கடந்த ஆண்டின் நவம்பர்-டிசம்பர் மாதங்களில், தமிழகத்தை நிலைகுலைய வைத்தது மழை வெள்ளப் பேரழிவு. இதுபோன்று எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் நீர்நிலைகளைக் காக்கும் முயற்சியாக, வாசன் அறக்கட்டளை மூலமாக ‘நிலம்... நீர்... நீதி’ என்கிற இயக்கத்தை முன்னெடுத்துள்ளது விகடன்.

இதன் ஒரு கட்டமாக நீர்நிலைகள் பற்றிய ஆய்வு, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகள் என, பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. இந்த வரிசையில், சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் ‘மக்கள் கருத்துப் பகிர்வுக் கூட்ட’த்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய சுற்றுச் சூழலியலாளர்கள் அமைப்பு (EFI), லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் கைகோத்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் பேசிய லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை இன்னாசிமுத்து, “ `டைம்ஸ்' பத்திரிகை, சில ஆண்டு களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில், `மூன்றாம் உலகப்போர் தண்ணீரால்தான் உருவாகும்’ எனக் கூறப்பட்டிருந்தது. அவ்வப்போது பெய்யும் மழையைக்கூடச் சேர்த்துவைக்க முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது போன்ற நிகழ்ச்சிகள், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நிச்சயம் ஒரு வழித்துணையாக அமையும். அதுவும் விகடன் குழுமம் இதுபோன்ற பணிகளை கையில் எடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது. அதில் அவர்களோடு லயோலா கல்லூரியும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த இ.எஃப்.ஐ அமைப்பின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி, “இந்த ஆண்டின் தட்பவெப்ப நிலை, கடந்த ஆண்டுகளைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. அதைப் பற்றி நாம் அக்கறை இல்லாமல் இருக்கிறோம். இங்கு, இப்போது இருக்கும் கூட்டத்தினரில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மிகவும் குறைவு. நீர்நிலைகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சமுதாயப் பொறுப்புஉணர்ச்சி நம்மில் அனைவரிடமும் இருக்க வேண்டும். இவை அனைத்தைப் பற்றியும் பேசி, உங்களுடைய சிந்தனைகளை ஒருங்கிணைக்கவே இந்தக் கருத்துப் பகிர்வுக் கூட்டம். இங்கே சிறுதுளியாகக் கூடியிருப்பவர்களே நாளை பெருவெள்ளமாக மாறப்போகிறோம்” என்று சொல்லி உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், வெள்ள காலத்தில் தத்தமது பகுதியில் ஏற்பட்ட பிரச்னைகளை படங்களுடன் எடுத்துவைத்ததோடு, ‘நிலம்... நீர்... நீதி’ பணிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதாகவும் உறுதியளித்தனர். அவர்களில் சிலர், நீர்நிலைகள் தொடர்பான பணிகளை எப்படிச் செய்யலாம் என்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கினர்.

லேசாக மழை பெய்தாலே பாதிப்புக்கு உள்ளாகிவிடும் பகுதியான பள்ளிக்கரணையில் இருந்து வந்திருந்த பாலமுருகன், ``நீர்நிலைகள் குறித்த விழிப்புஉணர்வுக் கூட்டங்களை 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும், அவர்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டும். இந்த வயது மாணவர்களிடம் இதுபோன்ற விஷயங்கள் சென்றடைந்தால்தான், நீர்நிலைகளுக்கான பாதுகாப்பு எதிர் காலத்தில் பெரும் அளவில் கவனம் பெறும்’’ என்றார்.

சிறுமழைக்கே மூழ்கிப்போகும் மற்றொரு பகுதியான வேளச்சேரியைச் சேர்ந்த கோகிலாம்பாள், ``மழை வெள்ளத்தின் போது, ஐ.டி நிறுவனங்கள் பலவும் பெரும்பாதிப்புகளுக்கு உள்ளாகின. இத்தகைய நிறுவனங்கள் எல்லாம் ஆலோசனைரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தங்கள் பங்கை அளிக்கத் தயாராகயிருக்கிறார்கள். அவர்களை, இந்தத் தருணத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் ஆசிரியராகப் பணிசெய்யும் பள்ளியின் மாணவர்களையும் நீர்நிலைகள் மீட்புப்பணியில் இணைத்துக்கொள்ளத் தயாராகயிருக்கிறேன்’’ என்றார்.

`நிலம்... நீர்... நீதி’ இயக்கத்தின் அடுத்தடுத்தக்கட்டப் பணிகள் குறித்த தகவல்கள், அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.