டப்ஸ்மாஷ் வீடியோக்களால் மட்டுமே ஒரு தமிழ் இளைஞன் அகில உலக வைரலாகி இருக்கிறார். பெயர் தர்ஷன் பிரசாந்த்! ஆஸ்திரேலியா மெல்பெர்ன்வாசி! அங்கு இருக்கும் புகழ்பெற்ற மொனாஷ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார். வாட்ஸ்-அப்பில் ‘ஹாய்’ சொன்னால் அடுத்த செகண்ட் ‘’கூப்பிடட்டுமா அண்ணா?’’ என்று லைனில் வருகிறார்.

‘’யார் பாஸ் நீங்க?’’

‘’அண்ணா என்ட பேரு தர்ஷன். நான் இலங்கையில் பிறந்தவன். 17 வயதில் ஸ்காலர்ஷிப் கிடைத்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டம் படிக்க வந்தேன் நான். உலகம்போற்றும் பெரிய கிரிமினல் லாயராக வர வேண்டும் என்பது என்ற கனவு!’’

‘’ஆனால், உங்க டப்ஸ்மாஷை கல்பனா அக்காவில் ஆரம்பித்து ஆர்யா வரைக்கும் ஷேர் செய்கிறார்களே. என்ன நடக்குது?’’

‘’அதான் அண்ணா ஆச்சர்யமா இருக்கு. டப்ஸ்மாஷ் என்ற விஷயம் பாப்புலரான சமயம் நான் ‘ஓகே கண்மணி’ படத்தின் துல்ஹருடைய ஒரு டயலாக்கை டப்ஸ்மாஷ் பண்ணிப்போட்டேன். எக்கச்சக்க ஷேரிங். ஆயிரக்கணக்கான பேர் ஒரே இரவில் இன்பாக்ஸ் வந்து நிறைத்தார்கள். அடுத்தடுத்த நாட்கள் தல அஜீத்தின் டயலாக்கை டப்ஸ்மாஷ் பண்ணிப்போட்டேன். என் பெயரில் ஃபேன்ஸ் பேஜ் உருவாக்கி அன்பு காட்ட ஆரம்பித்து விட்டார்கள். ‘என்னமோ தெரியலை உங்களைப் பார்த்தா ரொம்பப் பிடிச்சிருக்கு!’ என போன் பண்ணி வாழ்த்தினார்கள். வாரத்துக்கு 5 காதல் அப்ளிகேஷனாவது வர ஆரம்பித்தது. நண்பர்கள் ஏகக் கடுப்பானார்கள். சில பெண்கள் சீரியஸாக லவ் பண்ணுவதாக நேரிலேயே வந்து என்னிடம் சொல்லும்போது நம்புவதா வேண்டாமா என்றுகூட தெரியாமல் இருந்தது. ஆனால், வயது வித்தியாசமே பார்க்காமல் இந்தப் பொடியனிடம் ஐ லவ் யூ சொல்லும்போது எனக்கே என்னைப் பார்த்து பயம் வர ஆரம்பித்து காய்ச்சலே வந்து விட்டது. நண்பர்கள் இப்போது என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். சினிமா ஸ்டைலில் சில பெண்கள் பொக்கே அனுப்புகிறார்கள். சிலர் அட்ரஸ் கண்டுபிடித்து நேரில் வந்து ‘எங்கூட ஒரு காபியாச்சும் குடி!’ என்ற செல்ல மிரட்டல் விடுக்கிறார்கள். பயந்து போய் கொழும்புவில் இருக்கும் அம்மாவுக்கு போன் பண்ணி அழுதிருக்கிறேன் தெரியுமா?’’

‘’ஹாஹா...வேறென்ன ஆஸ்திரேலியாவில் செய்கிறீர்கள்?’’

‘’24 வயதில் சட்டம் படிக்கும் சின்ஸியர் மாணவனாய் இருந்த என்னை இப்போது டப்ஸ்மாஷ் புகழ் தர்ஷனாக மாற்றி இருக்கிறது இணையம். சென்னையில் இருந்து உதவி இயக்குநர்கள் சிலர் கால் பண்ணி ‘படம் பண்ணலாம் ப்ரோ’ என்றுகூப்பிடுகிறார்கள். பல்கலைக் கழக கலைவிழாக்களில் ‘காதல் பித்தன்’ என்ற தலைப்பில் தமிழ்க்கவிதைகள் வாசிப்பேன். அதற்கான ஆங்கில அர்த்தம் சொல்லும்போது கைதட்டல் கிடைக்கும். தமிழ் மொழிதான் உலகின் அற்புதமான மொழி என்று உணர்ந்த தருணம் அது. என் கவிதைகளுக்கு இங்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ‘அன்டோல்டு’ என்ற ஆஸ்திரேலிய வாழ் ஈழ அகதி மக்களைப்பற்றிய சொல்லப்படாத பக்கங்களை குறும்படமாக நண்பர்கள் எடுக்க இருக்கிறார்கள். அதில் நான் தான் கதாநாயகன். எனக்கு ஜோடி ஒரு ஆஸ்திரேலியப் பெண். சில வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்தபோது ‘வானவில் பாலம்’ என்ற டெலி சீரியலில் நடித்த அனுபவத்தில் இதில் நடிக்கப்போகிறேன்.”

‘’கோடம்பாக்கம் எப்போ என்ட்ரி பாஸ்?’’

‘’சென்னைக்கு 6 வருடங்களுக்கு முன் வந்திருக்கிறேன். ஆனால், என் அம்மம்மா பிறந்தது அருப்புக்கோட்டதான். அந்த ஊருக்கு அம்மாவும் அப்பாவும் நேரம் கிடைக்கும்போது வருவார்கள். என் பூர்வீகம் தமிழ்நாடுதான். எனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். விரைவில் வெண்திரையில் என்னைக் காணலாம். என்னை வாழ்த்துங்கள்!’’

வாழ்த்திட்டாப் போச்சு!

-ஆர்.சரண்