Published:Updated:

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 4

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 4
பிரீமியம் ஸ்டோரி
News
செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 4

``நான் ஒரு ஷாப்பஹாலிக்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 4

‘அட்டகத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என லைக்ஸ் அண்ட் கிளாப்ஸ் அள்ளும் நந்திதா, தன் ஆடைத் தேர்வு பற்றி பகிர்ந்துகொண்டார் ஆர்வமாக!

‘‘எனக்கு புது டிரெஸ் போடுறது ரொம்பப் பிடிக்கும். அதனால, தேவை இருக்கோ இல்லையோ எடுத்துட்டேதான் இருப்பேன். ஷாப்பிங் போகும்போதுதான்னு இல்லை, சும்மா வெளிய போயிட்டு வரும்போதெல்லாம் ஏதாச்சும் ஒரு ஷாப்ல ஒரு டிரெஸ் பில் போட்டுட்டு வந்துடுவேன். அதுக்காக நான் ஃபாஸ்ட் ஷாப்பர்னு நினைச்சுடாதீங்க. பெரும்பாலான பெண்களைப்போல, 100 புடவைகள் பார்த்துட்டு, `101-வது புடவையை ஷெல்ஃப்ல இருந்து எடுங்க பார்க்கலாம்’னு அலுக்காம கேட்கிற கேரக்டர். 

நான் பெங்களூரில் இருக்கிறதால, பெரும்பாலும் அங்கதான் டிரெஸ் எடுப்பேன். `ஸாரா’ (Zara) உள்ளிட்ட சில கடைகள், என் ஷாப்பிங் லிஸ்ட்ல இருக்கும். அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங்கும் பண்ணுவேன். ஆனா, அங்க அதிகபட்சம் 2,000 ரூபாய்க்கு மேல டிரெஸ் வாங்கமாட்டேன். ஏன்னா, டெலிவரி வாங்குனதுக்கு அப்புறம் மெட்டீரியல் சரியில்லை, டிசைன் பிடிக்கலைன்னா வேஸ்ட் ஆகிடும். ரிட்டர்ன் பண்ண முடியும்தான் என்றாலும், அது ஒண்ணுக்கு ரெண்டு வேலை ஆகிடும். அதனாலதான் மினிமம் பட்ஜெட் மட்டும் ஃபிக்ஸ் பண்ணிப்பேன்.

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 4

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஷாப்பிங்ல நான் பிராண்ட் எல்லாம் பார்க்கிறது இல்லை. மெட்டீரியல், டிசைன், கலர்னு எல்லாம் பிடிச்சிருந்தா, யாருக்கு வேணும் பிராண்ட்?! அது பிளாட்ஃபார்மா இருந்தாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி!

என்னோட ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு காஸ்ட்யூம் டிசைனர், ஸ்டைலிஸ்ட் எனக்கு வொர்க் பண்ணுவாங்க. பெர்சனலா எனக்குன்னு ஒரு காஸ்ட்யூம் டிசைனரும் இருக்காங்க. என்னதான் அவங்க டிசைன் பண்ணினாலும், எனக்குப் பொருத்தமா இருந்தாதான் அதை நான் போட்டுப்பேன். அழகா இருக்கு என்பதைவிட, அந்த ஆடை நமக்கு அழகா இருக்குனு மனசுக்கு கன்வின்ஸ் ஆகி உடுத்தினாதான், அதில் கான்ஃபிடன்டா நம்மை பிரசன்ட் செய்துக்க முடியும்.

ஃபேஷன்ல இப்போ முன்னைவிட என்னை க்ளோஸா அப்டேட் பண்ணிக்க நினைக்கிறேன். நானே டிசைனிங் எல்லாம்கூட செய்ய ஆரம்பிச்சுட்டேன். போன வருஷம் ‘சைமா’ விருது விழாவில் நான் போட்டிருந்த லெஹங்கா டைப் டிரெஸ், நான் டிசைன் செய்ததுதான். எல்லாரும் ‘சூப்பர்!’னு பாராட்டினாங்க. அதுதான் என்னோட ஃபேவரைட் டிரெஸ்ஸும்கூட.

சின்ன வயசுல ஒருமுறை ஷாப்பிங் போயிருந்தப்போ, வெல்வெட் மெட்டீரியல்ல ஒரு மிடி எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்பாகிட்ட கேட்டேன். ‘இது உனக்கு நல்லா இருக்காது’னு சொல்லி ஒரு ஃபிராக் வாங்கிக்கொடுத்து கூட்டிட்டு வந்துட்டாங்க. இப்பவரைக்கும் அந்த மிடி மேல எனக்கு ஏக்கம் போகல. அதனால, குழந்தைகளுக்கோ, உங்களுக்கோ... ஒரு டிரெஸ் ரொம்பப் பிடிச்சிருந்தா தயங்காம எடுத்துடுங்க. இல்லைன்னா சில நூறு, ஆயிரங்களுக்காக அந்த ஏக்கத்தை ரொம்ப நாள் சுமக்க வேண்டியிருக்கும்.

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 4

ஜீன்ஸ்லதான் நான் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணுவேன். இருந்தாலும், புடவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். பெரும்பாலும் எல்லாம் தாவணி, புடவை விளம்பரங்கள்தான். ஆயிரக்கணக்கில் புடவைகள் கட்டி ஷூட் போயிருப்பேன். ஆனாலும், எனக்குப் புடவை ஆசை இன்னும் அலுக்கல. என்னோட ஒவ்வொரு ஷாப்பிங்கிலும், நிச்சயமா ஒரு டாப் வாங்கிடுவேன். அந்தளவுக்கு நான் ஒரு ஷாப்பஹாலிக். என் வார்ட்ரோப்பை திறந்தா, முக்கால்வாசி டாப்ஸாதான் இருக்கும்.

சினிமாவில் எனக்கு ஓவர் ஹோம்லி ரோல்ஸ்தான் கொடுக்கிறாங்க. ஆனா, ரியல் லைஃபில் நாம் ரொம்ப ட்ரெண்டியா டிரெஸ் பண்ணிப்பேன். இருந்தாலும், இப்போ ஏதாச்சும் பப்ளிக் ஃபங்ஷன்ஸுக்குப் போகும் போது, என்னோட இமேஜுக்கு மரியாதை கொடுத்து, ஓவர் ஃபிரீக்கியா இல்லாம கொஞ்சம் இண்டோ - வெஸ்டர்ன் டிரெஸ்தான் அணியறேன். பொதுவா, ஹோம்லியா இருக்கிற பொண்ணுங்களும் சினிமாவுக்கு வந்ததும் ட்ரெண்டி ஆகிடுவாங்க. ஆனா, நான் ஸ்க்ரீன்ல வந்ததுக்கு அப்புறம் ரொம்பவே ஹோம்லி ஆகிட்டேன்னு நினைக்கிறேன். இருந்தாலும், இது எனக்குப் பிடிச்சிருக்கு. ஏன்னா, ரசிகர்களுக்கு ‘பக்கத்து வீட்டுப் பொண்ணு’ லுக் கொடுக்கிற நெருக்கத்தை, எந்த ஃபேஷனாலயும் கொடுக்க முடியாது.

சிலருடைய உடல் வாகுக்கு, ட்ரெடிஷனல், ட்ரெண்டினு ரெண்டுமே செட் ஆகும். நான் அப்படித்தான்னு நினைக்கிறேன். உங்க உடல்வாகுக்கு ஏற்ற டிரெஸ்ஸை சரியா தேர்ந்தெடுத்துப்போட்டா, உங்க மிரர் சொல்லும்... யூ ஆர் ஸோ பியூட்டிஃபுல்!’’

சு.சூர்யா கோமதி

சோலோ ஷாப்பிங் சலோ!

தனியாதான் ஷாப்பிங் போகணும் என்பது என் பாலிசி. ஏன்னா, பேரன்ட்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு கூட யாரையாச்சும் கூட்டிட்டுப்போனா, கடுப்பாகி, ‘எவ்ளோ நேரமாச்சு தெரியுமா? சீக்கிரம் எதையாச்சும் செலக்ட் பண்ணு’னு அவங்க அவசரத்துக்கு நம்மளை கட்டாயப்படுத்தி ஒரு டிரெஸ்ஸை பிடிச்சும் பிடிக்காம செலக்ட் பண்ண வெச்சிடுவாங்க. ஸோ, ஷாப்பிங்குக்கு எப்பவும் நான் சோலோவாதான் போவேன். ஜவுளிக்கடையில் அதிக நேரம் எடுத்துக்கற பெண்கள் எல்லாருமே, இந்த வழியைப் பின்பற்றலாம். கணவர், தோழினு துணைக்குக் கூப்பிடுற பிசினஸே வேண்டாம். சொல்றது சரிதானே?!

தீபிகா... ப்ரியங்கா... நந்தினி!

எனக்கு தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா டிரெஸ்ஸிங் ஸ்டைல்ஸ் பிடிக்கும். அதே பேட்டர்ன்ல எனக்கு ட்ரை பண்ணிப் பார்ப்பேன். டிரெஸ் மட்டுமில்லாம அதுக்கு மேட்சிங்கான ஹேர்ஸ்டைல், ஆக்சஸரீஸ் வரை அவங்களை ஃபாலோ பண்ணுவேன்.