தி.மு.க.

கட்ந்த வாரம் முழுக்கத் தமிழக அரசியல் லைம்லைட்டில் இருந்தது தி.மு.க. அ.தி.மு.க-விற்கு எதிராக ஒரு பதிவு எழுதினால் 200 ரூபாய் தி.மு.க. தருவதாக ஓர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட, #Takethe200Rupees என்ற டேக் ட்ரெண்ட் அடித்தது. இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வெளியிட்ட சில நிமிடங்களில் தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது #தி.மு.க. தேர்தல்அறிக்கை. மறுநாளே, பா.ம.க-வின் ராமதாஸோ, இது எங்கள் அறிக்கை, தி.மு.க. காப்பியடித்து விட்டது எனச் சொல்ல #CopyPasteDmk என்பதும் ட்ரெண்ட் அடித்தது. அமாவாசை, ஜெயிப்பியா?

ரஜினிடா

ரஜினி இந்த முறை வாங்கியிருப்பது பத்மவிபூஷன் விருது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட விருதுகளை, ஏப்ரல் 12-ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். ரஜினி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா எனப் பலர் விருதுகளை வாங்கினாலும், தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது #PadmaVibhushanRajini ரஜினி மட்டுமே. ஆயிரம் அதிசயம் அமைந்தது ரஜினி ஜாதகம்!

அதிர்ச்சி ஓய்வு

விளையாட்டு, அரசியல் எனப் பல துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் பலரைத் திடீரென உடல் நலம் பாதித்துவிடும். இங்கிலாந்தில் இளம் ஹிட்டராக உருவாகிக்கொண்டு இருந்த ஜேம்ஸ் டெய்லர்தான் புதிதாகப் பாதிக்கப்பட்டவர். இருதயக் கோளாறு எனச் சொல்லி, 26 வயதிலேயே தன் கிரிக்கெட் வாழ்விற்கு @jamestaylor20 என ஓய்வை அறிவித்து இருக்கிறார் ஜேம்ஸ் டெய்லர். நலம் பெற பிரார்த்தனைகள்!

சன்னி லியோன்

ஏப்ரல் மாத இறுதியில் வெளியாக இருக்கும் பாலிவுட் திரைப்படம் ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’. என்னடா இது பேரே ஒரு மாதிரி இருக்கிறதென ஷாக் ஆகாதீர்கள். படத்தின் நாயகியும் ஷாக் ரகம் தான். சன்னி லியோன் நடிக்கும் இந்தப் படத்தின் ஒரு பாடல் வெளிவந்து ஏற்கெனவே ஹிட் அடித்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி இருக்கிறது. வெளியான ஒரு வாரத்திற்குள் 17 லட்சம் ஹிட்ஸ் அடித்து இருக்கிறது. #OneNightStand தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது. ஐ யம் வெயிட்டிங்!

கொல்லம் விபத்து

கேரள மாநில கொல்லத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த கோயில் விபத்து உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. நடந்த வெடிவிபத்தில் 110-க்கும் அதிகமானோர் இறந்துபோனார்கள். இனிக் கோயில்களில் பட்டாசுகள் பயன்படுத்தக் கூடாது என்கிற நிலைக்கு இந்த விபத்து மக்களைக் கொண்டு சென்று இருக்கிறது. #KollamTempleBlast என்ற டேக்கில் நடந்த சம்பவங்கள் பற்றி ட்விட்டினர் நெட்டிசன்ஸ். விழித்திரு!

என்ன தப்புதான் செய்தார்?

இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் பலருக்கும் பிடித்தவர் ஹர்ஷா போக்லே. கிரிக்கெட் விளையாடி, ஒருகட்டத்தில் ஓய்வு பெற்று, பின் வர்ணனையாளரான நபர் அல்ல ஹர்ஷா போக்லே. சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டில் வர்ணனையாளராக இருப்பவர். ஆனால், பி.சி.சி.ஐ நிறுவனத்திடம் யார் என்ன சொன்னார்களோ, அவரைத் திடீரென நீக்கிவிட்டார்கள். ஒரு வர்ணனையாளருக்காக இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் எல்லோரும் ட்ரெண்ட் அடித்தது இதுதான் முதல்முறை. #HarshaBhogle #BringBackHarsha போன்ற டேக்குகளில் ஹர்ஷாவுக்கு ஆதரவாக ட்விட்டினர் நெட்டிசன்ஸ். உருப்படியா இருந்த ஒருத்தரையும் தூக்கியாச்சா?

காந்தக் கண்ணழகிகள்

சஞ்சய் தத், சானியா மிர்சா, அர்ஜுன் கபூர் எனப் பல நடுவர்கள் இணைந்து இந்த ஆண்டிற்கான மிஸ் இந்தியாவைத் தேர்வு செய்தனர். அஸ்ஸாம் பெண்ணான ப்ரியதர்ஷினி சாட்டர்ஜிதான் இந்த ஆண்டிற்கான மிஸ் இந்தியா. பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், வெற்றியாளர்களுக்கு கிரீடம் அணிவிக்க களை கட்டியது விழா. #MissIndia2016-ஐ தேசிய அளவில் ட்ரெண்ட் அடிக்க வைத்து ஜொள்ளினர் நெட்டிசன்ஸ். எல்லோருமே அழகாத்தான் இருந்தாங்க!

பைக் இளவரசி

கன ரக டூ வீலர்களைப் பெரும்பாலும் பெண்கள் ஓட்டுவதில்லை. அதிலும் குறிப்பாக, ராயல் என்ஃபீல்டு, ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளை பெண்கள் ஓட்டினாலே ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஜெய்ப்பூர் மாநிலத்தின் வீனு பலிவால் என்ற 44 வயதுப் பெண்தான் இந்தியாவின் டாப் பெண் டூ வீலர் இளவரசி. மத்தியப் பிரதேசத்தின் Gyaraspur கயராஸ்பூர் அருகே அவரது வண்டி தரையில் ஸ்கிட் அடிக்க, கடந்த 12-ம் தேதி இறந்து போனார். #veenupaliwal என்ற டேகில், தேசிய அளவில் அவருக்காக ட்விட்கள் இட்டனர் நெட்டிசன்ஸ். மிஸ் யூ வீனு!

-ட்ரெண்டிங் பாண்டி