Published:Updated:

வில்லிசை வெல்லும் !

வில்லிசை வெல்லும் !

வில்லிசை வெல்லும் !

வில்லிசை வெல்லும் !

Published:Updated:

''விளையாட்டாக ஆரம்பித்தது நல் வினையாக முடிந்தது''- தாளம் போட்டுப் பாடுகிறார் புதுவையைச் சேர்ந்த பட்டாபிராமன். தமிழாசிரியரான இவர் விளையாட்டாக வில்லுப்பாட்டு பாட ஆரம்பித்து, 46 ஆண்டுகளாக அதைத் தொடர்கிறார்.

வில்லிசை வெல்லும் !
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ராஜராஜ சோழன் காலத்தில்தான் வில்லுப் பாட்டு தோன்றியது என்கிறார்கள். வேட்டையாடிக் களைத்த வேடர்கள், மரத்தடியில் ஓய்வெடுத்தபோது, தலைகீழாக இருந்த தங்கள் வில்லைத் தட்டிப் பார்த்தார்களாம். அப்போது அந்த வில்லில் இருந்து இன்னிசை எழுந்ததாம்.  பிறகு பம்பை, உடுக்கை, தாளம் என்று பக்கவாத்தியங்களுடன் வில்லுப் பாட்டைப் பாட ஆரம்பிச்சாங்க. ஒரு கொலைக் கருவியைக்கூட இசைக் கருவியா மாத்தியது தமிழனின் சாதனை!'' என்பவர், தான் வில்லுப்பாட்டு பாட ஆரம்பித்த கதையைச் சொன்னார்.

''1965-ல் நான் தமிழாசிரியர். கடலூர் டவுன் ஹாலில் அறிஞர் அண்ணா தலைமையில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், வில்லுப் பாட்டு நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியை விளையாட்டாகப் பார்க்க வந்த எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து பார்த்துதான் கத்துக்கிட்டேன். எனக்கு வில்லுப்பாட்டுல குருனு யாரும் இல்லை. ஆனா, என் இசை ஞானத்தை வளத்த குரு என் அம்மாதான். சின்ன வயசுல இருந்தே வள்ளலார் பாடல்களை இசையோடு பாடுவாங்க. அந்த ஞானம்தான் எனக்கு வில்லுப்பாட்டில் உதவியது.

1966-ம் ஆண்டு 'வள்ளுவர் பெருமை’ என்ற தலைப்பில் வில்லியனூர் பெரிய கோயில்ல என்னோட முதல் அரங்கேற்றம் நடந்தது. அப்புறம் சுகாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல்னு பல துறை களில் மக்களிடம் விழிப்பு உணர்வு எற்படுத்த வில்லுப்பாட்டைப் பயன் படுத்தினேன். 70-களில் குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. நான் வில்லுப்பாட்டு மூலம் மக்களுக்கு  அதன் முக்கியத்துவத்தை எடுத்து  உரைத்தேன். இன்று வரை சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடைகளில் வில்லுப்பாட்டை அரங்கேற்றி உள்ளேன்.

வில்லிசை வெல்லும் !

வில்லுப்பாட்டு முலம் எந்த ஒரு கருத்தையும் மக்களிடம் சுலபமா எடுத்துச் செல்லலாம். இசையுடன் கூடிய பேச்சும் நகைச்சுவையும் இருந் தால் இதைச் சாதிக்கலாம். அதனால் தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு மாதிரி யான விஷயங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு வில்லுப்பாட் டைப் பயன்படுத்தினார். வில்லுப்பாட்டு பாடுறதுக்கு மொழிப் புலமையும் இசை ஞானமும் தாளக்கட்டுகள் பற்றிய அறிவும் வேண்டும்.

தெருக்கூத்து, தோல்பாவைக் கூத்து, பொய்க்கால் குதிரை மாதிரியான கலைகள் அழிஞ்சு வருவதைப்போல வில்லுப்பாட் டையும் நாம மறந்துட்டோம். இளைஞர்கள் வில்லுப்பாட்டைக் கத்துக்கத் தயாரா இருந்தால் நான் இலவசமாவே கத்துத் தர்றேன்!'' என்கிறார் பாட்டு மன்னர் பட்டாபிராமன்.

ஆ.நந்தகுமார்
படங்கள்: ஜெ.முருகன்