Election bannerElection banner
Published:Updated:

செம லூஸுங்க!

செம லூஸுங்க!
செம லூஸுங்க!

செம லூஸுங்க!

செம லூஸுங்க!

வேலைனு வந்துட்டா, அது திருட்டே ஆனாலும் பக்காவா ஸ்கெட்ச் போட்டு செய்வான் வெள்ளைக்காரன். ஆனா, உலகம் முழுக்க முட்டாள்தனமா சின்னச்சின்னத் தப்புகளைப் பண்ணி மாட்டிக்கிட்ட படா கேடி கில்லாடி கிரிமினல்களின் லிஸ்ட் இது...படிச்சு சிரிச்சுக்கோங்க மக்களே!

•   பெர்லினைச் சேர்ந்த க்ளாஸ் மித் என்ற பலே திருடன் ஒரு பேங்கை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்திருக்கிறான். அவன் கேட்ட கேள்விகள் மற்றும் பேங்க் ஊழியர்களோடு அவன் பேசிய பேச்சுகள் வினோதமாக இருந்ததும் அங்கிருந்த மிஸ்டர் பப்ளிக் ஒருவருக்கு சின்ன சந்தேகம். நேராக அவனிடம் போய், ‘உங்களுக்கு பை வேண்டுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘ஆமா, இது நிஜமான துப்பாக்கிதான்!’ எனத் தலையாட்டி சொல்லி இருக்கிறான். டவுட் க்ளியர். அந்தத் திருடனுக்குக் காது கேட்காது. அப்புறம் என்ன... அலார்மை ஆன் செய்ய எந்த வித ரியாக்‌ஷனும் காட்டாமல் பணத்தை அடுக்கிக்கொண்டிருந்ததுதான் க்ளாஸ். போலீஸ் சுற்றி வளைத்து ஆளை மடக்கிவிட்டது. மக்கு பாய்!

•   திருட்டுத் தொழிலுக்கு சீரியல் பார்ப்பதும் அவசியம் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தச் சம்பவம் அதற்கு உதாரணம். 90-களில் அமெரிக்காவின் பிரபல சேனலில் ஒளிபரப்பான ‘லிசா தி ஸ்கெப்டிக்’ என்ற க்ரைம் சீரியலின் கதைகளில் ஒன்று ‘இலவசமாக மோட்டார் போட்கள் தருகிறோம்’ என கிரிமினல்களின் ஆசையைத் தூண்டி வரவைத்துப் பிடிப்பார்கள். 2011-ல் அதே டெக்னிக்கைப் பயன்படுத்தி ஒரு நிறுவனம், ‘வான்டட் கிரிமினல்களுக்கு இலவச பீர் வழங்கும் விழா’ என அறிவிப்பு செய்ய அதையும் நம்பி 19 கிரிமினல்கள் வந்து போலீஸின் ஸ்டிங் ஆபரேஷனில் மாட்டிக்கொண்டார்கள். மொடாக்குடி கிரிமினல்ஸ்!

•   2008-ல் ரூபன் என்ற 18 வயது பிஞ்சுத் திருடன் துணிக்கடைக்குள் நுழைந்திருக்கிறான். துப்பாக்கி முனையில் பணத்தைக் கேட்டிருக்கிறான். ஆனால், கடையில் மேனேஜர்  இல்லை. ரூபனுக்குப் பசி வேறு. அப்போது தோன்றிய யோசனை தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது. கடையில் இருக்கும் சிப்பந்தி ஒருவனிடம் ஒரு துண்டுச்சீட்டில் தன் செல்போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு மேனேஜர் வந்ததும் தன்னைக் கான்டாக்ட் பண்ணச் சொல்லிவிட்டு லஞ்ச் சாப்பிடப் பக்கத்து ரெஸ்ட்டாரென்டுக்குப் போயிருக்கிறான். அப்புறம் என்ன... போலீஸுக்கு விஷயம் போய் லஞ்ச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே ஆளைத்தூக்கி இருக்கிறார்கள். என்ன கொடுமை ரூபன்!

•   ‘ஏழு கழுதை வயசாகுது அறிவே இல்லையா?’ - கொலம்பியாவில் ஒரு திருட்டுக் கும்பலை வைத்துதான் இதைச் சொல்றாங்களோ என்னவோ? கொள்ளையடித்த பொருட்களை காரில் எடுத்துச் சென்றால், போலீஸில் மாட்டிக்கொள்வோம் என நினைத்து தங்க ஆபரணங்களை மூட்டை கட்டி சவி என்ற 10 வயதுக் கழுதை முதுகில் பொதியாக வைத்துக் கடத்தி இருக்கிறார்கள். நன்கு திருட்டுத் தொழிலுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட அந்தக் கழுதை என்ன செய்தது தெரியுமா? கன்னாபின்னாவென கத்திக்கொண்டே போயிருக்கிறது. சத்தம் தாங்காமல் போலீஸ் ரவுண்ட் -அப் செய்து மூட்டையைப் பிரித்துப் பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார்கள். கழுத மூளை பாஸ்!

•   ட்ரெவர் ஜோன்ஸ் என்ற இங்கிலாந்து திருடன் மாட்டிக்கொண்ட கதை இன்னும் சுவாரஸ்யம். ஆளில்லாத பூட்டிய வீட்டுக்குள் சென்று திருடும் அவன் அதற்கு முன் 100 முறைக்கு மேல் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவன். வீட்டுக்குள் கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஆசையாகி ஆன் செய்து ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ்  பார்த்திருக்கிறான். சைன்-அவுட் பன்ண மறந்து அப்படியே கிளம்பி இருக்கிறான். போலீஸ் அவனை ஈஸியாகக் கண்டுபிடித்தது. முடிஞ்சுது சோலி!

 

• நியூயார்க்கைச் சேர்ந்த மார்க் ஸ்மித் பலே கில்லாடி. ஆனால், ஆள் சரக்கு வண்டி. திருட நுழைந்த வீட்டுக்குள் இருந்த விதவிதமான சரக்குகளைக் குடித்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் மட்டையாகிவிட போலீஸ் வந்து தட்டி எழுப்பியதும் எழுந்து ‘மே கஹான் ஹூ?’ என்ற ஸ்டைலில் கேட்டிருக்கிறான். பாவம் மார்க் ஸ்மித்.

ஆனா, இவை எல்லாத்தையும் எங்க வடிவேலு சினிமாவில் பார்த்திட்டோம் பாஸ்!

-ஆர்.சரண்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு