இவற்றைப் பார்த்ததுமே, `ஹாய்... வணக்கம். சூப்பர்' என்பது புரிந்துவிடும். இதுதான் இன்றைய ட்ரெண்டிங் ஸ்டைல்.

`என் ஹார்ட்ல நீதான் இருக்க டார்லிங்...' என்பதில் தொடங்கி, `முடியல... அழுதுருவேன்... எஸ்கேப்' என்பது வரை அனைத்தையும் எமோஜிக்களிலேயே சொல்கிறார்கள் முட்டிக்கு மேல் பேன்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள்போல எல்லா சோஷியல் மீடியாவிலும் மொபைல் போன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி, எப்போது... எங்கே பிறந்தது தெரியுமா?

1998-ம் ஆண்டில் ஜப்பான் `என்டிடி டொகொமோ' என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார்சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடாகா குரிடா என்பவரின் மூலையில் அடித்த ஸ்பார்க்தான் இன்று எல்லா மொபைல் களிலும் மின்னுகிறது. ஜப்பான் கலாசாரத்தில் படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். அவர்களின் எழுத்துருவே சித்திரங்கள்தான். `இன்று கனமழை பெய்யும்' என, ஜப்பான் நாட்டு ரமணன் சொல்ல மாட்டார்; ஒரு குடை போட்டு அதன் மேல் லிட்டர்கணக்கில் நீர் ஊற்றுவதுபோல் காட்டுவார். அந்த லிட்டரின் அளவைவைத்தே மழையின் அளவை மக்கள் புரிந்துகொள்வார்கள். `இது ரொம்ப ஈஸியா இருக்கே...' என நினைத்த ஷிகேடாகா, பல விஷயங்களுக்குப் படங்களையே பயன்படுத்த நினைத்தார். ஆனால், அன்றைய டெக்னாலஜிப்படி அதிக சைஸில் படங்களை அனுப்புவது சாத்தியம் இல்லை. அதற்காக அவர் யோசித்து உருவாக்கியதுதான் `எமோஜி'.

முதல் கட்டமாக, மக்கள் அன்றாடம் வெளிப்படுத்தும் உணர்வுகளைப் பட்டியலிட்டார் ஷிகேடிகா. அதில் இருந்து 180 விஷயங்களைத் தேர்வுசெய்து அதற்கு எமோஜிக்களை உருவாக்கினார். அங்கு இருந்து ‘படிப்படியாக’ மெருகேறி இன்றைய எமோஜிக்களாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இன்று ஆப்பிள் நிறுவனம் முதல், ஒவ்வொரு மொபைல் தயாரிப்பு நிறுவனமும் பிரத்யேகமாக பல எமோஜி கீ-போர்டுகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால், விதை ஷிகேடாகா குரிடா போட்டது.

எமோஜிக்களுக்கு பாட்டன் ஒருத்தன் இருக்கிறார் தெரியுமா? அதன் பெயர் எமோட்டிக்கான். எமோட் + ஐகான் என்பதுதான் எமோட்டிக்கான். இதில் நம் கீபோர்டில் இருக்கும் சிறப்பு கேரக்டர்களைவைத்தே நமது எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்தலாம்.

:) என்றால் சிரிப்பு, :( என்றால் சோகம்... இதுபோல குறிப்பிட்ட சில உணர்ச்சிகளை மட்டும் எமோடிக்கானில் கொண்டுவரலாம். எமோட்டிக்கான் என்பது டைப்ரைட்டர் என்றால், எமோஜிக்கள் சூப்பர் கம்ப்யூட்டர்.
எமோஜிக்களுக்கு மொழி கிடையாது என்பதுதான் அதன் சிறப்பு. இந்த

எமோஜி வெளிப்படுத்தும் உணர்வை, உலகின் எந்த நாட்டுக்காரரும் எந்த மொழி பேசுபவரும் புரிந்துகொள்ள முடியும். சொற்களே இல்லாமல், வெறும் எமோஜிக்களை மட்டுமே வைத்து எழுதப்படும் கவிதைகள் இன்று ஏராளம். http://emojipoems.tumblr.com என்ற தளத்தில் எமோஜி கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம், மன்னிக்க... டைப்பலாம்.

ஒரு விஷயம் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது என்றால், முதலில் அரிப்பது ஹாலிவுட் காரர்கள் மூக்குதான். இதோ, எமோஜியை வைத்து சோனி பிக்சர்ஸ் ஒரு சினிமாவைத் தயாரிக்கிறது.

இன்றைய இளைஞர்கள், கேர்ள் ஃப்ரெண்டைவிட அதிக நேரத்தை எடுத்துக்கொள்வது வாட்ஸ்அப்-க்குதான். அதில் ஃபார்வர்டு ஆகும் ஒன்றுதான் `எமோஜி க்விஸ்'. இந்த எமோஜிக்கள், தமிழ் சினிமா பெயர்களைக் குறிக்கின்றன. முடிந்தால் கண்டுபிடியுங்கள்!

எமோஜி ஜோசியம்:

கிளி ஜோசியம், எலி ஜோசியம் எல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன். நீங்கள் கடைசியாக உபயோகித்த எமோஜியைச் சொன்னால், இப்போது உங்களின் மனநிலை என்னவெனச் சொல்கின்றன பல ‘ஆப்’கள். நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் எமோஜிக்களை வைத்து உங்கள் கேரக்டரையும் சொல்கிறார்கள். `உனக்குப் பிடிச்ச எமோஜியைச் சொல்லு. உன்னைப் பற்றி சொல்கிறேன்' என்பதுதான் இன்றைய புதுமொழி.