Published:Updated:

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

Published:Updated:

''ஒரு கலைஞனுக்குத் தேடல் இருக்கும் வரைதான் அவனால் அவனது கலைப் பயணத்தைக் கடைசி வரை தொடரமுடியும்!'' என்று சொல்லும் மார்க்கண்டேயனின் வார்த்தைகளுக்கு அவரே உதாரணம்.    டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுடுமண் சிற்பத்திலும் கிரானைட்டிலும் 3டி  சிலைகள் செய்து அசத்துகிறார் புதுவை பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாலை நேர நுண்கலைப் பயிற்சி ஆசிரியராகப் பணி புரியும் மார்க்கண்டேயன். 

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் அம்மா வரையும் கோலங்களைப் பார்த்துதான் எனக்கு ஓவியத்தின் மேல்   ஆர்வம் வந்தது. அதேபோல கோலம் போடுவதும், பேப்பரில் வரைந்து பார்ப்பதுமாக ஓவிய ஆர்வம் வளர்ந்தது.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் சேர முடிவு செய்தேன். ஆனால், அப்போது எல்லாம் அந்தக் கல்லூரியில் ஒரு வருடத்தில் 30 மாணவர்கள்தான் சேர முடியும். அதற்குக் குறைந்தது 500 விண்ணப்பங் களாவது குவியும். அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

சிலைகள் செய்வதிலும் ஆர்வம் அதிகம் எனக்கு. ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு என் வீட்டுக்குத் தேவையான விநாயகர் சிலையை நானேதான் செய்வேன். வீட்டிலேயே சிலைகள் செய்ய  ஒரு சின்ன கலைக்கூடத்தை அமைத்தேன்.   சிமென்ட் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் மோல்டு எடுக்க நிறைய செலவாகும். அதனால்  அனைத்து சிலைகளையும் டெரகோட்டாவி லேயே செய்ய முடிவு எடுத்தேன்.

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

மண் பானையை எப்படி நெருப்பில் சுடுகிறார் கள் என்பதை அருகில் இருந்து பார்த்து, அந்த முறையிலேயே நானும் வீட்டில் சிலைகளை நெருப்பில் சுட ஆரம்பித்தேன்!'' என்று சொல்லும் இவரின் படைப்புகள் பெரும்பாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்மையைப் போற்றுதல், வன விலங்குகளைக் காத்தல் ஆகியவற்றையே அதிகம் வலியுறுத்துகின்றன.  

''பொதுவாக, எந்த ஒரு ஓவியத்திலும் ஒரு பக்கம் மட்டுமே பார்க்க முடியும். அந்த ஓவியத்தின் பின் பக்கத்தை நாம் கற்பனை மட்டும்தான் செய்ய முடியும். அதை மாற்றத்தான் முப்பரிமாண சிலைகள் செய்யத் தொடங்கினேன். பிறகு முன் பக்கம் ஒரு வடிவம், பின் பக்கம் ஒரு வடிவம் என செய்யத் தொடங்கினேன். ஒரே சிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்து களைச் சொல்ல அது வசதியாக இருந்ததால் இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

கண்காட்சிகளில் டெரகோட்டா சிற்பங் களைப் பாதுகாப்பது மிகவும் சிரமம் என்பதால், கிரானைட்டில் 3டி சிலைகளைச் செய்ய ஆரம்பித்தேன்'' என்கிறார்.

ஆடு தன் வயிற்றில் உள்ள குட்டியை வாஞ்சையாகப் பார்ப்பது, ஒரு தாய் ஒரு மார் பில் குழந்தைக்கும் மறு மார்பில் ஆட்டுக் குட்டிக்கும் பால் கொடுத்து, விலங்குகளை நேசிக்கச் சொல்வது என விதவிதமான பரிமா ணங்களில் வித்தியாசமான கருத்துகளைச் சொல் கின்றன இந்த முப்பரிமாணச் சிலைகள். அப்துல் கலாமும் ஒரு சிறுவனும் இருக்கும் சிலை கவர, ''என்ன இது?'' என்று கேட்டேன்.

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

''அப்துல் கலாம் எங்கு போனாலும் மாணவர் களைச் சந்தித்து உரையாடுவது வழக்கம். ஆனால், அதில் கலந்துகொள்ளும் பெரும் பாலான மாணவர்கள் நகர்ப்புறத்தில் வசிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள்தான். 'எங்களோ டும் உரையாடுங்கள்’ என்று ஒரு கிராமத்துச் சிறுவன் சொல்வதாக இந்தச் சிலையை உரு வாக்கி இருக்கிறேன்!'' என்றார் மார்க்கண்டேயன்.

உண்மையில் இது வேறு பரிமாணம்தான்!  

- ஜெ.முருகன்