Published:Updated:

டக்கர் டக்காஸ் அல்வா !

டக்கர் டக்காஸ் அல்வா !

திருநெல்வேலி 'இருட்டுக் கடை அல்வா’ எல்லோருக்கும் தெரியும். ராமநாதபுரம் 'டக்காஸ் கடை அல்வா’ தெரியுமா? ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மக்களுக்குப் பொழுது சாய்ந்தால் டக்காஸ் கடை அல்வாவை ஒரு துண்டாவது உள்ளே இறக்கினால்தான் தூக்கம் வரும். டக்காஸ் அங்கே அவ்வளவு ஃபேமஸ். ''அதென்னங்க 'டக்காஸ்?’ '' என்று கடை முதலாளி சையது அகமதுவிடம் கேட்டோம்.

டக்கர் டக்காஸ் அல்வா !
##~##

''அதெல்லாம் இல்லத்தா... தொண்டியில, 'தாய்லான் கடை, கொம்புக்கடா ஜவுளிக் கடை, ஓட்டைப் பல்லு மளிகைக் கடை, சீனி வாப்பா பலசரக்கு’னு வித்தியாசமான பெயர்கள்ல கடைகள் இருக்கு. சீனி அதிகமா விற்கிறதால சீனி வாப்பா கடைனு பேரு ஆச்சு. இங்க கறிக் கடை வெச்சிருக்கிற ஒருத்தருக்கு ஓவரா கோவம் வரும். அதனால அவரு கடையை 'மூலம் கறிக்கடை’னுதான் இப்ப வரைக்கும் சொல்றாங்க. அது மாதிரி இதுவும் 'டக்காஸ் அல்வா கடை’னு அந்தக் காலத்துல எப்படியோ பேராகிருச்சு. இதுக்கு ஹிஸ்ட்ரிலாம் தெரியாது. கிட்டத்தட்ட 65 வருஷமா நாங்க இந்தத் தொழில்ல இருக்கோம். எனக்கு முந்தி எங்க வாப்பா சாகுல் ஹமீது இந்தக் கடையை ஆரம்பிச்சி நடத்துனாங்க. அவங்ககிட்ட இருந்து தொழில் ஃபார்முலா வைக் கத்துக்கிட்டு, கடந்த 35 வருஷமா நான் அல்வா கிண்டுறேன்'' என்கிறார் அல்வா பாய். கிழக்குக் கடற்கரைச் சாலையின் விளிம்பில் இருப்பதால், மாலை நேரங்களில் அல்வா வாங்குவதற்கு இங்கே கூட்டம் குவிகின்றது. உள்ளூர், வெளியூர் மட்டும் இல்லாமல் சிலோன், சிங்கப்பூர் அரபு நாடு களிலும் டக்காஸ் கடை அல்வாவுக்கு மனதைப் பறிகொடுத்தவர்கள் ஏராளம். இங்கு இருந்து யாராவது வெளிநாடுகளுக்குக் கிளம்பினால், ''வரும்போது மறக்காம டக்காஸ் கடையில ரெண்டு கிலோ அல்வா!'' என்று ஆர்டர் போடாமல் இருக்க மாட்டார்கள்.

டக்கர் டக்காஸ் அல்வா !

''மொதல்ல சாதா அல்வா மட்டும்தான் கிண்டிட்டு இருந்தோம். இப்ப முந்திரி அல்வா, தேங்காய்ப் பால் அல்வா, தொதல் எல்லாம் தயார் பண்றோம். அல்வா மட்டும் இல்லை, நாங்க போடுற ஆயில் இல்லாத மிக்சரும் இஞ்சி ப்ளைன் டீயும் தொண்டியில ரொம்ப ஃபேமஸ். அன்னன்னைக்குப் போடுற சரக்கு அன்னன்னைக்கே வித்துத் தீர்ந்துரும். சில நேரங்கள்ல ராத்திரி 7 மணிக்கெல்லாம் சரக்கு இருக்காது. அதுக் காக காசுக்கு ஆசைப்பட்டு ஒருக்காலும் நாங்க கூடுதலா சரக்குப் போடுறது இல்லை. காலையில 8 மணிக்கு ஆரம்பிச்சா, மதியம் 2 மணிக்குள்ளே எல்லா வகை அல்வாவை யும் கிண்டி முடிச்சிருவோம். அப்புறம் சுடச் சுட சேல்ஸ் ஆரம்பிச்சிரும். சாயந்தரம் 6 மணியில் இருந்து ராத்திரி 8 மணி வரைக் கும் நிமிர முடியாத அளவுக்குக் கூட்டம் கட்டி ஏறும்.  

டக்கர் டக்காஸ் அல்வா !

வி.ஐ.பி-க்கள் பல பேரு இந்த வழியா போறப்ப ரோட்டோரமா காரை நிறுத்திட்டு வந்து அல்வாவும் மிக்சரும் சாப்பிட்டுட்டு இஞ்சி டீ குடிச்சிட்டுப் போவாங்க. என்னதான் கவனமா கிண்டுனாலும் சில நேரங்கள்ல அல்வா இறுகிப்போய், கல்லாகிடும். அதை வியாபாரத்துக்கு வெச்சா பேரு கெட்டுப் போகும். அதனால யோசிக்காம கீழே கொட்டிருவோம். அதனாலதான் இத்தனை வருஷம் ஆகியும் மார்க்கெட்ல எங்க அல்வாவுக்கு ஒரு மவுசு இருக்கு'' என்று சரக்கின் பெருமை சொல்லும் சையது அகமது, ''என்னோட பசங்க படிப்புல பிஸி ஆகிட்டாங்க. ரெண்டு தலைமுறையா எங்க குடும்பத்தைத் தாங்கிப் பிடிச்சிட்டு இருக் கிற இந்த டக்காஸ் கடை பெருமையை எனக் குப் பின்னாடி யாரு காப்பாத்தப் போறாங் களோ?'' என்று கவலைப்படுகிறார்!

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

அடுத்த கட்டுரைக்கு