Election bannerElection banner
Published:Updated:

இதோ ஒரு தமிழ் விஞ்ஞானி!

இதோ ஒரு தமிழ் விஞ்ஞானி!
இதோ ஒரு தமிழ் விஞ்ஞானி!

இதோ ஒரு தமிழ் விஞ்ஞானி!

இதோ ஒரு தமிழ் விஞ்ஞானி!

ரே கல்லுல ரெண்டு மாங்காய் தெரியும். ஆனால், பல மாங்காய்களை அடிக்கிறார் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஜெயபிரபு. காணாமல் போகும் விமானங்களைக் கண்டுபிடிக்க, ஒரு மனிதனைத் தாக்கப் போகும் நோய்களைக் கண்டுபிடிக்க, நிலத்தில் இருக்கும் தனிமங்களைக் கண்டுபிடிக்க, விண்வெளி ஆராய்ச்சிக்கு உதவ என அத்தனை வேலைகளையும் ஜெயபிரபு கண்டுபிடித்த ‘காலம்’ என்ற ஒரு கருவி செய்யுமாம்! அவரிடம் பேசினேன்.

‘‘இராமநாதபுரம் எனக்கு சொந்த ஊர். பி.டெக் படிக்கும்போதே, ஆராய்ச்சிகள்ல இறங்கினேன். இன்ஜினீயரிங்கையும், அறிவியலையும் இணைக்கிறதுதான் என்னோட பிரதான நோக்கம். குரங்குல இருந்துதான் மனிதன் வந்தான்னு அறிவியல் சொல்லுது. ஒரு குரங்குக்குப் பசிச்சா, மரத்துல ஏறிப் பழம் பறிக்குது. ஆனால் மனிதன் ஆதிகாலத்துலேயே கல்லை விட்டெறிஞ்சுதான் பழத்தைப் பறிச்சிருக்கான். ஒரு கனமான பொருளை அது மேல எறிஞ்சா, பழம் கீழே விழுந்துடும்னு மனிதனுக்கு எப்படித் தெரிஞ்சுது? குரங்குக்கு இல்லாத இந்தத் திறன் மனிதனுக்கு எப்படிக் கிடைச்சதுனு ஆராயறது முதல் ஆராய்ச்சி. அடுத்து, இறந்த பிறகு மனிதர்கள் எங்கே போறாங்கனு இன்னொரு ஆராய்ச்சி. இந்த ரெண்டையும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கும்போது உருவானதுதான், ‘காலம்’ங்கிற இந்தக் கருவி. மத்தபடி, முதல் ரெண்டு ஆராய்ச்சிகளும் இன்னும் போய்க்கிட்டுதான் இருக்கு!’’ என்று ஆரம்பித்த ஜெயபிரபு, உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது, சேலம் அரசுக் கல்லூரியில் அறிவியல் ஆலோசகராகப் பணிபுரிகிறார்.

‘‘ இந்தக் கருவியினால பிரபஞ்சத்துல உயிருள்ள, உயிரற்ற, உணர்வுள்ள, உணர்வற்ற எதையும் ஆராயலாம். உதாரணத்துக்கு உங்களுக்கு எதிர்காலத்துல என்னென்ன நோய்கள் வரும்னு தெரிஞ்சுக்க, நாங்க கையில ஒரு வாட்ச் மாதிரி கட்டிவிடுவோம். அதுல இருந்து வர்ற ‘அனலைஸர்’ உங்க சதை, ரத்தம், திசு, செல், புரோட்டீன், அமினோ ஆசிட், டி.என்.ஏ, நியூக்லியஸ், புரோட்டான், எலக்ட்ரான், மாலிக்குலார்னு வேர் வரைக்கும் போய், வெப்பத்தை மட்டும் ஆராயும். ஸோ... சிம்பிள்! எந்த செல் ஆக்டிவா இருக்கு? எந்த செல் டீ-ஆக்டிவேட் ஆகியிருக்குனு தெளிவா சொல்லிடும். பிறகு, அதுக்குத் தகுந்த மாதிரி இயற்கையான உணவுகளை எடுத்துக்கிட்டா, இனி வரப்போற நோய்கள்ல இருந்து காப்பாத்திக்கலாம்!’’ என்றவர், அடுத்து விமானங்களைக் கண்டுபிடிக்கும் கதைக்கு வந்தார்.

இதோ ஒரு தமிழ் விஞ்ஞானி!

‘‘ஒரு விமானத் தோட மாலிகுலர்-ஸ்ட்ரெக்சர் இந்த டைம்ல காணாம போச்சுங்கிற டீடெயில், ரேடாரோட டேட்டா இது இருந்தா போதும். உலகத்துல எந்த விமானம் காணாமப் போனாலும் இந்தக் கருவி கண்டுபிடிச்சுடும். எப்படின்னா, விமானத்தோட மாலிகுலார் -ஸ்ட்ரெக்சரை இந்தக் கருவியில இன்புட்டா கொடுத்து, காணாமப் போனதா சொல்லப்படுற இடத்துல இருக்கிற ஆற்றலோட எப்படி ‘ரியாக்ட்’ ஆகியிருக்கும்னு பார்ப்போம். அவ்வளவுதான். எந்த அழுத்தத்துல, எந்த இடத்தை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும்னு கண்டுபிடிச்சுட முடியும். கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ‘டார்னியர்’ விமானம் காணாமப் போனப்போ, என்னைக் கண்டுபிடிக்கக் கூப்பிட்டாங்க. 21 நாடுகள், கோடிக்கணக்கில பணத்தை செலவு செஞ்சு பண்ண முடியாததை, தமிழ்நாட்டுல இருக்கிற எங்க கருவி கண்டுபிடிக்குதுனா, அதுதான் எங்க பவர்!’’ என்றவர்,

‘‘எங்க கண்டுபிடிப்பை நான்குவிதமாகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். இதை, ‘நாஸா’வுக்கும் தெரியப்படுத்தியிருக்கோம். புயல், சூறாவளியைக் கண்டுபிடிக்கிற ‘சைக்ளோனிக் டேட்டா’வை ‘நாஸா’வுக்குக் கொடுக்கிறதுல, எங்க ‘காலம்’ கருவிக்கும் பெரிய பங்கு இருக்கு. நாமக்கல் பக்கத்துல பிளாட்டினம் இருக்கிறதா கண்டிபிடிச்சவங்க, ‘எவ்வளவு அடர்த்தியில இருக்கும்?’னு கண்டுபிடிக்கலை. அதுக்கான முயற்சியில நாங்க ஓரளவு வெற்றி பெற்றிருக்கோம். எங்க முயற்சிகள் தனி மனிதப் பயன்பாட்டுக்குனு இல்லாம, உலகம் முழுக்க இருக்கிற மக்களுக்குப் பயன்படணும்ங்கிறதுதான் எங்க நோக்கம். அதனாலதான், என்னோட கண்டுபிடிப்பை அரசுக் கல்லூரிக்குக் கொடுத்தேன். ‘நாஸா’ எங்களுக்கு அனுப்பிய முதல் இ-மெயிலிலேயே ‘டியர் ஜெயபிரபு. உங்களோட பங்களிப்பைப் பாராட்டுறோம். எங்களால் ஆன உதவிகளை நாங்களும் செய்றோம்’னு பதில் அனுப்பியிருந்தாங்க. இதை விட பெரிய அங்கீகாரம் எதுவும் கிடையாது!’’ என்று முடித்தார், ஜெயபிரபு.

- கே.ஜி.மணிகண்டன், படம்: மா.பி.சித்தார்த்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு