கி வருகிறது. முகம் சரியாகத் தெரியாவிட்டாலும் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் ஸ்ட்ராங்கான கென்னடி இந்தச் சேட்டையைச் செய்திருப்பார் எனச் சொல்பவர்களும் உள்ளனர். இந்த வீடியோவை அமெரிக்காவின் மன்ஹாட்டனைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் 1.5 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி இருக்கிறார். தன் பெர்சனல் கலெக்‌ஷனுக்காகவாம்! பலர் பணத்தைக் கொட்டிக் கொடுத்துக் கேட்டும் அந்த வீடியோவைத் தரவில்லை அவர்.

சிக்கினாங்க!

கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபராக இருந்த பில் கிளிண்டனின் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றியவர் மோனிகா லெவின்ஸ்கி. இவருக்கும் பில் கிளிண்டனுக்கும் தவறான உறவு இருந்ததாக ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மரபணு சோதனையில் இருவரும் உறவுகொண்டது நிரூபணம் ஆனது. இப்போது மோனிகா லெவின்ஸ்கி வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் பிஸி.

உடி ஆலன் - ஸூன் -யு-ப்ரெவின்: ஹாலிவுட் இயக்குநர் சுடி ஆலனின் வளர்ப்பு மகள் என சொல்லிக்கொண்ட ஸூன் 2014-ல் அவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் எனப் புகார் கொடுத்தார். அப்போது கண்ணீரை மட்டுமே பதிலாகக் கொடுத்தார் உடி. ‘அவள் என் பிரியத்துக்கு உரியவள்’ என்று மட்டும் சொன்னார். ஆனால், சில வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களைக் வைத்து உடி ஆலனைக் காதலிப்பதாகவும் வயது பொருட்டே இல்லை’ எனவும் பேட்டி ஒன்றில் சொன்னார். எக்கச்சக்க வயசு வித்தியாசத்தைக் காரணம் காட்டி உடியைக் கழுவி ஊற்றுகிறார்கள் சிலர். இருவரும் இப்போது ஜோடியாகவே எங்கும் செல்கிறார்கள்.

சிக்கினாங்க!

நடிகையும் பிரபல மாடலுமான கிம் கர்தாஷியனைத் தெரியாத டைம்பாஸ் ரசிகர்களும் இருப்பார்களா? பின்னழகுக்குப் பெயர்போன இந்த அழகியுடன் 33 வயதான வில்லியம் ரே நார்வுட் ஜே என்ற பாடகர் டேட்டிங் போவது போன்ற பலான வீடியோ ஒன்று 2007-ல் செம வைரல் ஆனது. அது வேண்டுமென்றே பிசினஸுக்காகப் பரப்பப்பட்ட வீடியோ என்ற சர்ச்சையும் உண்டு.

சிக்கினாங்க!

அர்னால்டு ஸ்வாஸ்நெகர்- பேட்டி பீனா: உலகை ஆக்‌ஷனில் கலக்கிய அர்னால்டு ஸ்வாஸ்நெகர் சின்ஸியராய் காதல் மனைவியோடு மட்டும் வாழ்ந்து வந்தவர் என்ற பிம்பம் சில வருடங்களுக்கு முன் உடைந்தது. மனைவி மரியா ஸ்ரிவருக்குத் தெரியாமலேயே தனி ட்ராக் ஓட்டி இருக்கிறார். ஆம். வீட்டு வேலை செய்ய வந்த பேட்டி பீனாவையும் காதலித்து ரகசியமாய் ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறார். சமீபத்தில்தான் அந்தப் பெண், அர்னால்டின் புஜ பல பராக்கிரமங்களைப் பேட்டியில் 13 வயது மகனோடு பீனா சொல்லியிருக்கிறார். மனைவி ஸ்ரிவரிடம் அதற்கான ஆதாரங்களை 2011-ல் பீனா காட்டியபோது ஸ்ரிவர் அர்னால்டை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

-ஆர்.சரண்

அடுத்த கட்டுரைக்கு