Published:Updated:

என் ஊர் !

காரை அரைத்த காட்சி கண்முன் நிற்கிறதுசந்திப்பு: இரா.தமிழ்க்கனல்படங்கள்: எம்.விஜயகுமார்

என் ஊர் !

காரை அரைத்த காட்சி கண்முன் நிற்கிறதுசந்திப்பு: இரா.தமிழ்க்கனல்படங்கள்: எம்.விஜயகுமார்

Published:Updated:
என் ஊர் !
என் ஊர் !

மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன். தோழர்களுக்கு ஏ.எஸ். சென்னை, பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வான இவர், கல்லூரி காலத்தில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டவர். 40 ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைப்பவர், இப்போதுதான் சட்டமன்றத்தில் நுழைந்து இருக்கிறார். தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்    ஏ.எஸ்!

என் ஊர் !
அ.சவுந்தரராசன்
##~##

''63 வயதாகும் நான், ஊரில் இருந்ததைவிட இரண்டு மடங்கு காலம் வெளியூர்களில்தான் இருந்தேன். ஆனாலும், பால்ய நினைவுகள் இன்னும் என் மனதில் அப்பிக்கிடக்கின்றன. நெசவு எங்கள் ஊரின் முக்கியத் தொழில். சிறுவர் களாக இருந்தாலும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து பாவு போடப் போய்விடுவோம். 9 மணிக்கு அவசரமாகக் கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, பள்ளிக்குச் செல்வோம். பள்ளிவிட்டு வந்த பிறகுதான் குளியலே!

ஊருக்கு இரு பக்கமும் ஏரிகள். இரண்டிலும் பெரும்பாலான காலங்களில் தண்ணீர் நிறைந்து இருக்கும். அந்தப் பகுதியே ஒரே நுணா மரங்கள் நிறைந்து பசுமையாகக் காட்சி அளிக்கும்.  ஏரியில் மீன் பிடிப்பதும் மரங்களின் மீது ஏறி விளையாடு வதும் இப்போது நினைத்தாலும் இனிக்கிறது. அந்த ஏரியின் தோற்றமே மாறிவிட்டது. ஒரு கட்டத்தில் குடிநீரே உப்பாகிவிட்டது. கடந்த 10 வருடங்களாகத்தான் மேட்டூர் அணை தண்ணீர் வருகிறது. என் சிறு வயதில் தெருக்களில் லாந்தர் விளக்குகள்தான். வாத நாராயண மரங்களில் லாந்தரைத் தொங்கவிட்டு இருப்பார்கள். கால மாற்றத்தில் மின் விளக்குகள் வந்தன. ஆனாலும், ஊருக்கு அழகு கூட்டிய அந்த மரங்கள் இப்போது  இல்லை. எதையோ இழந்ததுபோல இருக்கிறது.  

என் ஊர் !

நெசவில் உழைப்பு அதிகம்; ஊதியம் குறைவு. அதனால், வாரம் ஒரு முறைதான் அரிசிச் சோறு. சிறுவர்களின் முகத்தைப் பார்த்தே, மற்ற வீட்டுப் பெரியவர்கள், 'என் னடா, இன்னைக்கி உங்கூட்டுல வெளிச்சமா?’ (அரிசிச் சோறா?) என்று கேட்பார்கள். இப்போது நிறைய விசைத் தறிகள் வந்து விட்டன.  

அப்போது எங்கள் ஊர்ப் பக்கம் கட்டடம் கட்டுவதற்கு சிமென்ட்டுக்குப் பதிலாக, சுண்ணாம்புடன் சில பொருட்களைச் செக்கில் போட்டு அரைப்பார்கள். அதன் பெயர் 'காரை’. எங்க ஊர்ப் பள்ளிக்கூடத்தைக் கட்டியபோது, மாணவர்கள்தான் காரை அரைத் தோம். ஊருக்குப் போய்ப் பள்ளியைப் பார்க்கும்போது எல்லாம், காரை அரைத்த காட்சி கண் முன் நிற்கும்!

என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தவர். காமத், கிருபளானி, அசோக் மேத்தா போன்ற சோஷலிஸ்ட் தலைவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து சென்றது நன்றாக நினைவில் இருக்கிறது. வீட்டில் எப்போதும் அரசியல் பேச்சுதான். போதாக்குறைக்கு, வீட்டின் எதிரில் உள்ள ஆல மரத்து அடியில் பாஞ்சாலி சபதம், வீர சிவாஜி என்று பெரியவர் கள் உணர்ச்சிகரமாகப் பேசுவார்கள்.

என் ஊர் !

ஊரில் ஒரு பக்கம் தி.மு.க, இன்னொரு பக்கம் ம.பொ.சி-யின் தமிழரசு கழகம் எனக் களை கட்டும். கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜகந்நாதன், அவ்வை துரை சாமி ஆகியோரின் சொற்பொழிவுகளும் நடக்கும். கூத்து, ஆட்டம், பாட்டம் இல்லாமல் சமூகத் தலைப்புகளில் பெரியவர்கள் பேசுவதைக் கேட்கவே ஊர் திரண்டு வரும்.

இப்போது, உணர்வுபூர்வமான அந்த நிலை மாறிவிட்டது. ஊரும் உருமாறிவிட்டது. ஆனாலும், என்னைப் போராட்ட அரசியலுக்குக் கொண்டு வந்தது, என் ஊர்தான் என்பதை மறுக்க முடியாது!''