தட் ‘உங்க லாஜிக்கே புரியலையே’ மொமென்ட்: இந்த ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியை அப்பப்போ கழுவி ஊத்துற கம்யூனிஸ்ட்கள், வைகோ, ராமதாஸ் போன்றவர்களும் சரி, ‘தமிழர்களுக்கு மதுவை அறிமுகப்படுத்தி ஒரு தலைமுறையைக் கெடுத்தவரே கருணாநிதிதான்’னு ஒரே டெம்ப்ளேட்டாப் பேசுறாங்களே, அப்போ கருணாநிதி கிரேக்கத்தில் இருந்தோ, ரோமாபுரியில் இருந்தோ இறக்குமதி செய்து மதுவைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தினாரா? அதுக்கு முன்னாடி தமிழர்கள் தக்காளி சூப்புனு நினைச்சுட்டுதான் சாராயம் குடிச்சாங்களா? அட, தெரியாமத்தாங்க கேட்கிறேன்!

தட் ‘அதைப் பண்ணுங்க மொதல்ல’ மொமென்ட்: ‘நாம என்ன சொன்னாலும் கேட்பாங்க’னு நினைச்சுக்கிட்டு ஜெயலலிதா சொல்றதுதான் ‘படிப்படியா மதுவிலக்கு’. அதை ஏன் இந்த ஆட்சியில படிப்படியா இறக்காம, கொண்டு போய் மொட்டை மாடியில வெச்சாங்கனு தெரியலை. அதுவும் ‘படிப்படியா மதுவிலக்கு’ கொண்டு வந்துட்டு, ‘மது நோயாளிகளுக்கு மறுவாழ்வு சிகிச்சை மையம்’ அமைப்பாங்களாம். அப்படியே ‘மனநலச் சிகிச்சை மையங்களை’ ஊருக்கு ஊர் ஆரம்பிச்சு, எங்க அத்தனை பேரையும் அங்கே அட்மிட் பண்ணிடுங்க!

தட் ‘வறுத்தெடுக்கிறாங்களே வாட்ஸ்-அப்ல’ மொமென்ட்: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து புதிய நீதிக் கட்சி விலகியது ஏன்? - இப்படி ஒரு தலைப்பில வாட்ஸ்-அப்ல ஒரு காமெடி உலவிக்கிட்டு இருக்கு. படிச்சுப் பாருங்க!

1) 10 தொகுதிகள் கேட்டார் ஏ.சி. சண்முகம்.

2) 20 தொகுதிகளுக்குக் குறைவாக நாங்கள் யாருக்கும் கொடுப்பதில்லை என்றார் தமிழிசை.

3) மறுத்து மறுத்துப் பார்த்தும் தமிழிசை கேட்கவில்லை.

4) எனவே ஹெச்.ராஜாவைச் சந்தித்து முறையிட்டார் சண்முகம்.

5) தமிழிசைக்கு அனுபவம் இல்லை. அதனால் உங்களுக்கு வெறும் 20 தொகுதிகள் கொடுத்துவிட்டார். இது தப்பு. எனவே 30 தொகுதிகளைப் பிடியுங்கள் என்றார் ஹெச். ராஜா.

6) உங்கள் முடிவை ஏற்க முடியாது என்றார் சண்முகம்.

7) நான் டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசுகிறேன் என்றார் சண்முகம்.

8) விஷயம் தெரியாத ஆளா இருக்கீங்களே! நானாவது தமிழ்நாட்டில் மட்டும்தான் தொகுதி தருவேன். அமித்ஷாவிடம் போனால் அவர் கேரளாவில் உள்ள பத்துத் தொகுதிகளையும் சேர்த்து உங்கள் தலையில் கட்டி விடுவார் என்றார் ஹெச். ராஜா.

9) இதனால் கிலி பிடித்துப்போன சண்முகம் கூட்டணியை விட்டு விலகிவிட்டார்.

தட் ‘எப்படிலாம் காமெடி பண்றாங்க’ மொமென்ட்: மனித நேய மக்கள் கட்சியில் இருந்து வெளியே போய் ‘மனித நேய ஜனநாயகக் கட்சி’யை ஆரம்பிச்சிருக்கிற தமிமுன் அன்சாரி, ‘அ.தி.மு.க. கூட்டணியிலேயே எங்களுக்குதான் அதிகத் தொகுதிகள் ஒதுக்கியிருக்காங்க’னு பெருமையாச் சொல்றார். அப்படி எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கியிருக்காங்கனு கேட்கிறீங்களா? ரெண்டு தொகுதிகள். ஆமாங்க, மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு எல்லாம் தலா ஒரு தொகுதி. அதுதான் இந்தப் பெருமை அன்சாரிக்கு. குலாப்ஜாமூன் விளம்பரத்தில் ஒரு சுட்டிப்பையன், ‘நான் ஸ்கூல்ல ரன்னிங் ரேஸில் ரெண்டாவதா வந்தேன்’னு சொல்வான். அவன் அப்பா, ‘மொத்தம் எத்தனைப் பேர் கலந்துக்கிட்டாங்க?’னு கேட்டதுக்கு, ‘ரெண்டு பேர்’னு குறும்பாய் பதில் சொல்வான் அந்தச் சுட்டி. அன்சாரி சொன்னதைப் படிச்சப்போ அந்த விளம்பரம்தான் நினைவுக்கு வந்துச்சு!

தட் ‘இதை மட்டும் செய்யுங்க ப்ளீஸ்’ மொமென்ட்: இதனால் கேப்டன் டி.வி-க்கும் மற்றுமுள்ள சகல தொலைக்காட்சிகளுக்கும் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து விஜயகாந்த் பேச்சை ஒளிபரப்பும்போது கீழே தமிழில் சப்-டைட்டில் போடுங்க. முடியல!